Tuesday , 2 March 2021
Home » தமிழ்நாடு (page 4)

தமிழ்நாடு

குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது – முதலமைச்சர்

குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வளத்துறை நிலை குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வள துறை நிலை குறித்து பேசிய முதலமைச்சர், முன்னதாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் தொடர்பான புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், நீர் மேலாண்மையை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவாக தெரிவித்த ... Read More »

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு துவங்கியது

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள். தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் போட்டி யிடுவதற்காக அதிமுக ... Read More »

வெங்காய விலை மீண்டும் உயர்வு..!

வரத்து குறைந்ததால் சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதால், 80 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் 60 ரூபாயாக வரை குறைந்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயத்தின் வரத்து மீண்டும் குறைந்துள்ளதால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 60 ரூபாய் வரை ... Read More »

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக வதந்தி பரப்புகிறது – ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார். சென்னை கொளத்தூரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவிகளுக்காக அனிதா பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், பயிற்சி பெற்ற 128 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்துக்கூடாது என்பதில் அதிமுக ... Read More »

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மண்சரிவால் இரு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலைப்பாதை வழியாக நூற்றாண்டைக் கடந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழையால் ஆடர்லி – ஹில்கிரோ ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவால் பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் ... Read More »

தமிழகத்தில் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் : கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அதில், எத்தனை இடங்களில் போட்டியிடுவது, எத்தனை இடங்கள் கேட்பது, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகள் என்னென்ன என்பது பற்றி ஆலோசிக்கப்படும். திமுக கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் சந்திக்கவில்லை. ... Read More »

விஜயகாந்த் அரசியலில் சாதித்தது என்ன? – அமைச்சர் பாஸ்கரன் கேள்வி

விஜயகாந்த் அரசியலுக்கு வந்து சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் பாஸ்கரன், இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறினார். சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கால்நடை தீவனங்கள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் எந்திரங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கையில் பாதாள சாக்கடை பணிகள் உள்ளாட்சி தேர்தலுக்குள் முடிவடையும். காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் ... Read More »

கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்

தமிழகத்துக்கு என ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி மேலும் 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். Read More »

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தவனை போலீசார் கைது செய்தனர். கக்கன் நகரைச் சேர்ந்த ராஜனுக்கும் மனைவி பஞ்சவர்ணத்துக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தீயில் எரிந்து அலறி துடித்த பஞ்சவர்ணத்தை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில் தனது கணவனே தன் மீது உள்ள ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீவைத்து கொளுத்தி விட்டதாக ... Read More »

இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார் துணை முதலமைச்சர்

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிகாகோவில் நடைபெற்ற இந்திய – அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார். அதில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு நூறு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது. அதேபோன்று சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம், அங்கு செயல்படுத்தப்படும் வீட்டுவசதி திட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை திட்டங்களுக்கு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com