Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt



[பார்க்க]
பாகிஸ்தானில் உள்ள வடக்கு வர்கிஸ்தான் பகுதியில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் ஏராளமானோர் பதுங்கி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் இந்த இடத்தை குறிவைத்து அடிக்கடி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 இடங்களில் அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை இயக்கி அதன் மூலம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. முதல் தாக்குதலில் 4 பேர் உயிர் இழந்தனர். அடுத்த 3 தாக்குதல்களில் 20 பேர் உயிர் இழந்தனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் இறந்தவர்களில் 4 குழந்தைகளும் உள்ளனர். எனவே பொதுமக்களும் இதில் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானில் 2008 ஆகஸ்டுக்கு பிறகு அமெரிக்கா 122 தடவை ஆள் இல்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 1040 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள குராம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் குண்டு வெடித்தது. அப்போது அந்த வழியாக சென்ற பயணிகள் வேன் அதில் சிக்கி கொண்டது. இதில் 10 பேர் பலியானார்கள். 

உங்கள் கருத்து

[பார்க்க]
ரமலான் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நோன்பு மாதமான ரமலானின் முடிவைக் குறிக்கும் புதிய பிறை தோன்றுவது பொறுத்து ரமலான் பண்டிகை நாளை வெள்ளிக்கிழமையோ அல்லது சனிக்கிழமையோ கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று பாதுகாப்புப் படையினரால் 4பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் முழுதும் வன்முறை மூண்டது. பாதுகாப்புப் படயினர் மீது கல்லெறி சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று அனந்த்நாக்கின் சில பகுதிகளிலும் இது தொடர்ந்ததால் அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஆனால் நாளை ரமலான் பண்டிகையை முன்னிட்டு அங்கு ஊரடங்கு முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்தனர்.

உங்கள் கருத்து

[பார்க்க]
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பல்வேறு எதிர்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், மக்கள் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு முறைப்படி மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று அறிவித்திருந்தார். அதன்படி டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அநேகமாக வருகிற 2011 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ளவும், இதற்காக 2 முதல் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்து

[பார்க்க]
மத்திய பிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து
ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60திற்கும் மேற்பட்டோர் உயிர்
இழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஹர்டா என்ற இடத்திலிருந்து இந்தூர் நோக்கி தனியார்
பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டுச்சென்றது. பேருந்தில் அளவிற்கு அதிகமாக
பயணிகளை ஏற்றி இருந்ததால் கட்டேகான் என்ற பகுதியில் அந்தப் பேருந்து நிலை
தடுமாறி அருகிலிருந்த பக்டி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஆற்றில்
வெள்ளப்பெருக்கு அதிகம் இருந்ததால் 60திற்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி
உயிர் இழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 18 பேர்களின்
உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்து பேர் உயிருடன்
மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகிறது.

உங்கள் கருத்து

[பார்க்க]
காமன்வெல்த் போட்டிகளின் விளையாட்டு மைதானங்கள் முழுமையான அளவிற்கு தயார் நிலையில் இல்லாத காரணத்தால், இப்போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் 54 நாடுகளிலிருந்து வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தப் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், பயிற்சி மைதானங்கள், வீரர்கள் தங்கும் அறைகள் என்று பல்வேறு ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஊக்க மருந்து சோதனையில் இந்திய வீரர்கள் 12 பேர் சிக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெல்லியில் நேற்று, போட்டிக்கான போக்குவரத்து வழிக்காட்டல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டன. இதனிடையே, போட்டி ஏற்பாடுகளை நேற்று நேரில் ஆய்வு செய்த அம்மாநில முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் முதன்மை செயலாளர் திரிபாதி, மைதான ஏற்பாடுகள் எதுவும் முழுமையடையவில்லை என்றும், இது தமக்கு கவலை அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இந்த மெத்தனப்போக்கிற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்றும் குற்றம்சாட்டினார். இருப்பினும் போட்டிகள் திட்டமிட்ட தேதியில் வெற்றிகரமான தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், காமன்வெல்த் போட்டிகளின் விளையாட்டு மைதானங்கள் முழுமையான அளவிற்கு தயார் நிலையில் இல்லாத காரணத்தால், இப்போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து

