 |
|
நேற்றிரவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை 30 ஆட்டோக்கள் மற்றும் 3 யுனோவா காரில் வந்த மர்மக்கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது. இதில் மூன்று கார், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கம்யூட்டர்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஹோட்டலின் உரிமையாளர் வினோஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹோட்டலை சாதிக் என்பவர் தலைமையில் வந்த கும்பல்தான் அடித்து நொறுக்கியது. அப்போது அவர்கள், நாங்கள் ஆளுங்கட்சி, எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்கள்.
எனவே ஹோட்டலை அடித்து நொறுக்கியவர்கள் தி.மு.க.வினர்தான் என்று தெரிவித்த அவர், இந்த தாக்குதலில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என்றார்.
|
 |
|
சென்னை நுங்கம்பாக்கம் கால்வாய் தூர்வாரி அகலப்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது. அதனை மாநகராட்சி மேயர் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், நுங்கம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட இருபத்தியிரண்டு கால்வாய்கள் சீரமைக்கும்பணி, மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்புற புணரமைப்புத்திட்டம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி ஆகியவற்றின் மூலம் ஆயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், அனைத்து கால்வாய் பணிகளும் இன்னும் இரண்டாண்டுகளில் முடிவடைந்துவிடும் என்றார்.
|
 |
|
திருப்போரூர் பகுதியைச்சேர்ந்த பத்மாவதிக்கும், செங்கற்பட்டை அடுத்த திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள வெள்ளேடு கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் அசோக்குக்கும் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண்வீட்டார் 3 சவரன் தருவதாக தெரிவித்தனர். இதனை அவர்கள் தராததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென்று கணவர் அசோக்குமாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் பத்மாவதியின் பிணம் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிணத்தை கைப்பற்றி காவல்துறையினர் இது தற்கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
|
 |
|
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகம் அனைத்து துறைகளிலும் தோற்றுப்போகவும், தமிழ்சமுதாயம் பாதிக்கப்பட்டதற்கும், ,லங்கைத் தமிழர்கள் துன்பத்திற்கு ஆளானதற்கும் தி.மு.க.ஆட்சிதான் காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு காவல்துறை மீது நம்பிக்கையில்லாமல், தாமே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டுவருதாக குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், தென்சென்னை மாவட்டத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
|
 |
|
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் இன்று காலை குன்னூர்- ஊட்டி சாலையில் ரெயில்வே கேட் அருகே சென்றபோது திடீரென என்ஜினில் தீப்பிடித்தது.
உடனே ஒட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. . பின்னர் குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து வேறு என்ஜின் கொண்டுவரப்பட்டு ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டது.
இந்த திடீர் தீவிபத்தால் ரயில் பயணிகளிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
|
 |
|
பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஈராக் மீது 2003-ம் ஆண்டு தாக்குதலை தொடங்கினார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்பட்டும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி படிப்படியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நடந்த இந்த போர் முடிவுக்கு வந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈராக் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்களின் பொறுப்பு என்றும் அந்நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இது வரையிலும் மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
|
 |
|
ஐ.பி.எல்.போட்டிக்கு வேல்ட் ஸ்போட்ஸ்ட் நிறுவனத்திற்கு பத்தாண்டுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் வழங்குவதற்கு ரூபாய் 425 கோடிக்கு கமிஷன் தொகை கைமாறியதில் லலித்மோடிக்கு தொடர்பிருப்பதாகவும், இந்த பணத்தில் லலித்மோடி ரூபாய் 80 கோடி மதிப்பில் விமானம் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே வெளிநாட்டில் தங்கியிருக்கும் மோடி, தமக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதன்காரணமாக கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணைக்கு தம்மால் ஆஜராக இயலாது என்றும் மோடியின் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
|
 |
|
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளதென்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவித்தார். மேலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெறும் என்றும் 2011-ஆம் ஆண்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைமையில் மாற்று அணி உருவாகும் என்றும் தெரிவித்தார்.
