Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 6
Tuesday , 16 August 2022
Home » உலகம் (page 6)

உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை அமெரிக்காவில் துணி நிறுவன விளம்பர பலகையில் அதிபர் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் துணி நிறுவனம் ஒன்று தனது கடை முன்பு விளம்பர பலகை வைத்துள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உருவத்தினையொத்த ஒருவரை தரையில் கிடத்தி, தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தபடி உள்ளார். பின்பு மற்றொரு கையில் ... Read More »

கடுமையான நிதி நெருக்கடியால் வார இறுதி நாட்களில் ஐநா.சபை மூடப்பட்டது

கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐநா.சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டு விட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என்று ஐநா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா.சபையின் பட்ஜெட்டிற்கு உங்கள் நாடு தனது நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐநா.சபையில் 131 நாடுகளில் இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன. இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை. இதனால் ஐநா.சபைக்கு கடந்த ... Read More »

உலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்

உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான ... Read More »

சிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு

சிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான சந்தை, 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய மிகுந்த நகரங்களின் பட்டியலில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள ‘al-Saqatiyah ’ என்ற சந்தை இடம்பெற்றுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த இந்த சந்தை, போரில் சிதிலமடைந்தது. மேலும் தொடர்ச்சியாக அங்கு போர் பதற்றம் நிலவவே, கடந்த 7 ஆண்டுகளாக அங்குள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்பகுதியில் போர் ஓய்ந்த நிலையில் அண்மையில் இந்த சந்தை மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து ... Read More »

பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாட்டம்

பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு, அதன் கனவு இல்லத்தில் ரசிகர்கள் தங்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. குழந்தைகள் அதிகம் விரும்பி ரசித்து விளையாடும் பார்பி பொம்மையை அமெரிக்காவை சேர்ந்த ரூத் ஹாண்ட்லர் என்பவர் கடந்த 1959வது ஆண்டு உருவாக்கினார். இளம் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள பார்பி பொம்மை, இந்தாண்டு தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு மனிலாவில் உள்ள பார்பியின் கனவு இல்லத்தில், அதன் ரசிகர்கள் ‘விருந்தினர்களாக’ தங்கி செல்லும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. கடற்கரையோரம் உள்ள கனவு இல்லத்தில் ... Read More »

அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து துருக்கி சிரியாவில் போர் நிறுத்தம்.

அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து துருக்கி சிரியாவில் போர் நிறுத்தம் குர்துக்களுக்கு எதிராக துருக்கி ராணுவ தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு எதிராக துருக்கி கடந்த 9 நாட்களாக சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாக துருக்கி – சிரியா எல்லையில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அங்காராவில் அமெரிக்க துணை ... Read More »

மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள் நாகலாந்து அழகி அறிவுரை

மோடியை சந்தித்தால் மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள் என்று கூறுவேன் என நாகலாந்து அழகி கூறி உள்ளார். நாகலாந்தின் தலைநகரான ஹோமியோவில் மிஸ் கோஹிமா அழகிப்போட்டி நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டிலிருந்து இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 12 பெண்கள் கிரீடத்திற்காக போட்டியிட்டனர். இந்த போட்டி பெமினாவுடன் இணைக்கப்படவில்லை, அதிகாரப்பூர்வ மிஸ் இந்தியா போட்டியை ஏற்பாடு செய்கிறது. பெமினா மிஸ் இந்தியா நாகாலாந்து என்ற மற்றொரு போட்டியை ஏற்பாடு செய்கிறது. இருப்பினும், முந்தைய போட்டியாளர்கள் மற்றும் மிஸ் ... Read More »

பேருந்தும், கனரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில், 35 பேர் பலி

சவூதி அரேபியாவில், சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்தும், கனரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில், வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர். ஆசியா மற்றும் பிற அரபு நாடுகளை சேர்ந்த ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் சென்ற அந்த தனியார் பேருந்து, மதீனா அருகே எக்சகவேட்டர் கனரக வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து உருக்குலைந்ததுடன், தீப்பிடித்தும் எரிந்ததாக, சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டுப் பயணிகள் 35 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் அல்-ஹம்னா ... Read More »

36 ஆண்டுகளுக்குப் பின் செயல்பாட்டுக்கு வந்தது யாழ்ப்பாணம் விமான நிலையம்

இலங்கை யாழ்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம் 36 ஆண்டுகளுக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரால் மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் விமான நிலையம் கடந்த 2009ம் ஆண்டு முதல் சீரமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் விமானப் போக்குவரத்துக்காக விமான நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் பலாலி விமான நிலையத்துக்கு இன்று இயக்கப்பட உள்ளது. முன்னதாக இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் நேற்றுமுன்தினம் அங்கு தரையிறங்கியது. விமான ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு ... Read More »

அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் விருந்துக்கு வந்து இறங்கிய இங்கிலாந்து இளவரசர்

5 நாள் அரச பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி, ஆட்டோவில் விருந்துக்கு சென்றனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கினர். முன்னதாக இஸ்லாமாபாத்தில் ஒரு பள்ளிக்கு சென்ற தம்பதி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். 2006 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா பாகிஸ்தானுக்கு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com