மத்திய – மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் . நக்சலைட்டு பிரச்சினைக்கு 3 ஆண்டுகளில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2010-07-29 21:20:46
டெல்லியில் நேற்று நாடாளுமன்ற ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது நக்சலைட்டுகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக அவர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் காவல்துறையினரின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் நக்சலைட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டதன் விளைவாக அனைத்து பாதுகாப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய – மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் நக்சலைட்டுகளை ஒடுக்கி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.