Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு (page 3)

தமிழ்நாடு

தென்காசி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்இருதரப்பினரிடையே மோதல்

5

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தை காவல்துறையினர் லேசான தடியடி செய்து கலைத்தனர்.நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையில் ஒரு தரப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்நிலையில் செங்கோட்டை மேலூர் வழியாக கீழ பள்ளிவாசல் அருகே கொண்டு வரும் போது அந்தபகுதியை சேர்ந்த சில இஸ்லாமியர்கள் இந்த வழியாக சிலையை எடுத்து வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லேசான தடியடி ... Read More »

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Petrol

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது. Read More »

மல்லையா ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

MK-Stalin

மோசடி மன்னன் மல்லையா ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா, நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம், பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையேல் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் அவரது ட்விட்டர் ... Read More »

3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டம்!

2

மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மூலம் 31 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் 15-க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுகள் நடத்தக்கூடிய பள்ளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்கிறது. சர்வ-சிக்ஷா-அபியான், ராஷ்டீரிய-மத்திய-மிக்-அபியான் ஆகிய திட்டங்களின் கீழ், ஏற்கெனவே பள்ளிகளுக்கு ... Read More »

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு!!

3

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கமணி, காற்றாலை மின்சாரம் குறைந்ததால் சில இடங்களில் அரைமணி நேரம் மட்டும் மின்வெட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது என்றும், நிலக்கரி கொள்முதல், மின்வாரிய ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ளதாக அவர் சாடினார். மத்திய தொகுப்பில் ... Read More »

முதலமைச்சர் பழனிசாமி மீதான ஊழல் புகார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

court

முதலமைச்சர் பழனிசாமி மீதான ஊழல் புகார் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை 17-ஆம் தேதி தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூபாய் 4 ஆயிரத்து 800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், முதலமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதாக கூறப்படுவது அடிப்படை ... Read More »

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவிற்கு, பாரதரத்னா விருது வழங்க வேண்டும்!

CM-Edappadi-palanisamy

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடியை, முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பேரறிவாற்றலுடன் தனித்துவமிக்க தலைவராக விளங்கிய அண்ணா, திராவிட தலைவர்களிலேயே உயர்ந்தவராக திகழ்வதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாமர். கடந்த 9-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை ஏற்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என ... Read More »

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை 35 லட்சம் ரூபாய் பறிமுதல்

1

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். இடைத்தரகர் செந்தில் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 35 லட்சம் ... Read More »

சென்னை-சேலம் இடையே அமையவுள்ள, 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றம்!

road

சென்னை- சேலம் இடையே அமையவுள்ள பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருத்தங்களைச் செய்துள்ளது. சென்னை- சேலம் இடையே 277 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் பாரத்மாலா பர்யோஜனா திட்டத்தின் கீழ் அமைய உள்ள இந்த சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ... Read More »

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

MK-Stalin

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்து கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தையே, மின்துறை அமைச்சர் தங்கமணி இருட்டுக்குள் தள்ளிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குறைகூறியுள்ளார். பராமரிப்பு, பழுது என்ற போர்வையில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com