Tuesday , 2 March 2021
Home » தமிழ்நாடு (page 3)

தமிழ்நாடு

புதிய மாவட்டத்தின் துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயகுமார் ஆலோசனை

செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் ஆலோசனை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து அதன் துவக்க விழா வரும் 29ம் தேதி செங்கல்பட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில் விழா நடைபெறும் மைதானம் மற்றும் அரசு அலுவலகங்கள் அமையும் இடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ... Read More »

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தற்போது 15 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெற வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானைகளைக் கட்டுப்படுத்த 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் யானைகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நொகனூர் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. தற்போது சானமாவு பகுதி ஒட்டியுள்ள ராமாபுரம், பாத்தக்கோட்டா, ஆழியாளம், பேரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதால் நெல் பயிர்களை சேதப்படுத்துமென விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ... Read More »

6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு

சென்னையிலும், திருவண்ணாமலை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலையில் பரவலாக மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது சென்னை சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் அதிகாலையிலும் மிதமான மழை பெய்தது. நாகை நாகை மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திருவாய்மூர், ... Read More »

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாசனத்திற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து வரும் 20ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் திறந்துவிடும்படி வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டு இரு அணைகளில் இருந்தும் வரும் 20ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆயிரத்து 925 புள்ளி 95 ... Read More »

பரவலாக பெய்யும் மழை.. குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலையில் மழை நீர் ஓடியது. இதேபோல் சேலையூர், முடிச்சூர், கேம்ப் ரோடு, மாடம்பாக்கம், செம்பாக்கம், பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் கடலூரில் இன்று காலை முதல் கன ... Read More »

தொடர் ஜோதி நடைபயணத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நதிநீர் பிரச்சினையில் என்ன செய்தார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி விடுத்துள்ளார். மதுரையை அடுத்த பேரையூரில் அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தின் போது ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று கூறினார். மேலும், அதிமுக தலைவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் என்றார். Read More »

தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..!

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததது. நெல்லையில் 83 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி பகுதியில் 100 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை அளவு பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி: தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதில் மின்சார ... Read More »

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர், தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டை திறந்துவைத்தார். மேலும், ஸ்ரீ பத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் என்ற பட்டமும், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் வீரத்தமிழன் என்ற பட்டமும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. முன்னதாக, வாஷிங்டன் நகரில் அமெரிக்க-இந்திய சிறிய நடுத்தர தொழில் முதலீட்டாளர் கவுன்சில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், முதலீடுகளுக்கு ஏற்ற ... Read More »

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை ... Read More »

உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் தான் அதிமுக வலுப்பெறும் என்கிற நிலையில் கட்சி இல்லை என்றார். உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் சாடினார். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com