Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு (page 234)

தமிழ்நாடு

தமிழகம்,புதுவையில் இன்று பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. பத்தரை லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11-ஆயிரத்து 827 பள்ளிகளிலிருந்து பத்தரை லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3-ஆயிரத்து 298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை தமிழ் வழியில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 50-ஆயிரத்து 429 பேர் எழுதுகின்றனர். மேலும் இன்று நடைபெற ... Read More »

விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும், மசோதவை சட்டமாக்க முயற்சி!

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை மறந்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் முதுகெலும்பை முறிப்பதை போன்றதொரு மசோதாவை சட்டமாக்கிட முயன்றிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் உரிமையை பறித்திடும் வகையிலும், பன்னாட்டு தொழிலதிபர்களுக்கு உதவிடும் நோக்கத்தோடும் சில திருத்தங்களை புகுத்தி நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மக்களவையில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தினால் நிலத்தை இழக்கும் விவசாயிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்று அவர் கூறியுள்ளார். யாருடைய சம்மதத்தையும் பெறாமலேயே ... Read More »

தமிழக-இலங்கை மீனவர்களிடையே, 3-வது கட்ட பேச்சுவார்த்தை!

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் வரும் 24ம் தேதி நடத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இருதரப்பு மீனவர்களும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையிலும், மே மாதம் கொழும்புவிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 3வது கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த இருதரப்பும் முடிவு செய்தது. ஆனால் இதற்கான தேதியை இறுதி செய்வதில் ... Read More »

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை, மாநில அரசு மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும்!

பார்வையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசு மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பார்வையற்ற பட்டதாரிகள் போராடி வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இவர்களின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கை ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ள வாசன், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பார்வையற்ற மாணவர்களையும், பட்டதாரிகளையும் அழைத்து, மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த ... Read More »

வரும் மார்ச் 25-ம் தேதி, கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை வரும் மார்ச் 25-ம் தேதி கூடும் என்றும், அன்றைய தினமே தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 25-ம் தேதி, காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, ஆளுநர் தேதி குறித்ததற்கு இணங்க மார்ச் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் ஜமாலுதீன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ... Read More »

இ.எஸ.;ஐ. மருத்துவக்கல்லூரிகளை நிபந்தனைகளுடன் நடத்தத் தயார்!

தமிழகத்தில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை நிபந்தனைகளுடன் ஏற்று நடத்தத் தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், இ.எஸ்.ஐ-யின் கீழ் சென்னையில் செயல்படும் மருத்துவக்கல்லூரியையும், கோவையில் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரியையும் மாநில அரசு ஏற்று நடத்த நிபந்தனைகளை தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளின் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடான 571 கோடியே 23 லட்சம் ரூபாயை இ.எஸ்.ஐ. நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மேலும்,கல்லூரியை நடத்துவதற்கு ஏற்படும் தொடர் ... Read More »

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் மோடி பயணம் அமைய வேண்டும்!

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் அதிகமானோர் திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி தமாகாவில்இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகம் முழுவதும் தமாகா உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், இளைஞர்கள், ... Read More »

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ்; வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் நடத்திய விவசாயிகளின் நிலைமை குறித்த 70-ஆவது கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளில் 82 புள்ளி 5 சதவீதத்தினர் மீள முடியாத கடன் சுமையில் சிக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 900 ஆயிரம் கடன் இருப்பதாகவும் இக்கணக்கெடுப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ... Read More »

பவானிசாகர் அணையில் இருந்து, இன்று முதல் தண்ணீர் திறப்பு!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளினை ஏற்று,பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு இன்று முதல் ... Read More »

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், கொலு பொம்மைகளைப் போல் நடத்தப்படுகின்றனர்!

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் கொலு பொம்மைகளைப் போல் நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை பொறியாளர் தற்கொலைக்கு அமைச்சர் ஒருவர் காரணம் என்பதை அறிந்தே அதிமுக அமைச்சரின் கட்சிப்பதவியும், அரசுப் பதவியும் பறிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி காலம், மாற்றுத் திறனாளிகளுக்குப் பொற்காலம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென அதிமுக ஆட்சியில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 176 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com