Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு (page 5)

தமிழ்நாடு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த சத்துணவு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

WORKER1

தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த சத்துணவு ஊழியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூக்கால பணிக்கொடை ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும், மாணவர் ஒருவருக்கான உணவு செலவின தொகையை ஒன்றரை ரூபாயிலிருந்து, ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் 10-பேரை, அழைத்துப் பேசிய சமூக நலத்துறை செயலாளர் மணிவாசன், உணவு மானியத் தொகை, போக்குவரத்து படியை உயர்த்தி வழங்குவதாக ... Read More »

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

cracker

பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் ... Read More »

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!!

school

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து கடந்த மூன்று நாட்களாக பல ஊர்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடலோர ... Read More »

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்பு!!

Nutrino

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு ரூபாய் 1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் அளித்தது. இதற்கான பணிகள் 2011ம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை கொண்டு வரக்கூடாது என தேவாரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், பிறக்கின்ற குழந்தைகள் ஊனமாக பிறக்கும்; என கருத்துக்கள் ... Read More »

நாட்டை காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவோம்

rahul-gandhi-naidu

நாட்டை காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி வருவதாக, ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பின், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  நாட்டில், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராகுலின் முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை எனக்கூறி, கடந்த மார்ச் மாதம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, விலகிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அண்மையில் டெல்லி வந்த ... Read More »

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை!

anti-corruption

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் கணக்கில் வராத 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசில் வருமானம் ஈட்டக்கூடிய துறைகளான, பத்திரப்பதிவு துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிக வரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்; ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள், பட்டாசுகள் லஞ்சமாக வாங்குவதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு புகார்கள் வந்தன. தொடர் புகார்களையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ... Read More »

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

balachandiran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தென் தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்த பாலச்சந்திரன், இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளுர் மாவட்டம் புழல் ... Read More »

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை இல்லை

chennai high court

உரிமத்துடன் செயல்படும் நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, டி.என்.மெட்ஸ் டாட்காம் என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க கோரி, நீதிபதி மகாதேவன் முன் முறையிடப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற ... Read More »

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை!

ambulance

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும் போராட்டம் சட்ட விரோதமானது என அறிவிக்கவும் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன் இந்த வழக்கு தொடரப்படுவதாகவும் அரசு இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர். ... Read More »

அப்போலோ மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, ஜெயலலிதா உணர்வற்ற நிலையில் இருந்தார்!

1

அப்போலோ மருத்துவமனையில் சென்று பார்த்தபோது ஜெயலலிதா உணர்வற்ற நிலையில் இருந்தார் என தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்-ராவ், கடந்த 2016-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவக் குறிப்புகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தன? மருத்துவமனையில் ஆளுநர் முதல்வரை பார்த்துவிட்டு சென்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா? என்பன உள்ளிட்ட கேள்விகள் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com