Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு (page 231)

தமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சியால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை – காங்கிரஸ் தலைவர்

சென்னை தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்றிரவு காங்கிரஸ் பொதுக்கூட்டம் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:– பிரதமர் மோடி இந்திய பிரதமரா? அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியரா என்ற கேள்வி இப்போது எழுகிறது. அந்த அளவுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தகவல் உரிமை சட்டம் போன்ற பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் தற்போது ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியால் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. மத்தியில் இப்படி ஒரு ஆட்சி என்றால் ... Read More »

நாடு முழுவதும் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார்  2,167 பேர் உயிரிழந்துள்ளனர். எச்1என்1 என்ற வைரஸ்,  பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. நாடு முழுவதும் இந்நோயால் 35077 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வரை 2,167 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய ... Read More »

ஆந்திரா படுகொலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

செம்மர கடத்தல் தலைவன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி வழங்கியுள்ளார். ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயல். தமிழக தொழிலாளர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்திருக்கலாம். அவர்கள் தாக்க முயன்றதாக கூறி கொல்லப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தமிழக தொழிலாளர்களை ஆந்திராவுக்கு அழைத்து சென்ற கூலி குத்தகைதாரர் யார்? பல 100 கோடி மதிப்புள்ள செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபடும் தேச ... Read More »

தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணமலை பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களில் தீக்காயங்கள் உள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்களின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் குறித்து ஆந்திர டிஜிபி 16 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள போதிலும் அவை திருப்தியளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மறுபரிசோதனை குறித்து தாக்கல் செய்த மனு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதேவேளை இந்த சம்பம் குறித்த ஆந்திர அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்பதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் ... Read More »

உயிரிழந்தவர்களின் சடலங்களை கையேற்க உறவினர்கள் மறுப்பு.

உயிரிழந்த 6 பேரின் சடலங்களையும் மறுபரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் நடைபெற்ற பகுதியில் அருகில் உள்ள நீதிமன்றத்தின் உதவியை நாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைகள் நடைபெற்று தமக்கு நீதி கிடைக்கும் வரையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தாம் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி நஸ்ட ஈடு வழங்க கோரி தமிழகத்தைச் சேர்ந்த முத்து கிருஸ்ணன் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அத்துடன் துப்பாக்கி பிரயோகம் குறித்த ஆந்திர அரசின் அறிக்கை திருப்தி அளிக்க வில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ... Read More »

ஆந்திராவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் நிதியுதவி – திமுக

 ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஆந்திர துப்பாக்கி பிரயோகத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களில் 14 பேரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதுடன். மேலும் 6 பேரின் சடலங்கள் மறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டள்ளன. இந்த நிலையில் நாடு தளுவிய ரீதியில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நியாயமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய கடமை மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உள்ளது. மேலும்,ஐ.எஸ்.தீவிரவாதிகளால் ஜப்பானியர்களும், ஆங்கிலேயர்களும் படுகொலை செய்யப்பட்டதற்கெல்லாம் கண்டனம் ... Read More »

இலஞ்சம் வங்கிய, தொழில் வருமான வரித் துறை உதவி இயக்குநர் கைது.

பல்லாவரத்தில் ரூபாய் 1 அரை லட்சம் லஞ்சம் வாங்கியதாக, தொழில் வருமான வரித் துறை உதவி இயக்குநரை சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் கணேசன். ஆடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிகழாண்டுக்கான தொழில் வருமான வரி சான்றிதழ் பெறுவதற்காகப் பல்லாவரத்தில் உள்ள தொழில் வருவான வரித்துறை அலுவலகத்தில் உதவி இயக்குநர் ராஜாராமை அணுகினார். கணேசனுக்கு சான்றிதழ் அளிக்க உதவி இயக்குநர் ரூபாய் 1 அரை லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ... Read More »

ஆந்திரத்தில் கொலை விவகாரத்தில் பிரதமர் மௌனம் கலைக்க வேண்டும் – ராமதாஸ்

ஆந்திரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரத்தில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இதன் மூலம் உண்மையை மூடி மறைக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபடுவது உறுதியாகிறது. இந்நிலையில், நியாயமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய கடமை மத்திய ... Read More »

தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்.

தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் காலமானார். தமிழ் இலக்கிய உலகின் முன்னோடி ஆளுமைகளில் முதன்மையானவர் ஜெயகாந்தன். சிறுகதைகள்இ புதினங்கள்இ திரைப்படங்கள் என பன்முக ஆளுமை கொண்டவர். 1934ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தவர். பின்னர் இளம்வயதில் சென்னைக்கு குடியேறிய அவர் தீவிர இடதுசாரியாக செயல்பட்டார். 1950-60களில் தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். பல்வேறு பத்திரிகைகளில் ஜெயகாந்தன் படைப்புகள் வெளியாகி பெரும் அங்கீகாரத்தை தேடித் தந்தன. உன்னைப் போல் ஒருவன்இ சில நேரங்களில் சில மனிதர்கள் ... Read More »

அம்பத்தூரில் மூதாட்டி கொலை 20 சவரன் தங்க கொள்ளை

அம்பத்தூரில் வீடு வாடகை பார்ப்பது போல் நடித்து மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 20 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தனிபடை அமைத்து தேடிவருகின்றனர். சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் கஜபதி. தனியார் கம்பெனியில் பணியாற்றிய இவர் ஓய்வூபெற்ற பிறகு அவரது மனைவி நிர்மலாவூடன் வாழ்ந்து வருகிறார்.மென்பொருள் பொறியாளரான அவரது மகன் கணேஷ் சென்னை கோபாலபுரத்தில் வசித்துவருகிறார். இந்நிலையில் கஜபதி வீட்டின் மேல் தளம் காலியாக இருந்தது இதனை அறிந்த ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com