Monday , 25 October 2021
Home » தமிழ்நாடு (page 5)

தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வழிநோக்கம் மற்றும் பாலமோர்குளம் ... Read More »

விஷவாயு பலி விவகாரம் – எக்ஸ்பிரஸ் அவென்யூ உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக கழிவுநீர் தொட்டியில், நேற்று அதிகாலை விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அதன் உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற போலீஸ் விசாரணையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டவிதிகளை மீறி எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகிகள் செயல்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இளைஞர் ஒருவர் மயமக்கமடைந்து சிக்கியபோது, அதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்தததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். ... Read More »

ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்த விஜயகாந்த் ஆளுமைமிக்கவர் – சீமான்

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது துணிச்சலுடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் ஆளுமைமிக்கவர் என்றும், வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வந்தேன் என்று சொல்பவர்கள் ஆளுமை மிக்கவர்கள் அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1996 ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக அருகில் மூப்பனாரை வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினிகாந்த் அதன்பிறகு ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் கேள்வி விடுத்தார். Read More »

4 புதிய மாவட்டங்கள் உதயம்.. தமிழ்நாடு அரசு அரசாணை..!

செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், புதிய தாலுகா விவரங்களையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12ஆம் தேதியிட்டு, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக ... Read More »

தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை திரட்டுவதற்காக அரசமுறை பயணத்தில் அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பாக நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நீண்ட காலமாக பொருளாதாரம், வர்த்தகம், வாணிபம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் நல்லுறவு உள்ளதாக தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன ரயில்கள், தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை ... Read More »

உள்ளாட்சி தேர்தலில் காதுக்கேட்காதோர், வாய் பேசமுடியாதோர் நகர்புறங்களில் போட்டியிடலாம் – தமிழக அரசு

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி தேர்தலில் நகர்புறங்களில் போட்டியிலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதைப்போன்று தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி ... Read More »

அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More »

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்

பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக் கல்லூரிகளின் தேர்வு அட்டவணைகளும் கோரப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுகள் முடிந்த பின்னர் உள்ளாட்சித்தேர்தலை நடத்தலாம் என திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், ... Read More »

துணைமுதல்வருக்கு ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். அமெரிக்கா,சிகாகோவிலுள்ள நெபர்வல்லியில் மெட்ரொபாலிட்டன் பேமிலி சர்வீசஸ் என்ற அமைப்பு சார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் அந்த அமைப்பின் நிறுவனரால் வழங்கப்பட்டது.இதனைதொடர்ந்து சிகாகோ நகரிலுள்ள இந்திய துதகரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் இந்திய தூதகர அதிகாரி ... Read More »

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும். சென்னை திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com