ஆந்திராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிரிக்கெட் மைதானங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.
வீரர்கள் பயிற்சி பெற வசதியாக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மைதானங்கள் ஆந்திர கிரிக்கெட் சங்கம் மற்றும் கிருஷ்ணா மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கட்டப்பட்டன. இந்த மைதானங்களை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
அப்போது வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அனுராக், இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கிரிக்கெட் மைதானங்களை சீரமைக்க உள்ளதாகக் கூறினார். மைதானங்களில் எல்இடி பல்புகள், சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.