Thursday , 14 November 2019
Home » உலகம்

உலகம்

பின்லேடனை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையை விளக்கும் வகையில் நியூயார்க்கில் கண்காட்சி

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை பிடிக்க, அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான கண்காட்சி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக மைய கட்டிடத்தில், விமானத்தை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 3,000 பேர் பலியாகினர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனை, 10 ஆண்டுகால தேடுதல் வேட்டைக்கு பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் ... Read More »

துருக்கி அதிபருடனான சந்திப்பை பல மணி நேரம் நீட்டித்து சமாளித்த டிரம்ப்

துருக்கி அதிபருடனான சந்திப்பை நீண்ட நேரம் கொண்டதாக மாற்றி, தன்னை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானத்தின் மீதான விசாரணையில் பங்கேற்பதை, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் லாவகமாக சமாளித்து, தவிர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான விசாரணை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனுடன், சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு, பல மணி நேரங்கள் நீண்டு கொண்டே இருந்தது. முதலில் ராணுவ மரியாதை, அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் சந்திப்பு, தனித்து இருவரும் பேச்சுவார்த்தை, ... Read More »

2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரேசில் அதிபர்

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனேரோவை சந்தித்து பேசினார். அப்போது 2020ம் ஆண்டு ஜனவரி 26ல் நடைபெறவுள்ள இந்தியக் குடியரசு தினவிழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, போல்சனேரோவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »

ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி – 150 வனவிலங்குகள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 150 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. மிகவும் குறைவான மழைப்பொழிவு, பருவநிலை மாற்றம், மரங்கள் அழிப்பு போன்ற காரணங்களால் அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தொடரும் இப்போக்கினால் வனஉயிரினங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நீர் மற்றும் உணவின்றி 55 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கடந்த சில வாரங்களில் 150 யானைகள் மற்றும் காட்டெருமைகள், காட்டு ... Read More »

இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக்கொண்ட ஜினைன் அனேஸ்

பொலிவியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு செனேட் அவையின் எதிர்கட்சி உறுப்பினர் ஜினைன் அனேஸ் தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார். பொலிவியாவில் கடந்த 20ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஈவோ மொரேல்ஸ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து பதற்றத்தை தணிக்க மொரேல்ஸ் தனது அதிபர் பதவியை ரஜினாமா செய்ததோடு, பாதுகாப்புக்காக மெக்ஸிக்கோவில் தஞ்சமடைந்தார். இந்தநிலையில், நேற்று பொலிவியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு செனேட் அவையின் எதிர்கட்சி ... Read More »

இத்தாலியில் மீண்டும் வரலாறு காணாத மழை பொழிவு

எழில் மிகுந்த இத்தாலியின் வெனிஸ் நகரை இரண்டாவது முறையாக அடை மழை தாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் லாகூன் நகரில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு வரை 187 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. மேலும் கனமழை பொழிவால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பேரழிவு கால அவசர நிலையை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நகர மேயர் Luigi Brugnaro, அரசிடம் இருந்து நிதி ... Read More »

இந்தோனேஷியாவில் உள்ள காவல்துறை தலைமையகம் மீது வெடிகுண்டு தாக்குதல்

இந்தோனேஷியாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரில் காவல் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவும், புகார் மனு கொடுப்பதற்காகவும் இன்று காலை பொதுமக்கள் பலர் கூடியிருந்த நிலையில், கார் பார்க்கிங் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் காவல் துறை அதிகாரிகள் உள்பட சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. Read More »

அமெரிக்கா பாப் பாடகி கேட்டி பெர்ரி மும்பை வந்தடைந்தார்

அமெரிக்க பாப் – பாடகி கேட்டி பெர்ரி ((katty perry)) இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ளார். வரும் 16ம் தேதி ஒன் பிளஸ் ((ONE PLUS)) நிறுவனம் சார்பில் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கேட்டி பெர்ரி நிகழ்வில் பாடல் பாடவுள்ளார். இந்த நிலையில் நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீண்ட நாட்களுக்கு பின்பு இந்தியா வந்ததில் தான் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்தார்.மேலும் ஒன் பிளஸ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ... Read More »

சிகாகோவில் உள்ள இந்திய துணைத்தூதருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோவில் உள்ள இந்திய துணைத்தூதர் விருந்து அளித்து கவுரவித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், உலக தமிழ் சங்கம் சார்பாக சிகாகோவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதைப் பாராட்டி அவருக்கு “தங்க தமிழ் மகன்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் சுதாகர் தலேலாவை மிச்சிகன் அவென்யூவில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அங்கு ... Read More »

ஊழல்- வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஈராக்கில் போராட்டம்

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடிய 11 பேரை பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்துள்ளனர். அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இந்த மோதலில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் மோதல் சம்பவங்கள் காரணமாக பாதுகாப்புப் படையினரால் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com