Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் நீர் திறந்துவிடுவது வழக்கம்! இந்தாண்டு போதிய நீர் இறுப்பு இல்லாததால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இன்றுமாலை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதன்படி இன்றுமாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்துகொண்டு அணையின் நீரை திறந்துவிடஉள்ளார்.
இதனால் டெல்டா பாசன விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, விலைவாசி உயர்வு. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சியினர் மாநிலங்களவையில் கிளப்பினர்.
உறுப்பினர்களை அமைதி காக்கும்படி அவைத்தலைவர் அமீத்அன்சாரி கேட்டுக் கொண்ட பின்னரும் உறுப்பினர்கள் கூச்சல்போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நண்பகல் பனிரெண்டுமணிவரை அவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் தெரிவித்தார்.
மீண்டும் அவை கூடியதும், உறுப்பினர்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் நாள்முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மக்களவையிலும் பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைப்பதாக மீராகுமார் அறிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் ம.தி.மு.க.வின் கொடியேற்றுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியப் பெருந்தலைவர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வைகோ கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது, ஒரு குடும்பத்தின் பிடியிலே தமிழகம் மூழ்கியிருப்பதாகவும், செம்மொழி மாநாட்டிற்காக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் முல்லைபெரியாறு அணை உடைக்கப்பட்டால் தெற்குசீமை வறண்டு பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதென்றும் இந்த அணையை உடைக்க கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ஜோயல், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வரதராஜன், இளைஞரணி செயலாளர் வினாயக ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் திருமலைராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணைத்தலைவர் கசாலி கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மாரிச்செல்வம், மாவட்ட அமைப்புச் செயலாளர் பிரான்சிஸ், மாவட்டத் துணைச்செயலாளர் முருகப்பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும், வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சேலம் காந்திரோடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது இதற்கு மாநிலத் தலைவர் கோ.க.மணி தலைமைதாங்கி துவக்கிவைத்தார்.
சேலம் காந்திரோடு பகுதியில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆட்சியர் பழைய அலுவலகம் முன்பு நிறைவுற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி, மாநில இளைஞரணிசெயலாளர் அருள், மாநகரசெயலாளர் கதிர்ராஜரத்தினம், நிர்வாகிகள் காமராஜ், சத்ரியசேகர் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா பதவி வகித்துவருகிறார். இவர் நாளை ஓய்வுபெறுவதையொட்டி புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய மூத்த தேர்தல் ஆணையராக பணியாற்றும் குரோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீல் பிறப்பித்திருக்கிறார்.
இந்தியாவின் முதல் இஸ்லாமிய தலைமை தேர்தல் ஆணையர் என்ற பெருமை குரோஷிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர் பகுதிகளின் நிலவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சிறப்பு தூதராக அனுப்பிவைக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரான சீத்தாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கவும் இலங்கை அரசின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தமிழர்களின் பிராந்தியங்களுக்கு முழுசுயாட்சி உரிமை வழங்கவும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட அனைத்து கட்சி குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு யெச்சூரி கோரிக்கை விடுத்துள்ளார்;.

ஷேக்அலாவுதீன் பொருளுதவியால் மயிலாடுதுறை அருகேயுள்ள தேரெழும்பூரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழாவில் அப்துல்வஹாப் கலந்து கொண்டு பள்ளிவாசலை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காஜாமொய்தீன், நஃபிஸாபீவி உட்பட மாவட்டம் முழுவதில் இருந்து வந்திருந்த ஜமா-அத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு 'ஜூனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராக்லான்ட் மதுரம் தலைமை தாங்கினார். இதில் 2009-2010-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பியூலா ஜெயராமன், சையது அம்மாள் அறக்கட்டளை தலைவர் பாபுஅப்துல்லா, ஹமீதியா பள்ளித் தாளாளர் தஸ்தகீர், போக்குவரத்து காவல்ஆய்வாளர் செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அபாயகரமான கழிவுப் பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்ற நச்சுக்கழிவு கிடங்கு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சூழலில் சேமிப்புகிடங்கு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நிறுவப்பட்டால் பெருந்துறை, சென்னிமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஏற்கனவே கூத்தம்பாளையம், செங்குளம், ஈங்கூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் கிணற்றுநீர் உவர்நீராக மாறிவிட்டதாகவும் சில பகுதிகளில் காற்றடிக்கும்போது வயிற்றை குமட்டும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  
எனவே ஏழை – எளிய விவசாயிகள். சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு இந்த திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் தமிழக அரசை கண்டித்து வரும் இரண்டாம் தேதி, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   4 பேர் இன்று : 1167 நேற்று: 2532 மொத்தம்: 9383657
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்