தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கியது. அன்று ஆளுனர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். அந்த சட்டசபைக் கூட்டத்தொடர் இன்னும் முடிவு பெறவில்லை. தேதி குறிப்பிடாமல் அவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 6-ந் தேதி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு, ஆளுனர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைஇம்மாத ... Read More »
தமிழ்நாடு
தமிழக-இலங்கை மீனவர் இடையே சென்னையில், 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இயலாது!
தமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை சென்னையில் 11-ம் தேதி நடத்த இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ந் தேதி இலங்கைக்கு செல்கிறார். அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலைக்கும் செல்வார் ... Read More »
நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது அல்ல!
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல என்று கூறினார். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று கூறிய அவர் ஏழைகள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தலித் சகோதர சகோதரிகள் என அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், முந்தைய அரசு ... Read More »
தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெறுகிறது. தி.மு.க. உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கனிசமான அளவு வாக்குகளை பெற்ற தி.மு.க. புதிய எழுச்சியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையில் பலமான அணியை அமைக்கவும், மாவட்ட பகுதிகளில் தி.மு.க.வின் வாக்குவங்கியை பலப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே, ... Read More »
பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டம்! தமிழகத்தில் 4 நாட்கள் முகாம்
பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கான முகாம்கள் ஏப்ரல் 12 மற்றும் 26, மே 10 மற்றும் 24 ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை பிழையில்லாமலும், வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இல்லாத அளவுக்கு செம்மைப்படுத்தி, அதன் விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம்; நேற்று தொடங்கியது. இந்த திட்டத்தின் படி, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், தாமாக முன்வந்து அதை ... Read More »
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசியில் 12 சதவீதத்துக்கும் கூடுதலான அரிசி கடத்தப்படுவதை சாதாரண விஷயமாக ஒதுக்கிவிட முடியாது. அரிசி கடத்தல் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமானவை அல்ல ... Read More »
பிழை இல்லாத வாக்காளர் பட்டியல், திருத்தம் பணி தொடக்கம்!
பிழையே இல்லாமல் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வது தொடர்பாக, தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நடத்துகிறார். இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மாநில கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த இரண்டு ... Read More »
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை, தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்!
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், விபத்தில் இறந்தால் நஷ்டஈடு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் இந்தச் ... Read More »