Monday , 25 October 2021
Home » தமிழ்நாடு (page 20)

தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம்- விஜயபாஸ்கர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டனர் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 47பேரில் இருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாவும், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர், வேலூர்,தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். Read More »

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகேயுள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பு பகுதியிலுள்ள அவரது நினைவு மண்டபத்தில் கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு வந்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள், கலாமின் சமாதி மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அப்துல்கலாம் ... Read More »

பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த அமைச்சர் உற்சாக நடனம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், மேள தாளத்திற்கேற்ப உற்சாக நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மேள தாளத்திற்கேற்ப அமைச்சர் கருப்பண்னன் உற்சாகமாக நடனமாடினார். Read More »

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 10,940 பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு 10,940 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை செயலாளர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்று திரும்பிட வசதியாக, போக்குவரத்துத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எம்ஆர் விஜயபாஸ்கர் ... Read More »

தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகத்திற்கு பால் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான 275 பால் டேங்கர் லாரிகள் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் ... Read More »

ராஜீவ் கொலை வழக்கில் சீமானை சேர்க்க வேண்டும் – புதுவை காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சீமனையும் சேர்க்க வேண்டும் என புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வலியுறுத்தி உள்ளார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய தேசத்தை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்ற இணையற்ற தலைவரும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஏற்றம் பெறச்செய்த ஒப்பற்ற தலைவருமான ராஜீவ்காந்தியை கொன்று புதைத்தது எங்கள் கூட்டம்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பொது மேடையில் பேசி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். அரசியல் விளம்பரத்துக்காக ... Read More »

5 மாத குழந்தையுடன் வீட்டில் இருந்த தம்பதி கொடூர கொலை

நாமக்கல்லில் வீடு புகுந்து இளம் தம்பதியை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பழ வியாபாரம் செய்து வந்த விமல் ராஜ் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீசாணத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ள நிலையில் அனிதாவின் தாய், தந்தையுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் விமல்ராஜ், அனிதா மற்றும் அவரது தந்தை கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு ... Read More »

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் – கரூர், பழனி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு மதியம் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு மதியம் மாலை 3.25 மணிக்கு சென்றடைகிறது. அதைப்போன்று கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.40 மணிக்கு பழனி செல்லும் என்றும், ... Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிசம்பருக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் : உயர்நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிசம்பருக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் : உயர்நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிசம்பருக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட நீதிபதிகள்,இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டனர். இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10-க்கு ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்தது. வழக்கின் பின்னணி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் ... Read More »

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி-பழங்கள் விலை குறைந்தது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி-பழங்கள் விலை குறைந்தது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை முடிந்து 1 வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறையத்தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி-பழங்கள் விலை குறைந்தது ஆயுதபூஜையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மிக அதிகமாக காணப்பட்டது. ஆயுதபூஜை முடிந்து 1 வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறையத்தொடங்கி உள்ளது. காய்கறிகள் கடந்தவாரம் விற்றதைவிட 10 முதல் 15 சதவீதம் வரை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com