Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt



[பார்க்க]
கல்வி, கலாச்சாரம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் தொடர்பு மேலும் அதிகரிக்கும் வகையிலும், நீடிக்கும் வகையிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மைக்ரான் தலைமையிலான தூதுக்குழு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது. இதன் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் மாலதி, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். 

உங்கள் கருத்து

[பார்க்க]
இதுகுறித்து அவர் இன்று ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் தாம் கோரிய விவரங்களை தி.மு.க. அரசு அளிக்காததே இந்த நியமனக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் தாம் பங்கேற்காததற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தலைமை தகவல் ஆணையர் நியமனத்தில் அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தௌ;ளத்தெளிவாகிறது. மேலும் தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பான செயல் என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் தம்மை கலந்தாலோசிக்காமலும் தமது கருத்தை கேட்காமலும் தலைமைத் தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம் சட்டத்தின் நோக்கத்தையே தி.மு.க. அரசு சிதைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.



உங்கள் கருத்து

[பார்க்க]
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும், ஒரேசீரான பாடதிட்டத்தை அமலாக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மெட்ரிக் பள்ளிகள் கடுமையாக எதிர்த்ததுடன் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று, தமது கருத்துக்களை வெளியிட்டனர். உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலாக்கப்பட்டுவரும் சமச்சீர் கல்விதிட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் அச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதர மாநிலங்களில் இரண்டே இரண்டு பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோஇண்டியன், ஸ்டேட்போர்டு, சென்ட்ரல் போர்டு ஆகிய நான்குவகையான பாடத்திட்டங்கள் உள்ளன.

எனவே இவை அனைத்தையும் சமன்படுத்தி இந்த சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. இது சரியானதே! மெட்ரிக் பள்ளிகள் இவற்றை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். 

உங்கள் கருத்து

[பார்க்க]
மேற்கு வங்கத்தில் பதினேழு புதிய உள்ளுர் ரயில்களை ரயில்வேத்துறை அமைச்சர் மம்தாபானர்ஜி இன்று தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது நாசவேலைகளை நிகழத்தி, ரயில்வேயின் நற்பெயரை சீர்குலைக்க சதிநடைபெற்று வருவதாகவும், தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன, எச்சரிக்கை விளக்குகள் முடக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

தண்டவாளத்தை அங்குலம் அங்குலமாக காவல்துறையினரால் கண்காணிக்க முடியாது. எனவே நாசவேலை குறித்து யாராவது தகவல் அளித்தால் அவர்களுக்கு ரயில்வேத்துறையில் பணிவழங்கப்படும் என்றார்.

பத்திரிகையாளர்களும், கண்காணிப்புடன் இருந்து தகவல் கொடுக்கவேண்டும் என்று கூறிய அவர், அப்படி கொடுத்தால் அவர்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு பணி வழங்கப்படும் என்று கூறினார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 29-வது ஊட்டச்சத்து வாரவிழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரிவித்தார். இதனால் குழந்தையின் வலிமையும் மூளை வளர்;ச்சியும் பெருகும் என்றார்.

மேலும் தமிழக மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த அரசு பாடுபட்டுவருவதாக அவர் பெருமிதம் தெரிவித்;தார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட முதன்மைச் செயலர் மீனாட்சிராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். 

உங்கள் கருத்து

[பார்க்க]
கும்பகோணம்அருகேயுள்ள நரசிங்கம்பேட்டை மாரியம்;மன்கோவில் அரங்கத்தில் நடைபெற்ற இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் விழாவிற்கு ஒன்றியப் பெருந்தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கலந்துகொண்டு ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கினார். இதில் ஊராட்சிமன்றத் தலைவர் முத்தையன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணராஜ், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கோ.சி.இளங்கோவன், கோ.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று ஆடுதுறை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில்  அமைச்சர் கோ.சி.மணி கலந்துகொண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, அரசின் இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்.
இதில் வட்டாட்சியர் தனராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்




உங்கள் கருத்து

[பார்க்க]
கடந்த ஜனவரி 29-ந்தேதி முதல் பிப்ரவரி நான்காம் தேதிவரை பங்காளதேஷில் தெற்காசிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பதினேழு வீரர் - வீராங்கணைகள் தங்கம் - வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

அவர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டுத்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.   

