Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு (page 220)

தமிழ்நாடு

வடக்கு மாகாண முதலமைச்சரின் காகிதம் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு கேள்வி.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ´ரைம்ஸ் ஒவ் இந்தியா´ இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More »

சேஷாசலம் வனப்பகுதியில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சேஷாசலம் வனப்பகுதியில் சிறப்பு விசாரணைக் குழுவை அனுப்பி ஆய்வு நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு எடுத்துள்ளது. ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது மக்கள் கண்காணிப்பகம், உண்மை கண்டறியும் குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆந்திர அரசு சார்பில், மனித உரிமைகள் ஆணைய சிறப்பு அமர்வில், ஆவணங்களை சமர்பிக்க கூடுதலாக இரண்டு ... Read More »

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் – கருணாநிதி

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கிய பயிர்க் கடன்களுக்கான வட்டி விகிதம் 9 சதவீதம் என்பதை 11 சதவீதமாக மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை மத்திய அரசு வழங்கி வந்த வட்டி மானியத்தை அடியோடு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக இதுவரை 4 சதவீத வட்டிக்கு பயிர் கடன் பெற்று வந்த விவசாயிகள், இனிமேல் ... Read More »

ஆந்திர துப்பாக்கி பிரயோகம், மேலும் அறிக்கை சமர்ப்பிக்க மனித உரிமைகள் கண்காணிப்பகம் உத்தரவு

ஆந்திர துப்பாக்கி பிரயோகம் குறித்த மூன்று பேரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் மற்றும் காவலாளர்களின் வாக்கி டாக்கி கலந்துரையாடல் பதிவு மற்றும் அவர்களின் தொலைபேசி உரையாடல் பதிவு போன்றவற்றையும் சமர்ப்பிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் சடலங்கள் குறித்த அறிக்கை மற்றும் காவலாளிகள் குறித்த விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை என தேசிய மனித உரிமைகள் ஆணையகம் ஆந்திர அரசின் செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More »

ஆட்டோ சாராதிகள் மற்றும் பயணிகளுக்கான புதிய சட்டம் அமுலில்

ஆட்டோ மீட்டர் கட்டண முறையை தீவிரமாக அமுல்படுத்தவும், இருக்கை மாற்றம் செய்து 3-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எம்.அழகர்சாமி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயத்தை பின்பற்றி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 (1.8 கி.மீ. தூரத்துக்கு), அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.12, காத்திருப்பு கட்டணம் ரூ.3.50 (5 நிமிடம்), இரவில் (11 ... Read More »

ஆந்திர கொலை சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட மனித உரிமைகள் திணைக்களம் முடிவு

கடந்த ஏப்ரல் 7ம் தேதி திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின், சம்பவம்  நடைபெற்ற இடத்தை  நேரில் ஆய்வு செய்ய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதித் துறை விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்படவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ள இந்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, விசாரணையைத் துவங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட ... Read More »

முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிவைக்கப்பட்டமை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் – கருணாநிதி

முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிவைக்கப் பட்டது ஏன் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்திள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ‘தமிழகத்தின் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும். அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், 2014 அக்டோபரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவில்லை. அதேபோல 2012-ம் ஆண்டு ஒரே நாளில் ... Read More »

விவசாயி தற்கொலை விவகாரம், மக்களவையில் அமளி

டெல்லியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதிக்கும் வகையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியது. காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் இந்த நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் வழங்கினார். ஆனால் ஒத்திவைப்பு தீர்மான கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் ... Read More »

ஆந்திர கொலை வழக்கு, ஆந்திர அரசின் விசாரணை திருப்தியில்லை – மனித உரிமைகள் ஆணைக்குழு

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதித் துறை விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்படவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஹைதராபாத்தில் விசாரணையைத் தொடங்கிய தேசிய மனித உரிமை ஆணைய அமர்வு ஆந்திர காவல்துறை ஏடிஜிபி வினய்ரஞ்சன் ரேவிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். விசாரணையைத் துவங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஆந்திர காவல்துறை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லை. இந்த சம்பவம் குறித்து வருவாய் ... Read More »

விவசாயிகள் விரோத நில எடுப்பு மசோதாவை கைவிட வேண்டும் – மு.க. ஸ்டாலின்

புது டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பேரணியின் போது விவசாயி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுக்கு பிறகாவது அதிமுக தனது முடிவை மறுபரிசிலனை செய்யுமா? என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகப்புத்தகத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆம் ஆத்மி  கட்சி பேரணியில் பங்கேற்று கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com