|
|
|
|
|
|
|
|
|
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 29-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலால்துறை உதவி ஆணையருமான செல்வராஜ் இடமும், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தாமோதரனிடமும் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அமைச்சர்களுடன் செல்ல அதிகாரிகளுக்கு தடைவிதித்துள்ளதாக, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்;.
அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அமைச்சர்களுடன் அதிகாரிகள் செல்வதாக புகார் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சென்றால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். அப்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர், செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
|
கூடன்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கூடன்குளம், செட்டிக்குளம், இடிந்தகரை ஊர்மக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கூடன்குளம் மக்களின் அச்சத்தைக் கேட்டறிய அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் இனியன் தலைமையில் நால்வர் கொண்ட குழுவை அமைத்தது. திருநெல்வேலிக்குச் சென்ற நால்வர் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.
கூடன்குளம் அணுமின் நிலையத்துக்குச் சென்ற அவர்கள் அணுஉலை பாதுகாப்பாக உள்ளது என்றும், விரைவில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நால்வர்குழுவினர் மக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்காததைக் கண்டித்தும், அணுஉலையை மூடக் கோரியும் நேற்றுமுதல் இடிந்தகரை லூர்துமாதா கோவிலில் பொதுமக்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அணுஉலையை மூட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
|
காணொளி செய்திகள் | உங்கள் கருத்து
|
|
|
கருத்துரை:
கருத்துரைகள் மொத்தம் :16. பக்கம்1 / 2. siva 628712 | 9:37 pm , 22-01-2012 | ADMK VALGA |
siva 628712 | 9:36 pm , 22-01-2012 | ADMK VALGA |
Cordelia dKTHyTltATpq | 11:35 pm , 19-01-2012 | I guess finding ueufsl, reliable information on the internet isn't hopeless after all. |
Jobeth UhKdfzJcmGTaxPsjke | 9:05 am , 19-01-2012 | These pieces raelly set a standard in the industry. |
JOE jmjoe60@gmail.com | 11:45 am , 27-11-2011 | naam thamilar yenru sonna tamilar thanthaiyaiyam nadaipayanam merkkonda thol thirumavaiyum marakkadiththa maravan pinnal neengala jeeranikka mudiyavillai |
nb xs fsde@hotmail | 3:32 pm , 18-11-2011 | bncbdg |
seshadri sesh1943@gmail.com | 6:14 pm , 26-10-2011 | very useful your all programmes |
ganeshan wakr qatar | 11:04 am , 20-09-2011 | nod god |
ganeshan wakr qatar | 11:01 am , 20-09-2011 | nod god |
vasanth vasantheee49@gmail.com | 8:55 pm , 06-09-2011 | we want more interesting program in your television. |
பக்கம்: -1- 2
|
|