மேலவைத் தேர்தலில் இடஒதுக்கீடு தேவையென்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க. இணையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வருகிற அக்டோபர் பத்தாம் தேதி நடைபெறவிருக்கும் தமிழர் இறையாண்மை மாநாடு, இந்திய இறையாண்மையையும். ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காக நடத்தப்படுவதல்ல. சர்வதேச தமிழர் உரிமைகளுக்கு அங்கீகாரம் பெறும்வகையில் இம்மாநாடு அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், செய்தி தொடர்பாளர் வன்னியரசு அறிவமுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
|
 |
|
கேரள மாநிலம் பாட்டவயலில் இருந்து வந்துகொண்டிருந்த தொடர் ஜோதிஓட்டம், நீலகிரி மாவட்டத்தை நேற்றை தினம் வந்தடைந்தது. அப்போது வயநாடு ஆட்சியர் பாஸ்கரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் காமன்வெல்த் ஜோதியினை ஒப்படைத்தார்.
பின்னர் கூடலூர் வழியாக சென்ற தொடர் ஜோதிஓட்டம், உதகை ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது மாநில காதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் ஜோதி ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காளிதாஸ்மகேஷ்குமார், முன்னாள் டி.ஜி.பி.வால்டர் தேவராம் உட்பட பலர்கலந்துகொண்டனர். இந்த காமன்வெல்த் தொடர் ஜோதி ஓட்டம் மைசூரை நோக்கி செல்லவுள்ளது.
|
 |
|
புதுக்கோட்டையில் நகராட்சியின் மாதாந்திரக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் ராமதிலகம் உடையப்பன் தலைமையிலும், ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கி இரண்டே நிமிடங்களில் தி.மு.க.நகர்மன்ற உறுப்பினர் சுப.சரவணன், புதுக்கோட்டை நகராட்சி மக்கள், நாள்தோறும் பல இன்னலுக்கு ஆளாகிவருவதாகவும், குடிநீர் தண்ணீர் ஒருவார காலமாக வினியோகம்செய்யப் படவில்லை என்றும் பாதாள சாக்கட்டைத்திட்டம் கிடப்பில்போடப்பட்டுள்ளதாக தெரிவித்து அவருடன் மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க., தே.மு.தி.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. மேலும் சிக்கல் ஏதாவது ஏற்படுமோ என்று நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் காரில் ஏறி சென்றுவிட்டார்.
|
 |
|
சம்பா சாகுபடி சிறப்பாக நடைபெறத் தேவையான அளவு தண்ணீரை வழங்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறுவை சாகுபடி பாதிக்கும்; சம்பாவுக்கு வாய்ப்பில்லை, கடைமடைக்குத் தண்ணீர் இல்லை’’ என்ற தலைப்பில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியுள்ளது. போதிய நீர் வரத்து இல்லாததால், வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28ஆம் தேதி திறக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டும் இதே தேதியில்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2009ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்டு 31 வரை கர்நாடகத்திலிருந்து 81 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப்பெற்றது. ஆனால், இந்த ஆண்டு இதே காலத்தில் 39 டி.எம்.சி. தண்ணீரே கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடும்போது பாதியை விடக் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கப் பெற்றுள்ளது. இது குறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும், பிரதமருக்கும் இது பற்றிக் கடிதம் எழுதி, மத்திய அரசு இதில் தலையிட்டு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா உடனே தண்ணீரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆகஸ்டு மாதம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், மேட்டூரிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் அளவு 10,000 கன அடியில் ஆரம்பித்து பின்பு 8,000 கன அடியாகக் குறைத்து வழங்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் ஆட்சித் தலைவர்களின் வேண்டுகோளின்படி இன்றிலிருந்து (1.9.2010) 12,000 கன அடி தண்ணீரை வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். தொடர்ந்து சம்பா சாகுபடி சிறப்பாக நடைபெறத் தேவையான அளவு தண்ணீரை வழங்க தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. |
 |
|
பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இந்து, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 1600 பேர் உயிரிழந்தனர். 12 லட்சம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. விளை நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள பேரிடரை சமாளிக்க உலக நாடுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என ஐ.நா.சபை மூலம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.23 கோடியை இந்தியா வழங்கியது. முதலில் அந்த பணத்தை பெற தயங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்டது. இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மேலும் ரூ,99 கோடியை வெள்ள நிவாரண நிதியாக வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா நேற்று பாராளுமன்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களின் அவசர தேவை களுக்காக இந்தியா உதவுவ தாக கூறினார். |
 |
|