[பார்க்க]
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப் புலிகளை ஒழித்ததாக இலங்கை அரசால் பாராட்டப்பட்டவர் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா. பின்னர் அவருக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பதவியை விட்டு விலகிய பொன்சேகா தேர்தலில் குதித்து எம்.பி. ஆனார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நெருக்கடி நிலையை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பொன்சேகா ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். நான் ராணுவத் தளபதியாக இருந்த போது, முல்லைத்தீவு மாவட்டத்தில், வெள்ள முல்லி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிக் கட்ட போரில், விடுதலைப்புலிகளிடம் இருந்து 200 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அந்த தங்கம் இப்போது யாரிடம், எங்கே இருக்கிறது? அந்த தங்கத்துக்கு என்ன ஆனது? அன்றைக்கு இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.94 கோடி ஆகும். விடுதலைப் புலிகளிடம் இருந்து ஏராளமான பணத்தைக் கைப்பற்ற, தற்போது அரசாங்கத்தால் கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் என்கிற கே.பி.தான் பெரிதும் உதவி செய்தார்’’என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
நடிகர் முரளி மாரடைப்பால் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாலை முரளி வீட்டுக்கு சென்றார். அங்கு முரளி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முரளி மனைவி மற்றும் குழந்தைகளிடம் ஆறுதல் கூறினார். மத்திய மந்திரி நெப்போலியனும் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சிவக்குமார், விக்ரம், வடிவேலு, அலெக்ஸ், கவிஞர் பா. விஜய், டைரக்டர்கள் மணிரத்னம், பாலா, தயாரிப்பாளர்கள் காஜா மைதீன், கே.எஸ். சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச். முரளி. நடிகைகள் கோவைசரளா, ரேகா ஆகியோரும் இன்று அஞ்சலி செலுத்தினர். காலை 10.30 மணிக்கு முரளி உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. பின்னர் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டெம்போ டிராவலர் வண்டியில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் துவங்கியது. அப்போது முரளி மனைவி ஷோபா, மகள் காவ்யா, மகன்கள் அதர்வா, ஆகாஷ் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னால் நடிகர், நடிகைகள் காரில் சென்றனர். பெசன்ட் நகர் மின்சார மயானத்துக்கு வந்ததும் உடல் வண்டியில் இருந்து இறக்கப்பட்டது. முரளி மகன் அதர்வா இறுதிச் சடங்குகள் செய்தார். பகல் 11 மணிக்கு முரளி உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முரளியின் மரணத்தையொட்டி படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன. தென் இந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகிய 4 அமைப்புகளும் படப்பிடிப்புகளில் பங்கேற்கவில்லை. வெளிநாட்டு படப்பிடிப்புக்கு சென்றுள்ள கமல் டெலிபோன் மூலம் முரளி மகன் அதர்வாவிடம் துக்கம் விசாரித்தார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்,   “இறைவனை வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்” என்னும் உயரிய கருத்தை உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத்திருநாள் இசுலாமிய பெருங்குடி மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுது ஏழை-எளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை செழுமைப்படுத்தும் வகையில் ‘ரமலான்’ மாதத்தின் நிறைவிலும் ‘ஷவ்வால்’  மாதத்தின் துவக்கத்திலும்  மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் முன் இந்த ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ‘மனித நேயத்திருவிழா’ என்றே அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்துவதாகும். அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத்திருநாளில் இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இசுலாமியர்களும் தலித்துகளும் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம். ‘உனக்கு’ ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்; ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!’’என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

[பார்க்க]
வேலூரில் இருந்து கடலூருக்கு சென்ற அரசு பஸ்சும், லாரியும் திருவண்ணாமலை அருகே திடீர் குப்பத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக் கொண்டது. 9 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களின் உடல்கள் கரி கட்டையாக கருகி போயிருந்தது. பலியானவர்களில் பஸ் டிரைவர் ரவிக்குமார், கண்டக்டர் மகாதேவன், கேளூரைச் சேர்ந்த பூங்கொடி, சுரேஷ், கீதா, வேலூர் பாகாயத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். மற்ற 3 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாமல் இருந்தது. இதில் 2 பேர் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்கள் போளூர் அடுத்த கிடாம் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ், போளூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரிந்தது. பலியான லாரி டிரைவர் அடையாளம் தெரியவில்லை. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 31 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து

[பார்க்க]
உலகெங்கம் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒருமாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு, கடுமையான நோன்பிலிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை என்னும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள். பேரறிஞர் அண்ணா, “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது: உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றது தான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும் என்கிறார். இப்படி வாழ்க்கைப் பிரச்சினைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப்பின் பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென் பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி, உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி, உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி, உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி, தமிழ்நாடு திருமணப்பதிவுச் சட்டம்- 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும், உயர் கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உள்பட பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவு கூறுகிறேன். இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமை யைச் செம்மையாக நிறை வேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனை வருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

