Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – ஆஸ்திரேலியா தோல்வி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » ஆஸ்திரேலியா – இங்கிலாந்து 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – ஆஸ்திரேலியா தோல்வி

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – ஆஸ்திரேலியா தோல்வி

ENGLAND-AUSTRALIA-CRICKET-ENG-AUS-AFP_15W7Y5ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜாசன் ராயின் (120 ரன்) சதத்தின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து களம் இறங்கிய உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில் 304 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஷான் மார்ஷ் சதம் (131 ரன்) விளாசியும் பலன் இல்லை.இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் கடைசியாக சந்தித்த 8 ஆட்டங்களில் 7-ல் இங்கிலாந்து வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com