உங்கள் கருத்து

[பார்க்க]
பீகார் சட்டபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலை 6 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி தேர்தல் அக்டோபர் 21, அக்டோபர் 24, அக்டோபர் 28, நவம்பர் 1, நவம்பர் 9 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நவம்பர் 24ம் தேதி எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளிலும் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
சமச்சீர் கல்வி குறித்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நன்கு ஆராய்ந்த பிறகே தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறிய நீதிபதிகள், இதனை மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சமச்சீர் கல்விக்கான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவுக்கும், சமச்சீர் கல்விக்கான தமிழக அரசின் குழுவுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சமச்சீர் கல்வி சட்டம் சரியானதுதான் என்றும், உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமச்சீர் கல்வி குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மற்ற மாநிலங்களில் இரண்டு கல்வி வாரியங்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கல்வி வாரியங்கள் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பெற்றோர்களோ மாணவர்களோ தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதபோது மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் நிர்வாகங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்றும் கேட்டனர்.

உங்கள் கருத்து

[பார்க்க]
அன்னை தெரசாவின் உருவம் பொறித்த தபால் தலையை இன்று  அமெரிக்க தபால் துறை வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமெரிக்க கவுரவ குடிமகளுமான அன்னை தெரசா, இந்தியாவில் கொல்கத்தா நகரில் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து ஏழை எளியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் தொண்டு செய்தவர். 50 ஆண்டு காலம் மக்களுக்காக சேவை செய்த அவர் 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ந் தேதி கொல்கத்தாவில் மரணம் அடைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் இந்தியா தபால் தலை வெளியிட்டு அவரை கவுரவித்தது. இந்நிலையில் அமெரிக்காவும் அவருக்கு தபால் தலை வெளியிட்டு உள்ளது. மனிதாபிமான சேவைகளுக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டுள்ளோம் என்று அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது. இந்த தபால் தலை வெளியீட்டு விழா, வாஷிங்டனில் உள்ள தேசிய இமாகுலேட் தேவாலயத்தில் நடந்தது. கொலராடா நகர ஓவியர் தாமஸ் பிளாக்ஷீர் ஓவியமாக தீட்டிய அன்னை தெரசாவின் உருவப்படம் தான் இந்த தபால்தலையில் இடம் பெற்று உள்ளது. 

உங்கள் கருத்து

[பார்க்க]
இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் கொழும்பு சென்றடைந்தார். நாளை வவுனியா செல்லும் அவர் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்க உள்ளார். இலங்கை போருக்குப் பிறகு முகாம்களில் உள்ள தமிழர்கள் இதுவரை மறுகுடியேற்றம் செய்யப்படாதநிலை இருந்து வருகிறது. இதனையடுத்து இந்திய சிறப்பு பிரநிதியாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் 4 நாட்கள் பயணமாக அண்மையில் இலங்கை சென்று திரும்பினார். இதனையடுத்து இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் ஜெயரத்னே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேச உள்ளார். இதனிடையே, நாளை வவுனியா செல்லும் சிங், அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலையத்தை வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் திறந்து வைக்கிறார். ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கூடன்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டே இது திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வாக்கில் ரஷ்ய அதிபர் மெத்வதேவ் முதல் உற்பத்திப் பிரிவைத் திறந்து வைப்பார் என்று தெரிகிறது. இதனையடுத்து அடுத்த 6 மாத காலத்தில் இரண்டாவது உற்பத்திப் பிரிவு செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு உற்பத்திப் பிரிவுகளும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை

உங்கள் கருத்து

[பார்க்க]
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் “ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐ.சி.சி.) 3 பேரையும் “பணியிடை நீக்கம்” செய்தது. இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் டோனி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தற்போது கூறப்பட்ட “ஸ்பாட் பிக்சிங்” குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது. விசாரணை நடைபெற்று வருகிறது. மேட்ச் பிக்சிங்கோ அல்லது ஸ்பாட் பிக்சிங்கோ எதுவாக இருந்தாலும் சரி அதனால் கிரிக்கெட்டின் புகழ்தான் கெடுகிறது. இதனால் எல்லா கிரிக்கெட் வீரர்களும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்கள். அதே நேரத்தில் ஒரு அணி குறைவான ரன்னை எடுக்கும்போது அந்த ஆட்டம் பிக்சிங் (சூதாட்டம்) செய்யப்பட்டதோ என்று ரசிகர்கள் நினைக்க தொடங்கி விடுகிறார்கள். இதனால் சூதாட்ட குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
வருகிற தேர்தலில் சட்ட சபையில் பா.ஜனதா நுழைந்தே தீரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்ப்பதற்கான பணிகளில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டு நலம், மக்கள் நலன் தான் பா.ஜனதாவின் குறிக்கோள். ஓட்டு வங்கியை குறிவைத்து ஒருபோதும் பா.ஜனதா செயல்படாது. கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை எதிர்க்கிறோம். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தி னோம். இப்போது இந்த பிரச்சினையை வீடு வீடாக கொண்டு செல்கிறோம். தமிழகத்தில் பா.ஜனதாவின் பலம் அதிகரித்துள்ளது. வருகிற தேர்தலில் சட்ட சபைக்குள் நுழைந்தே தீருவோம். கூட்டணி பற்றிய முடிவுகள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் உறுதியாகும். விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம். எங்களை பொறுத்த வரை கூட்டணி அமைந்தாலும் சரி, அமையாவிட்டாலும் சரி தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில் கட்சியை பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
டாஸ்மாக் கடைகளை நிரத்தரமாக மூட வலியுறுத்தி,  இன்று  புதிய தமிழகம் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, ஏழை, எளிய மக்களுக்கு மூன்று சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டா, ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசை வலியுறுத்தியும்,  மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். அவர் மேலும் வரும் 14ம் தேதி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5,000 த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புதிய தமிழகத்தில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.
எல்நெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈ.டி.எல்., நிறுவனத்தில் 700 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55). இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் இந்த இரண்டு பிரிவினர் அடிக்கடி மோதிக்கொண்டனர். திருவிடைச்சேரியை சேர்ந்த குத்புதீன் என்பவர் வீட்டில் ஒரு பிரிவினர் தொழுகை நடத்துவது வழக்கம். குத்புதீன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் இன்னொரு பிரிவை சேர்ந்த இதயதுல்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இங்கு தொழுகை நடத்துவதால் தனக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியதால் குத்புதீனுக்கும் இதய துல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வந்தது. குத்புதீனின் உறவினர் ஹாஜ்முகமது(40). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சிமலையில் வசித்து வருகிறார். தன்னிடம் இதயதுல்லா மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்வது தொடர்பாக ஹாஜ் முகமதுவிடம் குத்புதீன் கூறினார். இதனால் ஹாஜ்முகமது மற்றும் அவரது தரப்பினர் சுமார் 15 பேர் நேற்று இரவு 3 கார்களில் திருவிடைச்சேரி சென்றனர். அங்குபள்ளிவாசலில் இருந்த இமாம் முகமது இஸ்மாயிலிடம் ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இமாமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். இதனால் 2 தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹாஜ் முகமது தன்னிடம் இருந்த கைத்துப்பக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் இமாம் முககமது இஸ்மாயில் மற்றும் அஜீத்முகமது(60) ஆகிய 2 பேரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த காஜாமைதீன்(41), பால்ராஜ்(55), ராமதாஸ்(45), சந்தியாகு(26) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதற்கிடையில் ஹாஜ்முகமது மற்றும் அவரது தரப்பினர் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த காஜாமைதீன், பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு ஆகிய 4 பேரையும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவிடைமருதூரில் உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்து உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும் ஹாஜ் முகமதுவின் தம்பி ரபீக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கிசூடு நடந்த திருவிடைச்சேரியில் இன்றும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மத்திய மண்டல ஐ.ஜி.கரன்சின்கா, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அங்கு முகாமிட்டு உள்ளனர். ஆயுதம் ஏந்திய போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