தமிழக மேலவைக்கான தொகுதி வரையறை மாற்றம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று கோரி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்ட பிறகு தேர்தல் கமிஷன் தொகுதி வரையறை திட்டத்தை முன்வைத்துள்ளது. கடந்த 28ம் தேதி இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூட்டிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன. எங்களுக்கு அளிக்கப்பட்ட விவரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளை உருவாக்க மக்கள் தொகையை ஒரு காரணியாக எடுத்துக்கொண்டதற்கான சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். அரசியல் சாசனத்தின் 171வது பிரில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட பிரிவினரால் மேலவைக்கான ஒவ்வொரு குறிப்பிட்ட தொகுதியும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் குறிப்பிட்ட பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட அரசியல் சாசனம் வழி வகை செய்துள்ளது. ஜனநாயகமயமாக்கலுக்கு இந்த வழிமுறையை பின்பற்றுவது அவசியம். இல்லையென்றால் விதிமுறைகளை மீறியதாகிவிடும். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்களுக்கான தொகுதியை நிர்ணயிக்க பொது மக்கள் தொகையை ஒரு அளவாக எடுத்துக் கொள்வதை தவறு என கருதுகிறேன். மாவட்ட வாரியான உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர் களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். மேலவைக்கான தொகுதிகள் உருவாக்கப்படுவது முற்றிலும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இந்த திட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அனைத்து தொகுதிகளும் நடைமுறை சார்ந்ததாக மற்றும் சமமானதாக இருப்பது மிகவும் அவசியம். பூகோளரீதியாக சமமானதாக இருக்க வேண்டும். எனவே பூகோள விவரங்கள் மற்றும் நிர்வாக எல்லைகள் அடங்கிய விரிவான வரைபடத்தை வெளியிடுவது அவசியம். தொகுதி வரையறை நகலானது மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் வழங்கப்பட்டு கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும். பொது மக்கள் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க குறைந்தபட்சம் 2 மாத காலம் அவகாம் அளிக்கப்பட வேண்டும். பொது மக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், அறிவாளிகள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவையும் தேர்தல் கமிஷன் நியமிக்கலாம்.
அரசியல் சார்பில்லாத ஒருவரை இதற்கு தலைவராகவும் நியமிக்கலாம். தொகுதி மறுவரையறை அவசரத்தில் மேற்கொள்ளப்படக் கூடாது. இது சமுகத்தின் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் கணக்கு அடிப்படையில் மறுவறை இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை அறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன் நகலை தேர்தல் கமிஷனர் சம்பத் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா. |
 |
|
ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி “சஸ்பெண்டு” செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை அவர் சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். லலித்மோடி வெளிநாட்டில் தங்கி இருக்கிறார். தனக்கு மும்பை தாதாக்களால் மிரட்டல் இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு வர மறுக்கிறார். இதை தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். போட்டிக்கு டெலிவிஷன் உரிமம் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்து இருந்தது தெரிய வந்தது உலக ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யூ. எஸ்.ஜி.) நிறுவனத்துக்கு 10 ஆண்டுக்கு டெலிவிஷன் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கப்பட்டதில் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும் இதில் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த பணத்தில் ரூ.80 கோடிக்கு ஜெட் விமானம் வாங்கப்பட்டுள்ளது. இதில் லலித்மோடிக்கு தொடர்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வருமான வரி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்தது |
 |
|
விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சின்னியம்பாளையம், காலப்பட்டு பகுதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துவதால் பல குடியிருப்புகள் அகற்றப்படும், எனவே தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வணிகர்களும் நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பதை வலியுத்தி சின்னியம் பாளையத்தில் இன்று 100க்கும் மேற்பட்ட கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் இதே கோரிக்கையை வலியுறுத்தி, சின்னியம்பாளையம் கிராம பொதுமக்கள் தூக்கு மேடை போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை கோவை மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர் |
 |
|
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நடக்கிறது. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியர்கள் காஷ்மீர் செல்வதை தவிர்த்திருங்கள். தீவிரவாதிகள் டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அரசியல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் அவர்களின் இலக்கு பட்டியலில் உள்ளது.
