Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ;பாகிஸ்தானுக்கு எதிரான 7-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு » ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ;பாகிஸ்தானுக்கு எதிரான 7-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ;பாகிஸ்தானுக்கு எதிரான 7-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

15indiawomenஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 6 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். 2 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com