Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அன்னையர் தினத்தில் மகன் தாயாகி அடைந்த நெகிழ்ச்சி. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு » அன்னையர் தினத்தில் மகன் தாயாகி அடைந்த நெகிழ்ச்சி.

அன்னையர் தினத்தில் மகன் தாயாகி அடைந்த நெகிழ்ச்சி.

kohliநடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, உலக அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வீடியோ பதிவில், எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அன்பு செலுத்துவது இவ்வுலகில் தாய் மட்டுமே. எனவே நாம் அனைவரும் கூட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா மீது அன்பு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடவுள் நமக்கு தந்த மிகப்பெரிய பரிசு அம்மா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த அன்னையர் தினத்தை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். நடப்பு ஐபில் கிரிக்கெட்டில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள விராட்கோலி 2 சதங்களுடன், 541 ரன்கள் எடுத்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com