இந்தியாவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்கள் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அங்கு கடந்த காலங்களில் வெளிநாட்டவரை குறிவைத்து நடத்தப்பட்ட மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்களையும் நினைத்துப்பார்க்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் முன்தாங்கள் செல்ல வேண்டிய இடத்தில் எந்த அளவுக்கு பாதுகாப்பு நிலவுகிறது என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் நிலவும் பாதுகாப்பு தன்மை குறித்து அன்றாடம் செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து ரகசியமான தகவல் தொடர்ந்து எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்த எச்சரிக்கையை இந்தியாவில் பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். அசாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர் போன்ற இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனால் இந்த மாநிலங்களுக்கு செல்வதையும் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. |
 |
|
புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் அப்பு என்ற சிலம்பரசன் (வயது 21). இவன் அந்தப்பகுதியில் கடைகளுக்கு சென்று வியாபாரிகளை மிரட்டி பண வசூலில் ஈடுபட்டான். அடிக்கடி வழிப்பறியிலும் ஈடுபட்டுவந்தான். இவன் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனை போலீசார் தேடிவந்தனர்.
ஓட்டேரியில் பதுங்கி இருந்தபோது புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் மனோகரன் அவனை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தார்.
அவன் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் அப்புவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனருக்கு சிபாரிசு செய்தனர். அதை கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று அப்புவை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டான். |
 |
|
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தமிழர் தாயகப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். விடுதலைப் புலிகள் கட்டியுள்ள 3 உறுதியான பதுங்கு குழிகளையும் (பங்கர்கள்) அவர் பார்வையிட்டார். இலங்கையில் போர் முடிந்த நிலையில் அங்கு தமிழர்கள் மறு குடியர்த்தப்படும் நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்காக இந்திய அரசு ஏராளமான நிதியுதவியையும், பொருளுதவியையும் அளித்துள்ளது. ஆனால் இவை தமிழர்களிடம் போய்ச் சேரவில்லை என்று புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தற்போது நிரூபமா ராவ் இலங்கை சென்றுள்ளார். நேற்று அவர் காலை வவுனியாவுக்குச் சென்றார். அங்குள்ள மானிக் பார்ம் முள்வேலி முகாமுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் அவர் சந்தித்தார். அவர்களிடம் பேசினார். இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். அதன் பின்னர் வவுனியாவுக்கான அரசு ஏஜெண்டுன் நிரூபமாராவ் பேச்சு நடத்தினார். கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் அவர் பார்வையிட்டார். வவுனியாவைத் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்ற நிருபமாராவ், அங்கு மறுகுடியமர்த்தப்பட்டு உள்ள தமிழர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு, உபகரணங்கள், சிமெண்ட் மூட்டைகள், மேற்கூரை ஷீட்கள் ஆகியவற்றை வழங்கினார். ஓமந்தையிலும் அவர் உபகரணங்கள் வழங்கினார். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார் நிருபமா ராவ். அங்கு பொதுநல அமைப்புகளின் தலைவர்களை சந்தித்த அவர், போருக்கு பிந்தைய நிலவரத்தை கேட்டறிந்தார். சவால்களை சமாளிக்க இலங்கை அரசுடன் இந்தியா துணைநிற்கும் என்று கூறினார். யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகளால் கட்டப்பட்ட 3 பதுங்கு குழிகளையும் நிருபமா ராவ் பார்த்தார். பின்னர், வவுனியாவில் உள்ள அரசு அதிகாரிகளுடனும், நிருபமா ராவ் ஆலோசனை நடத்தினார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார் |
 |
|
கொடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்காக வந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கு 40 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கப் போகிறாராம். அங்கிருந்தபடியே தனது அரசியல் பணிகளையும் கவனிக்கப் போகிறாராம். கோவை, திருச்சி என படு சுறுசுறுப்பாக அதிமுகவினரை முடுக்கி விட்ட ஜெயலலிதா திடீரென நேற்று கொடநாடு கிளம்பி வந்து விட்டார். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார். வழியில் நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் மாவட்ட அதிமுக செயலர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதையடுத்து கொட்டகம்பை பகுதியில் கொணவக்கரை ஊராட்சித் தலைவர் வீரமுத்து தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அரவேணு பகுதியில் சக்கத்தா கணேஷ் தலைமையிலும், டானிங்டன் பகுதியில் சிடிசி ஜப்பார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எஸ்.கைகாட்டி, குருக்கட்டி, ஈளாடா ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட் நுழைவாயிலுக்கு வந்த ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக பிரமுகர்கள் எல்.மணி, கே.கே.மாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். வழியெங்கும் அளிக்கப்பட்ட வரவேற்புகளில் பொதுமக்கள் அளித்த பூங்கொத்துகளை ஜெயலலிதா பெற்றுக் கொண்டார். ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 40 நாள்கள் வரை தங்கியிருந்து முக்கிய அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. மதுரை கூட்டத்திற்கு வருவாரா? கொடநாட்டில் 40 நாட்கள் ஜெயலலிதா தங்கப் போவதாக கூறப்படுவதால் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை கலந்து கொண்டாலும் ஹெலிகாப்டரிலேயே வந்து ஹெலிகாப்டரிலேயே திரும்பிச் செல்வார் என்று தெரிகிறது. முன்னதாக ஜெயலலிதா நேற்று காலை 11.15 மணிக்கு தனி விமானத்தில் கோவைக்கு செல்வதாக இருந்தது. ஆனால் தாமதமாக மதியம் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சசிகலா மற்றும் உதவியாளர், பணிப்பெண்கள். பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் கோடநாட்டுக்கு சென்றார். விமான நிலையத்தில் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர் |
 |
|
பட்டதாரிகள், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு வங்கிகடன் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கே.ஆர்.சி. திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கும், தற்போது கல்விகடன் வேண்டுபவர்களுக்கும் ஒரே இடத்தில் கடன் வழங்கு வதற்கான ஏற்பாடுகளை காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. விஸ்வநாதன் செய்துள்ளார். 25 வங்கிகள் கடன் கொடுப்பதற்காக ஸ்டால்கள் அமைக்கின்றன. கல்விக் கடன் பெற விரும்பும் மாண வர்களுக்கு இந்த விழாவில் உடனே கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு கடன் வழங்குகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பல்லாவரம் ஆர்.எஸ்.செந்தில்குமார், தீனதயாளன், அருவிபாபு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு காஞ்சீபுரத்தில் இதே போல் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதில் 1900 மாணவ- மாணவிகள் பயன் அடைந்தனர். தற்போது 2-வது முறையாக செங்கல்பட்டில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு பல்லாவரம் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் சார்பாக ஆலந்தூர், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம் பேட்டை, சிட்லபாக்கம், சாணட்டோரியம், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். |
 |
|
ஈராக் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் அதிபர் பதவியில் இருந்து சதாம் உசேனை அகற்றும் நோக்கத்துடன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க படைகள் ஈராக்கில் தாக்குதலை நடத்த தொடங்கின. அங்கு தாக்குதல் முடிந்த பின்னரும், தீவிரவாதிகளுடனான சண்டையில் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தன. ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. இந்நிலையில் ஈராக்கில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்தி வேலையின்றி தவிக்கும் லட்சக்கணக்கானோருக்கு மீண்டும் வேலை வழங்குவதே எனது பணி என்று கூறியுள்ளார். மேலும் ஒபாமா கூறியுள்ளதாவது, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன். நாங்களே சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ஈராக்கில் இருந்து திரும்ப பெற்றுள்ளோம். மேலும் அங்கு நிறுவப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான முகாம்களும் மூடப்பட்டுள்ளன. போர் தளவாடங்களும் ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் முடிவு ஈராக்கின் நலன் கருதி மட்டும்
எடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் நலன் கருதியும் எடுக்கப்பட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை வலுப்படுத்தி ஒரு ஸ்திரமான அரசாக அதை அதன் மக்கள் கைகளில் ஒப்படைக்க அமெரிக்க விலைமதிக்கமுடியாத தியாகத்தை செய்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் ஈராக்கில் அமைதியை நிலைநாட்ட பெரிய அளவில் செலவழிக்கப்பட்டது. அமெரிக்காவின் இளைஞர்களும், இளம் பெண்களும், ஈராக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். போரினால் பாதிக்கப்பட்ட ஈராக்கில், ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தான் அமெரிக்கா ஈராக்குக்கு இவ்வளவு காலம் துணை நின்றது என்று ஒபாமா கூறியுள்ளார் |
 |
|
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஹரி பாசம்மா (வயது 70). இவர் பெங்களூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் கூறியதாவது:-
முதுமையில் இருக்கும் என்னை கவனித்து கொள்ள எனக்கு வாரிசுகள் யாரும் இல்லை. உறவினர்களும் இல்லை. இடுப்பு “டிஸ்க்” பகுதி விலகி வலியால் அவதிப்படுகிறேன். மூட்டு வலியும் உள்ளது. நீரிழிவு நோயாளி. இதனால் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் ஒரேடியாக செத்து விட முடிவு செய்து உள்ளேன். நான் சாவை சந்தோஷமாக வரவேற்கிறேன். எனவே நான் சாவதற்கு அனுமதி தர வேண்டும். தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் நான் சட்டத்தை மீற விரும்ப வில்லை. எனவே நான் சாவதற்கு சட்ட ரீதியாக அனுமதி தரவேண்டும். விஷ ஊசி போன்றவற்றை கொடுத்தால் அதன் மூலம் உயிரை விட தயாராக இருக்கிறேன். இவ்வளவு கஷ்ட நிலையிலும் நான் உலகுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு பலர் உதவி செய்வதாக கூறுகிறார்கள். ஆனாலும் என் வலியையும், அவதியையும் நான்தானே தாங்கி கொள்ள வேண்டும். அது என்னால் முடியவில்லை. எனவே சாவுக்கு அனுமதி கொடுங்கள். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அவருக்கு இருக்கும் நோயை குணப்படுத்த முடியுமா? என்று டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார். ஹரிபாசம்மா சாவுக்கு அனுமதி கேட்டு ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு எந்த பதிலும் இல்லாததால் ஐகோர்ட்டை நாடியுள்ளார் |
 |
|
திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் உள்ள தனியார் பட்டறைக்கு ஆயுதப்படையைச் சேர்ந்த வேன்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அந்த வேன்களில் இருந்த டீசல் திருடப்படுவதாகவும் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட பட்டறையை ரகசியமாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். போலீசாரும் அந்த பட்டறையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புளூங்குடி ஆயுதப்படை முகாமைச் சேர்ந்த ஒரு வேன் அங்கு வந்தது. அப்போது ஆயுதப்படை முகாமில் போலீசாக பணிபுரியும் வேன் டிரைவர் பால், பட்டறை உரிமையாளர் அபூபக்கர் ஆகியோர் வேனில் இருந்து டீசலை திருடிக் கொண்டிருந்தனர். உடனே அங்கு சென்ற போலீசார் டிரைவர் பால் மற்றும் அபூபக்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஆயுதப்படைக்கு சொந்தமான வேன்களில் டீசல் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
 |
|
அன்னை தெரசாவின் உருவம் பொறித்த தபால்தலையை வருகிற 5ந் தேதி வெளியிடப்போவதாக அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொல்கத்தா நகரில் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து ஏழை எளியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் தொண்டு செய்தவர் அன்னை தெரசா. மனிதாபிமான சேவைகளுக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட இருக்கிறோம் என்றும் அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது. கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமெரிக்க கவுரவ குடிமகளுமான அன்னை தெரசா, 50 ஆண்டுகாலமாக ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்தவர். இவரது தபால் தலை வாஷிங்டனில் நடக்கும் ஒரு விழாவில் வெளியிடப்படுகிறது என்றும் அந்த அமெரிக்க தபால் துறை அறிவித்தது. |