உங்கள் கருத்து

[பார்க்க]
ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்ட, இந்திய நீச்சல் வீராங்கனைகள் இருவர் காமல்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 64வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சமீபத்தில் சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.) சார்பில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ரிச்சா மிஸ்ரா, ஜோட்சனா பான்சாரே, அமர் முரளிதரன் ஆக்யோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. ரிச்சா மிஸ்ரா, ஜோட்சனா பான்சாரே ஆகிய இருவரும்,வரும் அகடோபர் 3ந் தேதி துவங்கும்  காமன்வெல்த் போட்டிக்கான இந்திய நீச்சல் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், இவர்களுக்கு போட்டியில் பங்கேற்ற இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இந்திய நீச்சல் கூட்டமைப்பு செயலாளர் வீரேந்தர் நனவாடி,“ஜெய்ப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில்,ரிச்சா மிஸ்ரா, ஜோட்சனா பான்சாரே, அமர் முரளிதரன் ஆகியோர் ‘மெத்தில் ஹெக்சா நியாமின்’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பும் பட்சத்தில் மீண்டும் ஒரு முறை சோதனை நடத்தப்படும். இதில் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை வழங்கப்படும். மேலும், வீராங்கனைகள் ரிச்சா மற்றும் ஜோட்சனா இருவரும், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீராங்கனைகள் தேர்வு செய்வது குறித்து 2வது சோதனையின் முடிவுக்கு பின் அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.



உங்கள் கருத்து

[பார்க்க]
பீகார் மாநிலம் லகிசாரை காட்டுப்பகுதியில் கடந்த 29-ந்தேதி போலீசார் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த மாவோயிஸ்டுகள், போலீசார் மீது திடீரென தாக்கதல் நடத்தினார்கள். இதில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். 13 பேர் காயம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர்கள் லூகாஸ் தேத், அபய்பிரசாத் யாதவ், போலீஸ்காரர்கள் ரூபேஷ்குமார், இஷான்கான் ஆகிய 4 பேர் மாவோயிஸ்டு பிடியில் சிக்கிக்கொண்டனர். இவர்களை விடுவிக்க வேண்டுமானால் ஜெயிலில் இருக்கும் தங்கள் இயக்கத்தை சேர்ந்த 8 பேரை விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இல்லை என்றால் 4 பேரையும் கொல்லப் போவதாக மிரட்டினார்கள். ஆனால் அவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே மாவோயிஸ்டுகள் லூகாஸ்தேத் என்ற சப்- இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றனர். மற்ற 3 பேரையும் விரைவில் கொல்லப்போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் போலீசார் குடும்பத்தினர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததை அடுத்து 3 பேரையும் விடுவிக்கப்போவதாக மாவோயிஸ்டுகள் கூறியிருந்தனர். எனவே எந்த நேரத்திலும் அவர்கள் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் தலைவர் ஒருவர் நேற்று அதிகாலை சப்- இன்ஸ்பெக்டர் அபய் யாதவின் வீட்டுக்கு வந்து அவருடைய மனைவியை சந்தித்து பேசினார். விரைவில் 3 பேரையும் விடுவிப்போம். அவர்கள் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்று கூறிவிட்டு சென்றார். அதன்படி இன்று காலை மாவோயிஸ்டுகள் 3 பேரையும் விடுவித்தனர். அவர்களை காட்டில் இருந்து அழைத்து வந்து கஜ்ரா- சனான் காட்டு எல்லை பகுதியில் விட்டு சென்றனர். அங்கிருந்து 