உங்கள் கருத்து

[பார்க்க]
158 பேரை பலிகொண்ட மங்களூர் விமான விபத்துக்கு விமானி தூங்கியதே காரணம் என்று கருப்பு பெட்டி மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மே மாதம் 28-ந் தேதி துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 152 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமானப் பணியாளர்களும் பலியானார்கள். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிவான தகவல்கள் பற்றிய முதல் கட்ட அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி, விபத்து நடப்பதற்கு முன்பு 1 மணி 50 நிமிடம் தூங்கினார் என்ற தகவல் கருப்பு பெட்டியில் பதிவான உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். சிலாட்கோ குலுகியா (55) என்ற விமானி ஓட்டி வந்தார். 2 ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்ற இவர் விமானம் பறக்கும் போதே இருக்கையில் இருந்து சுமார் 2 மணி நேரம் தூங்கி இருக்கிறார். கட்டுப்பாட்டு அறை உரையாடலின் போது 110 நிமிடங்கள் இவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது. விபத்து நடப்பதற்கு முன்பு விமானம் வழக்கமாக பறக்கும் 2 ஆயிரம் அடி உயரத்துக்கும் பதிலாக 4 ஆயிரத்து 400 அடி உயரத்தில் பறந்துள்ளது. மேலும் மங்களூர், விமான நிலையத்தில் குறிப்பிட்ட தூரத்தில் இறங்காமல் குறுகிய தூரத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விமானி திடீர் என்று கண் விழித்து, மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கியதால் தூக்க கலக்கத்தில் சரியான தூரத்தை கணிக்க தவறி விட்டார். இதனால் விமானம் நீண்ட தூரம் ஓடி நிற்க முடியாமல் வேகமாக சென்று காம்பவுண்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமானி விழிப்பாக இருந்து சரியாக செயல் பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான விபத்து பற்றிய முழு விவரம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்து

[பார்க்க]
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவி்ன் ராக்கெட் சோதனை மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான திரவ என்ஜினின் இறுதி கட்ட சோதனை பெரும் வெற்றி பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மலைப் பகுதியில் உள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ராக்கெட் சோதனை மையம். இந்திய ராக்கெட்டுகளுக்கு உந்து சக்தி தரும் திட, திரவ எரிபொருள்கள் இங்கு தான் சோதனையிடப்படுகின்றன. அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ என்ஜின்கள் பயன்படுகின்றன. இதுவரை வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான என்ஜின்களையே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இப்போது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த என்ஜின்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. தகவல் தொடர்புக்கு உதவும் ஜி-சாட் 4 செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முயற்சி நடக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் எல்110 டி2 திரவ என்ஜினின் சோதனை, கடந்த மார்ச் 5ம் தேதி மகேந்திரகிரி மையத்தில் நடந்தது. ஆனால், அப்போது 200 வினாடிகளுக்கு இயங்க திட்டமிடப்பட்ட என்ஜின் 150 வினாடிகள் மட்டுமே இயங்கியது. இதனை வெற்றி என அப்போது அதிகாரிகள் கூறினாலும் மீண்டும் 200 வினாடிகளுக்கு என்ஜினை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 5 மாதங்களாக இரவு பகலாக நடந்தன. நேற்று மாலை 3.50 மணிக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் என்ஜின் 200 வினாடிகள் இயங்கி முழுமையான வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளின் தொழில்நுட்பத்துடன் கூடிய என்ஜின்களை தனது ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் பயன்படுத்தி வந்த இந்தியா, இனிமேல் தானே உருவாக்கிய என்ஜினால் ஆன ராக்கெட்டுகளை பயன்படுத்த முடியும்.

உங்கள் கருத்து

[பார்க்க]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பெண் மருத்துவர்களை தாக்கியதால் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளது.

வேலை நிறுத்தத்தின் காரணமாக போதி சிகிச்சையில்லாமல் நோயாளிகள் தவித்தனர். எனவே மருத்துவமனைக்கு வெளியே புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டு தனியார் மருத்துவர்கள் சிகிச்சைமேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக ராஜஸ்தானில் வேலைநிறுத்தம் தொடர்ந்து நீடிக்கிறது.

உங்கள் கருத்து

[பார்க்க]
புதுடெல்லி விஞ்ஞான்பவனில் இதற்கான விழாவில் அவர் பங்கேற்றார். மாவட்டத்திற்கு ஒரு நவோதாயப் பள்ளி உருவாக்கப்படும் என்று மிகச்சிறந்த கல்வி இன்று அளிக்கப்படுகிறது. இதன்பயன்களை சாதாரண ஏழை – எளிய மாணவர்கள் பெரும் வகையில் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

கல்வித்துறையின் வளர்ச்சிக்கு பண்டித ஜவஹர்லால் நேருவும், ராஜூவ்காந்தியும் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார். இந்நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில் கலந்துகொண்டு நவோதயாப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்.

இதில் ஏராளமான மாணவ – மாணவியர் மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள் பங்கேற்றனர். அனைத்துலக எழுத்தறிவு தினத்தையொட்டி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

உங்கள் கருத்து

[பார்க்க]
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர் கருணாநிதி 7 ஆயிரத்து 592 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 538 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளையும் துவக்கிவைத்தார்.  

