Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 2
Thursday , 7 July 2022
Home » உலகம் (page 2)

உலகம்

இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட ஜினைன் அனேஸ்

பொலிவியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு செனேட் அவையின் எதிர்கட்சி உறுப்பினர் ஜினைன் அனேஸ் தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார். பொலிவியாவில் கடந்த 20ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஈவோ மொரேல்ஸ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து பதற்றத்தை தணிக்க மொரேல்ஸ் தனது அதிபர் பதவியை ரஜினாமா செய்ததோடு, பாதுகாப்புக்காக மெக்ஸிக்கோவில் தஞ்சமடைந்தார். இந்தநிலையில், நேற்று பொலிவியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு செனேட் அவையின் எதிர்கட்சி ... Read More »

இத்தாலியில் மீண்டும் வரலாறு காணாத மழை பொழிவு

எழில் மிகுந்த இத்தாலியின் வெனிஸ் நகரை இரண்டாவது முறையாக அடை மழை தாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் லாகூன் நகரில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு வரை 187 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. மேலும் கனமழை பொழிவால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பேரழிவு கால அவசர நிலையை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நகர மேயர் Luigi Brugnaro, அரசிடம் இருந்து நிதி ... Read More »

இந்தோனேஷியாவில் உள்ள காவல்துறை தலைமையகம் மீது வெடிகுண்டு தாக்குதல்

இந்தோனேஷியாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரில் காவல் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவும், புகார் மனு கொடுப்பதற்காகவும் இன்று காலை பொதுமக்கள் பலர் கூடியிருந்த நிலையில், கார் பார்க்கிங் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் காவல் துறை அதிகாரிகள் உள்பட சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. Read More »

அமெரிக்கா பாப் பாடகி கேட்டி பெர்ரி மும்பை வந்தடைந்தார்

அமெரிக்க பாப் – பாடகி கேட்டி பெர்ரி ((katty perry)) இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ளார். வரும் 16ம் தேதி ஒன் பிளஸ் ((ONE PLUS)) நிறுவனம் சார்பில் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கேட்டி பெர்ரி நிகழ்வில் பாடல் பாடவுள்ளார். இந்த நிலையில் நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீண்ட நாட்களுக்கு பின்பு இந்தியா வந்ததில் தான் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்தார்.மேலும் ஒன் பிளஸ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ... Read More »

சிகாகோவில் உள்ள இந்திய துணைத்தூதருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோவில் உள்ள இந்திய துணைத்தூதர் விருந்து அளித்து கவுரவித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், உலக தமிழ் சங்கம் சார்பாக சிகாகோவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதைப் பாராட்டி அவருக்கு “தங்க தமிழ் மகன்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் சுதாகர் தலேலாவை மிச்சிகன் அவென்யூவில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அங்கு ... Read More »

ஊழல்- வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஈராக்கில் போராட்டம்

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடிய 11 பேரை பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்துள்ளனர். அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இந்த மோதலில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் மோதல் சம்பவங்கள் காரணமாக பாதுகாப்புப் படையினரால் ... Read More »

உலகின் மிக வேகமான விமானத்தை மீண்டும் தயாரிக்க முடிவு

அதிவேகமாகச் செல்லும் எஸ் ஆர் 71 ப்ளாக் பேர்ட் ((SR-71 Blackbird)) விமானத்தை மீண்டும் தயாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 1950களில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது லாக்ஹீட் எஸ் ஆர் 71 என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம். 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 3,600 கிலோ மீட்டர் வேகத்தில் அனாயசமாகப் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே ... Read More »

2வது அணு உலைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது ஈரான்

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தனது இரண்டாவது அணு உலையின் கட்டுமானப் பணியைத் தொடங்கியுள்ளது. தெற்கு துறைமுக நகரமான புஷேரில் ரஷ்யாவின் உதவியுடன் இந்த அணு உலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யவிருப்பதால், ஆண்டுக்கு 660 மில்லியன் டாலர்கள் மிச்சமாகும் என அந்நாட்டு அணுசக்தித்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அணு உலை மூலம் மின்சாரம் மட்டும் தயாரிக்கப்படுகிறதா அல்லது அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் அங்கு சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பியப் பொறியாளர்களை பணியிலிருக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக ... Read More »

ரோபோக்களுக்கு இடையேயான சர்வதேச கால்பந்து போட்டிகள்

ரஷ்யாவில் நடந்த ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஆசியா பசிபிக்- 2019 என்ற கால்பந்து போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இதில் பங்கேற்ற ரோபோக்கள் ஆடி அசைந்து கால்பந்து விளையாடிய காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மேலும் மனிதர்களைப் போன்றே ஒன்றுக்கொன்று தள்ளி விட்டுக்கொண்டு கோல் போடுவதில் முனைப்பு காட்டியது அதிசயிக்க வைத்தது. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய ரேபோக்கள் 9க்கு 1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி கண்டன. Read More »

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதலமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக 10 நாட்கள் அரசு முறை பயணமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா சென்றடைந்தார். சிகாகோவில் தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள தமிழ் மக்களிடம் உரையாடுகிறார். இதைத் தொடர்ந்து வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் துணை முதலமைச்சர் அங்கு செயல்பாட்டில் உள்ள ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com