Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு (page 233)

தமிழ்நாடு

காவிரியில் மேகதாது இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை, தடுக்க வேண்டும்!

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்குவது ... Read More »

நெல்லை அதிகாரி தற்கொலை பற்றி சம்பந்தப்பட்டோர், பதில் கூறவேண்டிய நேரம் வரும்!

நெல்லை அதிகாரி தற்கொலை பற்றி சம்பந்தப்பட்டோர் பதில் கூறவேண்டிய நேரம் வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். 4 நாள் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து எந்த கருத்தும் சொல்வதற்கில்லை என திமுக சட்டமன்ற கூட்டத்துக்குப்பின் கட்சித் தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிகாரி தற்கொலை தொடர்பாக யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதிகாரி தற்கொலை பற்றி சம்பந்தப்பட்டோர் பதில் கூறவேண்டிய நேரம் வரும் என்றும் கருணாநிதி தெரிவித்தார். மேலும், அரசின் வருவாயைவிட தமது வருவாயை பெருக்குவதிலேயே கவனமாக ... Read More »

சுகாதார அலுவலர் மரணம் பற்றி, தவறான தகவல் பரப்புவோர் மீது மானநஷ்ட வழக்கு!

மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலரின் மரணத்தை அரசியலாக்கி விளம்பரம் தேடும் அரசியல் தலைவர்கள் மீது தமிழக அரசு சார்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காசநோய் ஒழிப்புத் திட்ட அலுவலராக பணியாற்றிய அறிவொளி, புற்றுநோய் முற்றிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். கடந்த மாதம் 16ம் தேதி கடலில் மூழ்கி அறிவொளி மரணமடைந்த செய்தி வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக காசநோய் பிரிவில் ஒப்பந்த ... Read More »

தமிழக மீனவர்கள் 54 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 54 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவுபுதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றமும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுவிக்க மன்னார் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்படும் மீனவர்களை இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாளை மாலை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More »

இந்திய- இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து, சென்னையில் இன்று பேச்சுவார்த்தை!

இந்திய- இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் ஆலோசிக்க உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக மற்றும் புதுச்சேரி மீனவ பிரதிநிதிகளும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்துகின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இலங்கை குழுவினர் சென்னை வந்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதனிடையே மன்னார், நெடுந்தீவு பகுதிகளில் கடந்த 21-ஆம் தேதி கைதான ... Read More »

வாட்ஸ் அப்பில் பிளஸ்-2 வினாத்தாளை அனுப்பிய விவகாரம் – 5 பேர் இடைநீக்கம்!

வாட்ஸ் அப்’பில் பிளஸ்-2 வினாத்தாளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ் உள்பட 5 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிளஸ்-2 வினாத்தாளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ... Read More »

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குட்லக் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், மாநில செயலாளர் அறிவுமனம் சுந்தரராஜன், நகர தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நாமக்கல்லில் அண்ணாசிலை அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் மாவட்ட தலைவர் செழியன் ... Read More »

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும், விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக் நீரிணை அருகே தமிழக மீனவர்கள் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 மீனவர்களையும் அவர்களின் 10 படகுகளையும் விடுவிக்க நிச்சயமாக பிரதமரின் நேரடி தலையீடு ... Read More »

நிலம் கைகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கைகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.சார்பில் கோ.சி.மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் பழனி மாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் தாலுக்கா ... Read More »

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுக்கப்படும், முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்!

இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க என்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011ம் ஆண்டு வழக்கறிஞர் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவில் இந்திய கடல் எல்லைப் பகுதியில், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களுக்கு கடல் எல்லை பகுதி சரியாக தெரியவில்லை என கூறியுள்ள மனுதாரர் அவர்களுக்கு தானியங்கி அடையாள நிலையம் கொண்டு வர வேண்டும், ஒவ்வொருவரின் படகிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com