இந்தியாவின் சார்பில் இலங்கைக்கு சிறப்பு தூதர் ஒருவரை அனுப்புவது தேவையற்ற செயல் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
2010-07-22 08:21:33
கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு ஐ.நா அமைத்துள்ள ஆய்வு குழுவை இலங்கை அனுமதிக்காமல் உள்ளதை இந்திய அரசு கண்டிக்காதது ஏன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவதாகவும் வைகோ குற்றம்சாற்றியுள்ளார். விலைவாசி உயர்வு, மின்வெட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாற்றியுள்ள வைகோ, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து வேதாரண்யத்தில் ம.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.