3 பேரும் காட்டை விட்டு வெளியே வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த பகுதியில் முகாமிட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை டாடா சபாரி காரில் ஏற்றிக்கொண்டு லகிசாரா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 3 பேரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 3 பேரையும் முதல்- மந்திரி நிதிஷ்குமார் சந்திக்க விரும்பினார். இதையடுத்து அவர்களை போலீசார் பாட்னாவுக்கு அழைத்து செல்கின்றனர். முதல்- மந்திரியுடன் சந்திப்பு முடிந்ததும் 3 பேரும் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மாவோயிஸ்டுகள் பிடியில் சிக்கி இருந்த 3 பேரும் விடுவிக்கப்பட்டதால் பீகாரில் கடந்த 9 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது. காவலர் குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். 3 பேரும் விடுதலையாகி வெளியே வந்ததும் அந்த காட்டுப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர். மாவோயிஸ்டுகள் தப்பி விடாதபடி காட்டுப் பகுதிகளை போலீசார் சீல் வைத்து இருப்பதாக போலீஸ் டி.ஜி.பி. நீல்மணி தெரிவித்தார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
இந்தியா முழுவதும் 38 ஆயிரத்து 700 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த பங்க்குகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனைக்காக கமிஷன் வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பங்க் உரிமையாளர்களுக்கு ரூ.1.08 கமிஷன் கிடைக்கும். அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு 67 பைசா கமிஷன் தொகையாக கொடுக்கப்படுகிறது. இந்த தொகை போதாது என்று அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தி உள்ளது. பங்க் பராமரிப்பு செலவு, ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம் போன்றவை அதிகமாகி விட்டதால் இன்வாய்ஸ் மதிப்பில் 5 சதவீதம் கமிஷன் தொகையாக வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மத்திய அரசு சம்மதிக்காவிட்டால் வரும் 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களது கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஒருமுறை உயரும் என்று தெரிய வந்துள்ளது. இந்த விலை உயர்வு தவிர்க்கப்பட முடியாதது என்று கூறப்படுகிறது. பங்க் உரிமையாளர்கள் கேட்பது போல 5 சதவீதம் கமிஷன் கொடுக்கும் நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.10 உயரும் என்று தெரிகிறது. டீசல் விலை லிட்டருக்கு 60 பைசா உயரும் என்று கூறப்படுகிறது. இதுபற்றியும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு கமிஷன் தொகையை உயர்த்தாவிட்டால் 20-ந்தேதி வேலை நிறுத்தம் செய்வதில் அகில இந்திய பெட்ரோல் கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அஜய் பன்சல் தெரிவித்தார். அவர் கூறியதாவது, நாடெங்கும் சமையல் கியாஸ் விற்பனை செய்யும் டீலர்களுக்கு 8 சதவீதம் கமிஷன் கொடுக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கமிஷன் தொகை உயர்த்தவில்லை. என்றாலும் நாங்கள் இலவச காற்றடித்து கொடுப்பது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறோம். கமிஷன் உயர்த்தப்படாததால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 
பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தால் பெட்ரோல், டீசலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.
உங்கள் கருத்து

