Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு (page 232)

தமிழ்நாடு

உடன்குடி மின் திட்டம் திமுக ஆட்சியில், நிறைவேற்றப்பட்ட பணிகள்!

உடன்குடி மின் திட்டத்துக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்பாக கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின் திட்டப் பணிகள் 2007 முதல் 2011 வரை நிறைவேற எந்தப் பணியையும் செய்யவில்லை என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார். உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக ஆட்சியில் ஏன் தாமதம் என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை விட்டு திமுகவைக் குற்றம்சாட்டுவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார். ... Read More »

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறிசேனவுடன், மோடி பேச்சு நடத்த வேண்டும்

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறிசேனவுடன், மோடி பேச்சு நடத்த வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல் சென்னை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அதிபர் சிறிசேனவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச வேண்டும் என திமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய மீனவர்கள் பிரச்சினை என்று தான் தீருமோ? கவலை தெரிவித்துள்ளார்-. இலங்கை மீனவர்களுடன் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் நமது மீனவர்கள் துன்பங்கள் தொடர்கதையாகவே நீடிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை கடற்படையால் ... Read More »

இலங்கை அதிபரிடம் மத்திய அரசு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்!

தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கையை நிராகரித்த இலங்கை அதிபரிடம் மத்திய அரசு கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இலங்கை அதிபர் சிறிசேனா தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கையை நிராகரித்தார். இந்த விஷயத்தில் அவரும், அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் ... Read More »

வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்கள் 33 பேர் கைது!

வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரையும், அவர்களின் 5 படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். நாகை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 33 பேரும், தங்கள் படகுகளுடன் நெடுந்தீவுக்கும், காரை நகருக்கும் இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தது. பின்னர் மீனவர்கள் 33 பேரையும், 5 படகுகளையும் சிறை பிடித்தனர். அவர்கள் அனைவரும் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. இத்தகவலை படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் நாகையில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி ... Read More »

சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை உடனே திறந்துவிட வேண்டும்!

சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை உடனே திறந்துவிடுமாறு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், கோடைக்காலம் நெருங்கி வரும் இச்சூழலில், சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இரு மாநில ஒப்பந்தத்தின்படி, ஜனவரி-ஏப்ரல் இடைப்பட்ட மாதத்தில், 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம், இதுவரை 1 புள்ளி 74 டி.எம்.சி. தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, ... Read More »

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும்!

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் செய்தியாளாகளை சந்தித்தார். அப்போது, பள்ளிக்கல்வி துறை மூலம் தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு கட்டிட வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகம், நூலகம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்க 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் அவர்களது வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாணவிகள் அதிகமாக படிக்கும் 436 பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பறை ... Read More »

தமிழக அரசின் இணையதளத்தில், ஜெயலலிதா பெயர் இடம் பெற்று இருப்பதற்கு யார் காரணம்? !

தமிழக அரசின் செய்தி–மக்கள் தொடர்புத் துறையின் இணையதளத்தில் முதலமைச்சர் பொறுப்பில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருப்பதற்கு யார் காரணம் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறிய பிறகு, தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி ... Read More »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது ராமேசுவரம் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துல்ல சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்குச் சென்றதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது. அதேபோல் விடுவிக்கப்படாமல் இருந்த படகுகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து ... Read More »

தமிழக சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் ஒத்திவைத்து மேலும் 31-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார். நாளை நடைபெறுவதாக இருந்த அலுவல்கள் 30-ம் தேதியும், 30 மற்றும் 31-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அலுவல்கள், முறையே 31 மற்றும் 1-ம் தேதியும் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு ... Read More »

நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தை, தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்!

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கையை கண்டித்து நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு அரசியல் ரீதியான ஆதரவை திரட்டுவதற்காக கடந்த 21-ந் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை ஒருங்கிணைப்பு குழு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com