Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் – இந்தியா சாம்பியன் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு » ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் – இந்தியா சாம்பியன்

ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் – இந்தியா சாம்பியன்

2329976 நாடுகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றன. இதில் 6 லீக் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com