 |
|
சென்னை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி நியமிக்கப்பட்டு உடனடியாக அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதன்மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும், போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர். அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது தலைமைச் செயலாளர் பதவியை வகித்து வந்த கே.எஸ்.ஸ்ரீபதி, கடந்த ஏப்ரல் மாதமே ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் நடந்து வந்ததால் அவருக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. நேற்று அவரது பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக மாலதி நியமிக்கப்பட்டார். மாலதி தமிழக கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக இருந்து வந்தார். தமிழகத்தின் 2வது பெண் தலைமைச் செயலாளர் மாலதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பு லட்சுமி பிரானேஷ் கடந்த 2.12.2002 முதல் 30.4.2005 வரை தலைமைச் செயலாளராக செயல்பட்டார். தமிழக அரசின் 39வது தலைமைச் செயலாளர் மாலதி. பதவி நியமனம் வழங்கப்பட்டதும் உடனடியாக நேற்று மாலை ஐந்தர மணிக்கு தனது புதிய பொறுப்பை மாலதி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கே.எஸ்.ஸ்ரீபதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
மாலதிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். 1954ல் பிறந்த மாலதி 1977ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தமிழகத்தில் தனது பணியைத் தொடங்கினார். எம்.எஸ்.சி விலங்கியல் படித்தவர். இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நிதி மேலாண்மை டிப்ளமோ முடித்தவர். இவரது தந்தை சுவாமிநாதன் கர்நாடகத்தில், தொலைத் தொடர்புத்துறையில் உயர் பதவியில் இருந்தவர். அங்கு வசித்ததால், தமிழ், ஆங்கிலம் தவிர கன்னடமும் நன்றாகத் தெரியும். அதேபோல இந்தியிலும் புலமை பெற்றவர். 1978-ம் ஆண்டில் திருச்சி மாவட்ட உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய அவர் உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மி்கவும் அமைதியானவர், எளிமையானவர், நேர்மையானவர், கண்டிப்பானவர் என பேசப்படுபவர் மாலதி. கோப்புகளை தங்க விடாமல் உடனுக்குடன் பார்த்து அனுப்பி வைத்து விடுவார். தான் பார்க்கும் வேலைக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மிக, மிக அதிகம் என்று கூறுவார். இதே கருத்தை தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் அவ்வப்போது எடுத்துக் கூறி எந்த வகையிலும் உங்கள் பணியில், லஞ்சம் தன் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கூறுவார்.
மாலதிக்கு ஒரே மகள் தன்யா. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். முன்னதாக ஓய்வு பெறுவதையொட்டி ஸ்ரீபதி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விருந்தளித்தார். அப்போது அவர் பேசுகையில், இப்பதவி காலத்தில் பல பசுமையான நினைவுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பை நான் ஏற்கப்போகும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது பற்றி உறுதியாகத் தெரிந்ததும் உங்களுக்குச் சொல்கிறேன். நான் சரியாக 2 ஆண்டுகள் இப்பதவியில் இருந்திருக்கிறேன். இப்பதவியை வகித்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பதவி காலத்தில் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அது சிறந்த அனுபவமாகவும், சாதனையாகவும் அமைந்தது. அந்த விழாவினை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது என்றார். மாலதி பேசுகையில், தலைமைச் செயலாளர் பொறுப்பில் கே.எஸ்.ஸ்ரீபதி சிறப்பாக பணியாற்றினார். அவரது சிறப்பான பணியை தொடர முயற்சி செய்வேன் என்றார். |
 |
|
பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றார்.
