கடந்த ஓராண்டில் மட்டும் கலைஞரின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்காக 415 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
2010-07-29 21:17:30
நீரழிவு 2010 என்கின்ற பெயரில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவரக்களுக்கான ஆலோசனை மற்றும் கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள இராணிமெய்யம்மை மகாலில் நடைபெறுகிறது. கண்காட்சியை தமிழக குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்பபோது நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நகர்புரங்களில் 14 முதல் 16 சதவிகிதம் வரையிலும், கிராமப்புரங்களில் 10 முதல் 12 சதவிகிதம் வரையிலும் உள்ளனர் என்று தெரிவித்த அவர், தமிழக அராசல் கொண்டுவரப்பட்ட கலைஞரின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 317 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அதற்காக அரசு ரூபாய் 415 கோடி செலவழித்துள்ளது என்று தெரிவித்தார். விழாவில் மருத்துவர் அஞ்சனா, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம்,. நீரழிவு நோய் தடுப்பு மருத்தவமனையின் தலைவர் டாக்டர் மோகன், மருத்துவர்கள் இரவிச்சங்கர், இரஞ்சித்உன்னிகிருஷ;ணன் ஆகியோர் சர்க்கரை நோய் குறித்து விளக்கிப் பேசினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.