Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: ஜூவாலா-அஸ்வினி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: » ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: ஜூவாலா-அஸ்வினி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: ஜூவாலா-அஸ்வினி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

guttaponnappa0403ஆல்-இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 21-12, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் அமெலி அலிசியா- பிய் சோ சூங் இணையை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ஆண்கள் இரட்டையரில் மானு அட்ரி-சுமீத் ரெட்டி தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர். அதே சமயம் ஆண்கள் ஒற்றையரில் இந்திய முன்னணி வீரர் காஷ்யப் 13-21, 12-21 என்ற நேர் செட்டில் சீனத்தைபேயின் டைன் சென்னிடம் வீழ்ந்தார். .

Facebook Auto Publish Powered By : XYZScripts.com