Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இங்கிலாந்து பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » இங்கிலாந்து பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி

sainanehwalloss-600x343இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால், 6-ம் நிலை வீரரரான ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரின்-ஐ எதிர்கொண்டார்.முதல் செட்டை இந்திய வீராங்கனை சாய்னா 21-16 என எளிதில் வென்றார். இதனால் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் கரோலினா ஆக்ரோஷசமாக வினையாடினார். இதற்கு இந்தய வீராங்கனை சாய்னாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் சாய்னா 14-21 என இரண்டாவது செட்டை இழந்தார்.
இதனால் 3-வது மற்றும் கடைசி செட்டை கைப்பற்றி பட்டத்தை வெல்ல இருவரும் ஆக்ரோஷசமாக விளையாடினார்கள். ஆனால், சாய்னாவால் கரோலினா வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் கரோலினா மரின் 21-7 என 3-வது செட்டை வென்று 16-21, 21-14, 21-7 என சாய்னாவை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com