சென்னை விமான நிலைய இடப் பிரச்சனையில் நான் முட்டுக் கட்டை போடுவதாக கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக நான் பேசினால் முட்டுக்கட்டை என்கிறார்கள்.
வெளி மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே அதை எப்படி அழைப்பது? என்றார் ராமதாஸ்.
ஏற்கனவே எனது தலைமையில் கூட்டணி அமைப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார்களோ அவர்களிடம் அதிக சீட்களைப் பெறவே ராமதாசும் விஜய்காந்தும் இவ்வாறு கூறி வருவதாகத் தெரிகிறது. |
 |
|
பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றார். |
 |
|
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்த போது இவரை கொலை செய்ய தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் முயற்சி செய்தனர். கார்குண்டு மூலம் இவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதை அறிந்த போலீசார் ராவல்பிண்டி அருகே உள்ள சாதிகாபாத் பகுதியில் 13 தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 வாகனங்கள் மற்றும் 100 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது ராவல் பிண்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலிக் முகமது அக்ரம் அவான் குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாதிகள் ஷபர் மெக்மூத், முகமத்இஷாப், அபித்கான், முகமதுகபிர், அந்திகாப் அப்பாசி மற்றும் குவாமர் உஷ்மான் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
|
 |
|
மதானியை கைது செய்த பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா தலைமையிலான போலீசார் மதானியை கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர். இதனிடையே மதானியின் சகோதரர் அப்துல் சலாம் கொல்லம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மதானி கைது விவகாரத்தில் பெங்களூர் போலீசார் சட்டத்தை மீறியுள்ளதாகவும், கிரிமினல் சட்டப்படி ஒருவரை கைது செய்யும்போது 30 கி.மீ.-க்கு மேல் ஒருவரை கொண்டு செல்ல வேண்டுமேன்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும். ஆனால் பெங்களூர் போலீசார் இதனை மீறி மதானியை பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம் பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. |
 |
|
இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக, அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்பிய நிலையில், அதனை திரும்பப் பெற முடியாது என இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக மக்களவையில் இன்று திமுக தலைவர் டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, திமுக, அதிமுக உள்பட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கச்சத்தீவை திரும்பப் பெறுமாறு கட்சி வேறுபாடின்றி குரல் கொடுத்தனர். இந்நிலையில் இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா கச்சத்தீவு, "இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம்" என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறியுள்ளதாகவும் . தற்போது இப்பிரச்சினையை தீர்க்க, இந்திய-இலங்கை மீனவ சங்கங்களிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணா தெரிவித்தார். |
 |
|
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சரத்யாதவ், முலாயம்சிங்யாதவ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதற்கு பதலளித்த நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளதாகவும், இருப்பீனும் மத்திய அமைச்சரவைதான் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், எனவே அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
|
 |
|
மாநில உரிமைகளை முதல்வர் கருணாநிதி பறிகொடுத்து வருவதாக ஜெயலலிதா புகார் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழகத்தை தந்து மாநில அரசின் உரிமைகளுக்காக 1970 – ஆம் ஆண்டுகளிலேயே மத்திய அரசிடம் வாதாடி உரிமைகளை பெற தொடங்கியது தி.மு.க.தான் என்றும், மாநில அரசின் உரிமைகளில், மத்திய அரசு தலையிடக்கூடாது என்பதை சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் தி.மு.க.சுட்டிக்காட்டி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். என மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தியதாகவும், ஆனால் இதற்கு முன் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் முதல்வர் கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
|
 |
|
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பான கவணஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறும்போது, இரு அரசுகளும் முறையாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது என்றும், இலங்கை நட்பு நாடு என்பதை நாம் அனைவரும் கவணத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், மீன்பிடிப்பது தொடர்பாக 2008 – ஆம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு பின் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த பதிலில் திருப்தியடையாத அ.தி.மு.க.உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
|
 |
|
வெப்பசலனத்தால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காரைக்காலில் 9 சென்ட்டி மீட்டரும், கோவையில் 8 சென்ட்டி மீட்டரும், திருவாரூரில் 6 சென்ட்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பச்சலணம் இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
|
|