Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அகில இந்திய ஆக்கி போட்டி: சென்னை, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு » அகில இந்திய ஆக்கி போட்டி: சென்னை, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி

அகில இந்திய ஆக்கி போட்டி: சென்னை, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி

 

KOVILஅகில இந்திய ஆக்கி போட்டியில் சென்னை, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

மும்பை அணி வெற்றி

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 8–ம் ஆண்டு அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 19–ந்தேதி தொடங்கியது. 8–ம் நாளான நேற்று நடந்த முதலாவது கால் இறுதி போட்டியில் மும்பை ஆர்.சி.எப். அணியும், பெங்களூரு ஆக்கி அணியும் மோதின. ஆட்டத்தின் 23–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மும்பை அணி வீரர் விஜய் தபா முதலாவது கோலை அடித்தார். பின்னர் அதே அணியின் வீரர் சாய்பாத் சாயித் 41–வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 61–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு அணி வீரர் நவீன்குமார் கோல் அடித்தார். பின்னர் பெங்களூரு அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆனால் மும்பை அணி வீரர்கள் சிறப்பாக தடுப்பாட்டம் விளையாடினர். ஆட்ட நேர முடிவில் மும்பை ஆர்.சி.எப். அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

சென்னை அணி வெற்றி

2–வது போட்டியில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு ஆக்கி அணியும் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 54–வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கர்மான் பிரீத்சிங் பீல்டு கோல் அடித்து, தனது அணியை முன்னிலை பெற வைத்தார். பின்னர் கோவில்பட்டி அணி வீரர்கள் பதில் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆனாலும் சென்னை அணி வீரர்கள் நேர்த்தியாக தடுப்பாட்டம் விளையாடினர். ஆட்ட நேர முடிவில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரை இறுதிக்குள் நுழைந்தது.

இன்றைய ஆட்டம்

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி போட்டியில் கபுர்தலா ஆர்.சி.எப். அணியும், ஜலந்தர் சிக்னல்ஸ் அணியும் மோதுகின்றன. மாலை 4 மணிக்கு நடைபெறும் கால் இறுதி போட்டியில் பெங்களூரு பி.சி.டி.சி. அணியும், ஒடிசா கிழக்கு கடற்கரை ரெயில்வே அணியும் மோதுகின்றன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com