நிகழ்ச்சியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரிநீர் பிரச்சனை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நடத்திவருகிறது என்றும், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை விவசாயிகளுக்கு பெற்றுதரும் என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் எனறும் உறுதிபட தெரிவித்தார்.

இதற்கிடையே தொல்லியல்துறை சம்மந்தமாக மைசூர் பல்கலைக்கழகத்திற்கும், தஞ்சை பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது. 

உங்கள் கருத்து

[பார்க்க]
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டல சிறப்பு செயற்குழுக்கூட்டம் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கோவை மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், வரும் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கம் எண்ணிக்கையிலான தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள 80 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக தலித் சமூகம் விளங்குகிறது என்;றார்.

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் பாமக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை இக்கூட்டணிக்கு அழைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது அணி அமைந்தால் பாமக தலைமையேற்க விரும்புவதாக மருத்துவர் ராமதாஸ் கூறுவது அக்கட்சியின் காலம் கடந்த முயற்சி. அதற்கான வாய்ப்பை பாமக கை நழுவ விட்டுவிட்டது என்றார்.

இந்த கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



உங்கள் கருத்து

[பார்க்க]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளி, 98 படங்களில் - கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 1984-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாலச்சந்தரின் 'பூவிலங்கு' திரைப்டத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். இவர் சென்னை வளசரவாக்கம், இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நெஞ்சவலி ஏற்பட்டு முரளி மயங்கிவிழுந்துள்ளார். இதனையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து முரளியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ராதிகா, சரத்குமார், இயக்குனர் சேரன், நாசர் உள்ளிட்ட ஏராளனமான திரையுலக நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

நாளை காலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.



உங்கள் கருத்து

[பார்க்க]
வேலூரில் இருந்து கடலூர் நோக்கிவந்த அரசு பேருந்தும், சேலம் ஆத்தூரில் இருந்து ஆந்திராவை நோக்கிச்சென்ற லாரியும் திருவண்ணாமலை மாவட்டம், மல்ல வாடியருகே இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

அப்போது பேருந்து டீசல் டாங்க் வெடித்து சிதறியது இதனால் பேருந்தும் லாரியும் தீபற்றி எரிந்தது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே பேருந்து – லாரி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் உட்பட10 பேர் கருகி பலியானார்கள். 31 பேர் படுகாயமுற்றனர்.

காயமுற்றவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறை உயரதிகாரி ஜெயராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பிச்சாண்டி, அக்ரி.கிருஷ்ணமூர்;த்தி, விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்;குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  



உங்கள் கருத்து

[பார்க்க]
கரூர் ஸ்டார் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் - மாணவியருக்கான  கூடைப்பந்துப் போட்டி கடந்த நான்கு நாட்களாக திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றுவந்தது. இப்போட்டியில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து பலர் கலந்துகொண்டனர்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சத்தியபாமா பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது. பெண்கள் பிரிவில் மதுரை அணி வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். 

உங்கள் கருத்து


கருத்துரை:

கருத்துரைகள் மொத்தம் :143. பக்கம்4 / 15.

sathya   sathya258@gmail.com

1:59 am , 16-03-2010

thank you tamilan television

PAAVENDHAN.SOU   soupaa64@gmail.com

8:50 am , 11-03-2010

MAGALIR MASODHA VETRI, VIDUTHALAI SCIRUTHAIGALIN VETRI, MELUM UL ODHUKKEEDUM, 50% MUM MAGALIR IDAODHUKEEDUM NAAM ETHIKOLLUM PORATTA VADIVAM

arulmozhi   earulmozhi@hotmail.com

8:13 pm , 09-03-2010

very good updated news keepitup

Johncy   admin-india@ui2u.com

2:40 pm , 07-03-2010

Every saturday and sunday i used to watch your night news. Madam Debi and some other girl are reading. But You dont flash madam Debi's news in a proper way. And Begining and Finishing head news are always read by other girl. Why are you showing the f... மேலும்.. »

youvanesh   noneed

9:14 am , 25-02-2010

karuna "he is a tamil dog"

pe.chidambaram   pechid@gmail.com

1:12 am , 25-02-2010

very excellent

PAAVENDHAN.SOU   soupaa64@gmail.com

9:37 am , 21-02-2010

superum, altimettum - unmaiyana thalai- yin (thirumaa) eyacharikkai

deiva   maisjd

12:27 pm , 20-02-2010

deva ne pas parti ecole

senthil   usk8191@yahoomail.com.sg

11:54 pm , 31-01-2010

இந்தியா வெல்லும் கண்டிப்பாக.....

Mohamed Jakariya   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

8:17 am , 20-01-2010

Thank you vc parties


பக்கம்:  1    2    3   -4-   5    6    7    8    9   

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   5 பேர் இன்று : 1292 நேற்று: 3140 மொத்தம்: 9506078
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்