[பார்க்க]
கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லையான ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை, கபினி அணை உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துகொண்டு வருகிறது. எனவே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. காவிரி ஆற்றில் சுமார் 50 ஆயிரம் கனஅடி நீர் வரத்தொடங்கி உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளதால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து

[பார்க்க]
ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து ரோசய்யாவை மாற்றுவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொருவரை அப்பதவியில் நியமிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியாகாந்தி தொடர்ந்து 4 ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கட்சி மற்றும் ஆட்சியில் சில மாற்றங்களை மேற்கொள்ல முடிவு செய்துள்ள அவர், முதல்கட்டமாக ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள சீனிவாஸ் ரெட்டியை மாற்ற முடிவு செய்துள்ளார். அதன்பிறகு மேலிட பார்வையாளராக உள்ள வீரப்பமொய்லியையும் அப்பதவியிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளார். இவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல் படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதனால் இவரை மாற்றி விட்டு, வேறொரு முக்கிய தலைவரை மேலிட பார்வையாளராக அமர்த்த சோனியா முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த இரு அதிரடி மாற்றங்களை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து ரோசய்யாவை மாற்றுவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொருவரை அப்பதவியில் நியமிக்கவும் சோனியா தீர்மானித்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்து

[பார்க்க]
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர், உரிய லைசென்ஸ் எதுவும் இல்லாமல் சிக்கிக் கொண்டார். அப்போது அதிலிருந்து தப்ப அங்கு நின்றிருந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து இதை லஞ்சமாக வைத்துக் கொண்டு ஆளை விடுங்கள் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உ. சகாயம். தமிழகத்திலேயே முதல் முறையாக சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி. மிகவும் நேர்மையானவர் என மக்களால் பாராட்டப்படுபவர். மிக மிக எளிமையானவர். இவர் ராசிபுரம் அருகிலுள்ள மசக்காளிப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரி ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்க, அரசு வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வாகனம் தேசிய நெடுஞ்சாலை- நான்குவழிச் சாலையில் பொம்மக்குட்டை மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குடிபோதையில் தட்டுத் தடுமாறியபடி குறுக்கே வந்துள்ளனர். சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார், கலெக்டரின் ஒட்டுநர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் குடிபோதையில் இருந்த இரு சக்கர வாகனஓட்டியை அழைத்து அறிவுரை கூறிய ஆட்சியர், ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்று சோதனை நடத்தினார். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், மோட்டார் வாகன ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால், பதறிப்போன இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த குடிமகன், தனது பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்து, தன்னை விட்டும்விடும்படி கேட்டுள்ளார். இதைப் பார்த்த கலெக்டருக்கு கடும் கோபம் வந்து விட்டது. காரிலிருந்து இறங்கிய அவர் பைக் சாவியை எடுத்துக் கொண்டு, வண்டியை ஓரமாக நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளரை உடனடியாக வருமாறு கூறி அவரிடம் வண்டியையும், சாவியையும் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினார். பின்னர் கல்லூரி விழாவுக்கு தாமதமாக சென்றார். அங்கு போய் முதல் வேலையாக இந்த சம்பவத்தைக் கூறி வேதனைப்பட்டார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 5-வது முறையாக தமிழக முதல்- அமைச்சர் பொறுப்பினை ஏற்று அரியணையில் அமர்ந்த கருணாநிதிதான் பதவியேற்ற பிறகு அரசு அலுவலர்களை அடிமைப்படுத்திய டெஸ்மா சட்டத்தினை ரத்து செய்து சரித்திர சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராடி பெற்ற உரிமையான பணிக்காலத்தில் இறந்த அரசு அலுவலர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதை தடை செய்யப்பட்டதை நீக்கி ஆணை வழங்கியும் வேலை நியமன தடைச் சட்டத்தை ரத்து செய்தும் அரசு அலுவலர் ஆசிரியர்கள் சமுதா யத்தின் மத்தியில் நிம்மதியான வாழ்வினை தந்தவர். 6-வது ஊதியக்குழு அமுல் படுத்தும் முன்பே 3 மாத கால ஊதியத்தினை முன் பணமாக தந்து அரசு அலுவலர்- ஆசிரியர்களின் வாழ்வில் புது வெள்ளமாக மகிழ்ச்சியை ஊட்டியவர். மத்திய அரசு அமுல்படுத்திய 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அமுல்படுத்தி அரசு அலுவலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது அதிலுள்ள குறைகளை களைய ஒரு நபர் குழு நியமித்து அதன் பரிந்துரை களையும் அப்படியே ஏற்று உடனடியாக அமுல்படுத்திய பெருமையும் அவரையே சாரும். சென்ற ஆட்சிக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் போன்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர் களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், சிறப்பு ஓய்வூதியம், பதவி உயர்வு, உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை தலை நிமிரச் செய்தவர். ஊராட்சி உதவியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பெருமைச் சேர்ந்தவர். மத்திய அரசு எப்போது எல்லாம் அக விலைப்படி அளிக்கிறதோ அதனை கோரிக்கையை வைக்காமலேயே உடனடியாக வழங்கி புதிய சரித்திரத்தையும் படைத்தவர். இது போன்ற அரசு அலுவலர் சமுதாயத்தின் எண்ணற்ற கோரிக்கைகளை அவ்வப்போது நிறைவேற்றி வரும் நிலையில் அரசு அலுவலர்களின் கோரிக்கைகளை பெற வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இல்லாத போது சில மத்திய- மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்களின் சங்கங்கள் பொது கோரிக்கைகள் சிலவற்றினை காரணம் காட்டி மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து வருகிற 7-ந்தேதி அன்று வேலை நிறுத்தம் என்று அறிவித்து உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இவ்வேலைநிறுத்தம் அரசியல் சூழலுக்காகவே நடைபெறுவதாக கருதி தமிழ்நாடு அரசு அலு வலர் ஒன்றியம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிக்காமல் பணியில் இருந்து கொள்வார்கள் என் றும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

