Monday , 25 October 2021
Home » தமிழ்நாடு (page 30)

தமிழ்நாடு

நாட்டை காக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க முன்மொழிவோம்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சி தருக என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார். சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் முன்பு கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். சிலைத் திறப்பு விழாவில் ... Read More »

மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்!

மேகதாது விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகள் பேச முன்வரவேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ சித்தகங்கா மடம் சாமியார் சிவக்குமாருக்கு கடந்த சில தினங்களாக கல்லீரல் மற்றும் கணையத்தில் தொற்று நோய் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிவக்குமார் சாமியார் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரை சந்திக்க வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே இருப்பது, இந்தியா பாகிஸ்தான் ... Read More »

சூடுபிடிக்கிறது குட்கா ஊழல் வழக்கு! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் இன்று ஆஜர்!!

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் இன்று விசாரணையில் ஆஜராகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருட்கள் சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில், குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் ... Read More »

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஓ.பி.எஸ் ஆஜராக சம்மன்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இதுவரை மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 130க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து, இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதை ஏற்ற அவர், இன்று காலை 10 மணிக்கு, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? என்பது ... Read More »

டி.எஸ்.பி.விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.தொடர்ந்து விசாரிக்கலாம்!

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி விஷ்ணுபிரியா அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை செய்து கடந்த ... Read More »

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் 740 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ள ஊழலுக்குக் காரணமான அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, சென்னை மாநகராட்சியில் ஊழல் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். சில ஒப்பந்தங்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் ... Read More »

டி.டி.வி.தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில், வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள

டி.டி.வி. தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில் வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. சார்பில், புயல் பாதித்த மாவட்டங்களுக்கான நிவாரண உதவிகளின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டைக்கு 2 லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார். புயலால் வீடு இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒருசிலர் வேறு கட்சிக்கு செல்வதாக வெளியான ... Read More »

மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனு மீது விசாரணை

மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு, மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு ... Read More »

வட தமிழகத்தில் 13-ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு !

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகும் புயல் காரணமாக வட தமிழகத்தில் 13-ஆம் தேதி முதல் வலுவான காற்றுடன் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா ... Read More »

கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்!

கும்பகோணத்தில், அபயம் தேடி நின்ற ராஜஸ்தான் மாநில இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியில் வேலைக்கான பயிற்சியில் சேர்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் அங்கு வந்தார். கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்றை பிடித்த இளம்பெண், தாம் தங்க வேண்டிய ஹாஸ்டலின் முகவரியைக் குறிப்பிட்டு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com