Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உலகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 10
Thursday , 7 July 2022
Home » உலகம் (page 10)

உலகம்

இலங்கை குண்டுவெடிப்புக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம்

இலங்கை குண்டுவெடிப்புக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்ற புகாரை அடுத்து, முப்படைத் தளபதிகளை மாற்றப் போவதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இந்நிலையில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளன்று, 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. கொழும்பு பேருந்து நிலையம், பன்னாட்டு விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றோடு, மூன்று தினங்கள் ஆகியும், பதற்றம் குறையவில்லை.. பொதுமக்கள் பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர். இந்த வெடிகுண்டு ... Read More »

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்

இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இலங்கையில் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தை ... Read More »

மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் இருமுறை நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரதமர் ராஜ பக்சேவும், அவரது அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவரது நியமனம் ... Read More »

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மீண்டும் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நடத்திய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இலங்கையில் அரசியலில் அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசியல் ... Read More »

செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபிய செய்தியாளர் மாயமானது குறித்த விவகாரத்தில் விசாரணைக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டிருந்தார். வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றி வந்த ஜமால் கசோக்கி, அந்நாட்டு மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மாயமாகியுள்ளார். இந்நிலையில் கசோக்கியை சவுதி அரேபிய தூதரக அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து சித்ரவதை செய்து கொன்றதாக துருக்கி அரசு ஆதரவு நாளிதழான யானி ... Read More »

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

உச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த அதிபர் சிறிசேனா, அவரை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை அதிபர் கடந்த 9ம் தேதி கலைத்தார். பொதுத் தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபக்சேயும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, தனது தொண்டர்கள் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சியில் ... Read More »

காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்

ஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா ... Read More »

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிறக்கம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து, இலங்கை நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்தது. பதவியிறக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென ... Read More »

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்

அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், மீண்டும் புற்றுநோய் ... Read More »

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பெண் மந்திரி கைது

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர், விஜயகலா மகேஸ்வரன்(45). தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.தனது உரையின் இடையே, தமிழர்கள் அதிகமாக வாழும்  நாட்டின் வடக்கு மாகாணத்தில்  சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக சுட்டிக்காட்டிய விஜயகலா மகேஸ்வரன், முன்னர் அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் இப்பகுதியை ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக குறிப்பிட்டார்.அவரது இந்த கருத்து இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com