வரும் 19ம் தேதியன்று மிகப்பெரிய விண்கல் ஒன்று, பூமிக்கு மிக அருகே கடந்துசெல்ல உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது. அவ்வபோது விண்கல் பூமி மீதோ அல்லது வேறு கிரகங்கள் மீதோ மோதுவதும் அல்லது அவற்றின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைவதும் வழக்கமாக உள்ளது.இதன்படி, 650 மீட்டர் சுற்றளவு கொண்ட ராட்சத விண்கல் ஒன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகில் வர உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.இது பூமியை கடந்து செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், ஒருவேளை பூமி மீது மோதுமா என தீவிரமாக ... Read More »
உலகம்
ஒசாமாவுக்கு வச்சக்குறி தப்பியதா ? அமெரிக்க ராணுவ வீரரின் வாக்குமூலத்தால் பரபரப்பு
ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதும், கொல்லப்பட்டது அவர்தானா என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்த அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டான். பாகிஸ்தானின் அப்போதாபாத் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவப் படையினர், சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர். இந்த ராணுவ நடவடிக்கையில் பங்கேற்று இருந்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ராபர்ட் ஓ-நீல் ((Robert O’Neill)), இந்த சம்பவத்தை தொகுத்து நூல் ஒன்றை ... Read More »
குற்றமும் தண்டனையும் ; ஹோலி பண்டிகை கொண்டாடிய பாக்கிஸ்தான் மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர்
பல்கலைக்கழக வளாககத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்களை, மன்னிப்பு கடிதம் எழுத பாகிஸ்தானின் சிந்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய சிந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பதே முகமது பர்பாத், பத்து மாணவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும் என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் மற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில், சிந்துபல்கலைக்கழகத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகத் தெரிவித்த அவர், அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து மதநல்லிணக்கத்துடன் செயல்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார். ஆனால், கடந்த காலங்களில் ஹோலி பண்டிகைக் ... Read More »
பாசி மூலம் விமான எரிபொருள் தயாரித்த ஜப்பானின் யூக்ளினா நிறுவனம்
ஜப்பானைச் சேர்ந்த யூக்ளினா எனும் நிறுவனம் ஒரு வகை பாசி மூலம் விமான எரிபொருள் தயாரிப்பு சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளது. உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தும் வகையிலான பாசி ஒன்றினை பயிரிடுவதில் அந்த நிறுவனம் சமீபத்தில் வெற்றி கண்டது. அதேநேரம், அந்தவகை பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்க முடியும் என்று யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தற்செயலாகக் கண்டறிந்தனர். இதுகுறித்து யூக்ளினா நிறுவனத்தின் நிறுவனர் மிட்சுருஜுமோ கூறுகையில், குறிப்பிட்ட அந்தவகை பாசியினை பொடியாக்கி, அதன்மூலம் மண்ணெண்ணெய் போன்றதொரு வேதியியல் கலவை கொண்ட ... Read More »
சன் இன் சன் குட்டி’சன்’ ; ஜெர்மனி தயாரித்த செயற்கை சூரியன்..
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜெர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு ... Read More »
அந்தக்குழந்தையே நீங்கதான் சார்…லாரி ஹாரன் அடித்து மகிழ்ந்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் அமர்ந்து ஒலிப்பானை ஒலித்து மகிழ்ந்தார். அமெரிக்காவை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். ஒபாமா மருத்துவக் காப்பீடு திட்டம் திரும்பப் பெறப்பட்டதால் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஓட்டுநர்களின் லாரி வெள்ளை மாளிகைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. இதில் ஏறி சில நிமிடங்கள் வரை ட்ரம்ப் அமர்ந்தார். பின்னர் வாகனத்தில் இருந்த ஒலிப்பானை அழுத்தி மகிழ்ந்தார். இதனையடுத்த லாரி ஓட்டுனர்கள், நிறுவனத் தலைவர்களுடன் ட்ரம்ப் ... Read More »
புதுக்கோள் கணக்கில் புளூட்டோ… கோள் வரிசையில் புதிய அந்தஸ்து
புளூட்டோவுக்கு கோள் என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானி கிர்பி ருன்யன் கருத்து தெரிவித்துள்ளார். பனி மற்றும் பாறைகளால் ஆன புளூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்த கோள் என்ற அந்தஸ்து கடந்த 2006ம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தவிர சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துணைக் கோள்களுக்கும் கோள் என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் கிர்பி ருன்யன் யோசனை தெரிவித்துள்ளார். Read More »
மடியில் கணம் வழியில் பயம் ; வெள்ளைமாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் …
அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் குண்டுவைக்கப் போவதாகச் சென்ற கார் ஓட்டுனரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாஷிங்கடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையின் சோதனை மையத்தின் அருகே நேற்றிரவு ஒரு நபர் காரில் வந்துள்ளார். அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான விசாரணை மேற்கொண்டபோது, வெள்ளை மாளிகைக்கு குண்டுவைக்கப் போவதாகக் கூறியதால் அவர்கள் அதிர்ந்து போயினர். இதையடுத்து உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார், காரை தீவிரமாக பரிசோதித்தனர். ஆனால், காரில் எவ்வித வெடிபொருளும், சந்தேகத்துக்கிடமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. எனினும் வெள்ளை ... Read More »
செத்துப்பிழைக்க தயார் !! மகாராணியின் மரண ஒத்திகை….
உலகின் மிக மூத்த அரசியான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறந்தால் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை பல ஆண்டுகளாக அரச குடும்ப நிர்வாகத்தினர் ஒத்திகை பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரிட்ஜ் ஈஸ் டவுன் என்ற குறிப்புச் சொல் முதல்கொண்டு, 10 நாள் இரங்கலுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏறத்தாழ திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைமுன், அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் ஒட்டப்படவேண்டிய நோட்டீஸ், ஊடகங்கள் இசைக்க வேண்டிய சோக கீத பட்டியல், சில உலக டிவிக்களின் செய்தி வாசிப்பாளர்கள் கறுப்பு ... Read More »
செவ்வாய்கிரகத்தில் உருளைக்கிழங்கா ?…
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக செவ்வாய் கிரகம் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக தெற்கு பெருவியாவில் உள்ள பாம்பாஸ் டிலா ஜோயா பாலைவனம் ஒன்றில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அந்த கிரகத்தில் இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் ... Read More »