Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 7
Tuesday , 16 August 2022
Home » உலகம் (page 7)

உலகம்

பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்துக்கு முந்தைய சோதனை ஓட்டம்

பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்துக்கு முந்தைய சோதனை ஓட்டம் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான கார்பந்தய தொடரின் ரேஸ் ஒன் போட்டிகள் சவுதி அரேபியாவின் திரியா நகரத்தில் நவம்பவர் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சீசனில் டிஏஜி ஹியூயர் போர்ஷே எஃப்இ((TAG Heuer Porsche FE)) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூ((Mercedes-Benz EQ)) உள்ளிட்ட கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் போட்டிக்கு முந்தைய சோதனை ஓட்டத்தில் என்விஷன் விர்ஜின் ரேசிங்கின் ... Read More »

பாதாள அறையில் 9 ஆண்டுகளாக வசித்து வந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் மீட்பு

நெதர்லாந்தில் பண்ணை வீடு ஒன்றின் பாதாள அறையில் பல ஆண்டுகளாக அடைப்பட்டிருந்த 6 இளைஞர்களையும் அவரது தந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர். அந்நாட்டின் ரூனர்வொல்ட் கிராமத்தில் பார் ஒன்றுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் வந்த இளைஞர் மீது சந்தேகமடைந்த பார் உரிமையாளர் விசாரித்தபோது தங்கள் ரகசிய அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மது போதையில் அந்த இளைஞர் உளறியுள்ளார். இது குறித்து பார் உரிமையாளர் கொடுத்த தகவலின்போரில் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது இளைஞர் கூறிய பண்ணை வீட்டில் பாதாள அறை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கு ... Read More »

பாகிஸ்தானை அடர் சாம்பல் பட்டியலில் வைக்க வாய்ப்பு

பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் ... Read More »

இரண்டு பெண் எழுத்தாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் விருது

கனடாவைச் சேர்ந்த 79 வயது பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஆட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த 60 வயது பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆண்டு தீவிரமான பரிசீலனைகளுக்குப் பிறகு மார்க்கரெட் ஆட்வுட் எழுதிய தி டெஸ்டமென்ட்ஸ் (The Testaments), எவரிஸ்டோ எழுதிய Girl Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் ... Read More »

காற்றுக் குமிழ்களை ஏற்படுத்தி மீன்களை வேட்டையாடும் ஹம்பேக் திமிங்கலங்கள்

டால்பின்களைப் போன்று ஹம்பேக் திமிங்கலங்களும் காற்றுக் குமிழ்கள் மூலம் வேட்டையாடுவது கடலாராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மீன்களை வேட்டையாட வரும் சிலவகை டால்பின்கள் மீன்களைச் சுற்றி காற்றுக் குமிழ்களை ஏற்படுத்தி, அதன் மூலம் மீன்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வேட்டையாடும் தன்மை கொண்டது. அதேபோல் ஹம்பேக் வகை திமிங்கலங்களும் வேட்டையாடுவது சமீபத்தில் தெரியவந்துள்ளது. தென்கிழக்கு அலாஸ்காவின் கடல் பகுதியில் வலம் வந்த சில திமிங்கலங்கள் மீது ஆய்வாளர்கள் கேமராவைப் பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது பிராண வாயுவை உறிஞ்சும் திமிங்கலங்கள் நீருக்கடியில் சென்று அதனை சீரான ... Read More »

பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை – பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை

வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கூறினார். ‘ ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா ‘பிரெக்சிட்’டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் ... Read More »

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை பதிவு: அக்டோபர் 15, 2019 07:44 IST ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் போராட்டம் வெடித்தது. ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனாலும் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரியும், ஹாங்காங் போலீசாரின் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி ஜனநாயக ... Read More »

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய ஹகிபிஸ் புயல்- பலி எண்ணிக்கை 70-ஐ நெருங்கியது

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலைத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் மழையால் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் வசித்த மக்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புயலால் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான ... Read More »

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் – துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் ஆபத்தாக கருதுவதே தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது. ஐந்து நாட்களுக்கும் மேலாக குர்துக்கள் மீது துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது- ... Read More »

ஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம் டோக்கியோ: ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஜப்பானை தாக்கிய ஹஜிபிஸ் புயல் புஜிசவா: கனமழை மற்றும் சூறாவளியுடன், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை நேற்று தாக்கியது ஹஜிபிஸ் புயல். அதற்கு முன் லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டது. ‘ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப்புற பகுதியான ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com