இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுப்பதற்காக சச்சின் டெண்டுல்கரை கடத்தப் போவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்ட டேவிட் கேம்ரூன், தான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இந்தியாவின் வளர்ச்சியையும், ஆற்றல் வளத்தையும் கண்டு அசந்து போவதாக குறிப்பிட்டார். கிரிக்கெட் மூலம் இந்தியாவும் இங்கிலாந்தும் அன்பை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் கேமரூன் கூறினார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் குறித்து பேசிய அவர், இங்கிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் பயிற்சி அவசியம் என்று குறிப்பிட்டார்.
இதற்காக சச்சினை கடத்தப்போவதாக டேவிட் கேமரூன் நகைச்சுவையாகக் கூறியதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.