[பார்க்க]
காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளுக்காக அறிவித்துள்ள நிதியுதவியை தமது அமைச்சகம் உறுதியாக வழங்கும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றது அண்மையில் அம்பலமானது. இதனையடுத்து, இதற்கு நிதியுதவி செய்வதாக வாக்களித்திருந்த இந்திய ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தங்களது உதவிகளை நிறுத்திக் கொண்டன. இந்நிலையில் நாட்டின் கவுரவத்தை கருத்தில் கொண்டு விமானப் போக்குவரத்துத்துறை சார்பில் அளிப்பதாக உறுதியளித்திருந்த நிதியை நிச்சயமாக வழங்கப்போவதாக பிரபுல் பட்டேல் தற்போது அறிவித்துள்ளார். இதேபோல காமன்வெல்த் போட்டிகளுக்கு விளம்பரதாரர் தொகை உள்ளிட்டவற்றை அமைப்பு குழுவினரிடம் வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்க ஏர் இந்தியா உயரதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி அறிவித்துள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், தேனி மாவட்டம் சுருளி அருவியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் தினகரன் தலைமை தாங்கினார். தேனி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: அகில இந்திய அளவில் 13 மாநிலங்களில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கொடியில் புலி சின்னமும் அதன் வால் பகுதியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் உள்ளது.அது போல தமிழகத்திலும் மாற்றி தேசிய அளவில் ஒரே கொடி, ஒரே சின்னம் என வைத்துக்கொள்ள வேண்டும். முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனே தடுக்க வேண்டும். புதிய தமிழகம் கட்சியுடனும், அதன் தலைவர் கிருஷ்ணசாமியுடனும் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம். புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தால் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும். இவ்வாறு அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தன.

உங்கள் கருத்து

[பார்க்க]
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் வரும் 16 ஆம் தேதி முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் 131 ஆவது வார்டு பயனாளிகளுக்கு, இன்று இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது கருணாநிதி இலவச வண்ண டி.வி. வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தார்கள். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சத்து 24 ஆயிரத்து 155 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.விடுபட்ட அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 167 மாநகராட்சி மருத்துவமனையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இ.சி.ஜி., ரத்தப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பரிசுப்பை வழங்கப்படுகிறது. இதுவரை 3 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு காலங்களில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, வருகிற 16 ஆம் தேதி முதல் 3 வேளைகள் இலவசமாக உணவு வழங்கப்படும். சென்னை மாநகரில் மழை நீர் வடிகால்வாய் சுமார் 1000 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது பொதுமக்களுக்கும், மாநகராட்சிக்கும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
காவி தீவிரவாதம் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இதழான பஞ்சஜன்யாவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பாகிஸ்தானால் ஏவப்படும் மதத் தீவிரவாதத்தைப் பற்றி காங்கிரஸ் பேச மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் நடந்த மாநில காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய ப. சிதம்பரம், காவி தீவிரவாதத்தால் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதை அடுத்து பாஜக மற்றும் இந்து மத அமைப்புகள் பலவும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் மூலம் காவி நிறத்தின் புனிதத்தையும் இந்து மதத்தையும் சிதம்பரம் இழிவுபடுத்தி விட்டதாக அவை கூறின. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இதழான பஞ்சஜன்யாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் சிதம்பரத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவி தீவிரவாதம் என சிதம்பரம் பயன்படுத்திய வார்த்தை கண்டனத்துக்கு உரியது. இதை சிதம்பரம் கூறியிருந்தால் கூட இது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலையைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுபான்மையினரின் ஓட்டுக்களைக் கவர காங்கிரஸ் கட்சி செய்யும் மலிவான ஓட்டு வங்கி அரசியல் நாடகம்தான் இது. பாகிஸ்தானால் ஏவப்பட்ட மதத் தீவிரவாதத்தால் இது வரை இந்தியாவில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதை மறைத்து காவி தீவிரவாதம் என பழி போடுவது கண்டிக்கத்தக்கது. இதே காங்கிரஸ் அரசு பிற மதத் தீவிரவாதத்தைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?. இப்போதைய மத்திய அரசால் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை நாட்டில் உள்ள 85 சதவீத இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே தேசத்துக்கு எதிரான இது போன்ற  சக்திகளை முறியடிக்க முடியும்’’என்று கண்டனம் தெர்வித்துள்ளது.

உங்கள் கருத்து

[பார்க்க]
மேற்கு வங்காள மாநிலம் அவுரா ரெயில் நிலையத்தில், 17 ஜோடி புதிய உள்ளூர் ரெயில்களை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது, மேற்கு வங்காளத்தில், நாசவேலைகளை நிகழ்த்தி, ரெயில்வேயின் நற்பெயரை சீர்குலைக்க சதி நடந்து வருகிறது. ரெயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன. சிக்னல்கள் முடக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள மாட்டோம். தண்டவாளத்தை அங்குலம் அங்குலமாக போலீசாரால் கண்காணிக்க முடியாது. எனவே, நாசவேலை பற்றி யாராவது தகவல் கொடுத்தால், அவர்களுக்கு ரெயில்வேயில் வேலை வழங்கப்படும். பத்திரிகையாளர்களும் கண்காணிப்புடன் இருந்து தகவல் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ரெயில்வே வேலை வழங்கப்படும். யாரிடம் தகவல் சொல்வது என்பதை ரெயில்வே பொது மேலாளர்கள் சொல்வார்கள். ரெயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தை கண்காணிக்க வேண்டும். நன்றாக பணியாற்றுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். ரெயில்வேயில், 14 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் நாசவேலைக்கு துணை போகலாம். மற்றவர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காக ரெயில்வே சொத்துகளை நாசம் செய்யக்கூடாது.
பொதுமக்களும், அரசியல் கட்சிகள் சொல்வதற்காக, நாசவேலையில் ஈடுபடக் கூடாது. நான் சொன்னால் கூட செய்யக்கூடாது. ஏனென்றால், கட்சிகள் வரும், போகும். ஆனால், ரெயில்வே, நிலையாக இருக்கும். மேற்கு வங்காளத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி உமாகாந்தோ மகதோவை போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர். ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்தில் அவரை கொன்று விட்டனர். நகராட்சி தேர்தல் நெருங்கிய வேளையில், ஞானேஸ்வரி ரெயில் கவிழ்ப்பு நடைபெற்றது. அதுபோல், துர்கா பூஜை நெருங்கும் போது மீண்டும் நாசவேலை நடக்க வாய்ப்புள்ளது. ரெயில்வேயில் 20 ஆண்டுகள் பணி முடித்த பிறகு, விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களின் வாரிசுக்கு ரெயில்வே வேலை வழங்கப்படும். ரெயில்வேயில் உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

உங்கள் கருத்து


கருத்துரை:

கருத்துரைகள் மொத்தம் :143. பக்கம்6 / 15.

kalpana   kalpana26@yahoo.com

5:52 am , 11-12-2009

What Great has been done by Non-Congress Govts Pl explain SSS.
Tamilanai Tamilnaatirkullae Jaathial Pirinthirkkum Neengal, Tamil Eelam patri pesuvatharku Urimai Illai, Ullnaatirkul Ondrupattu piragu Ayalnaatilrku selvom

jagadeesh   jpmbaonline@yahoo.com

8:55 am , 05-12-2009

yes,

சிவா   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

1:51 am , 04-12-2009

மனம் varutham alikirathu

சிவா   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

1:51 am , 04-12-2009

மனம் varutham alikirathu

interno thala singapore   www.jpsamy.com

1:27 am , 02-12-2009

இடைத்தோர்தலில் சரத்குமார் தி.மு.க அதாரிப... மேலும்.. »

abusali   iirc.dhawa@gmail.com

10:58 pm , 01-12-2009

popular front message very urgent for
muslim peoples

abusali   iirc.dhawa@gmail.com

10:41 pm , 01-12-2009

popular front message very urgent for
muslim peoples

kalpana   kalpana026@yahoo.com

4:40 am , 29-11-2009

Publicity k kaga :
1) EVKS avargal EELAM endra viruchiga marathin verukae vennir utrugirar.
2) Annan Thirumavum , Thambi Seemanum Ilaiku thaneer kaatukirargal.

paavendhan   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

1:48 am , 29-11-2009

paavam vilampara pitchaikkga peatty kodukkindra e v k s. elango, periyarin valithondrala,

paavendhan   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

1:46 am , 29-11-2009

paavam vilampara pitchaikkga peatty kodukkindra e v k s. elango, periyarin valithondrala,


பக்கம்:  1    2    3    4    5   -6-   7    8    9    10    11   

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   3 பேர் இன்று : 723 நேற்று: 4566 மொத்தம்: 9497168
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்