Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு (page 20)

தமிழ்நாடு

அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், ஒருபோதும் அஞ்சமாட்டோம் -மு.க. ஸ்டாலின்!!

MK-stalin

ஆளுனருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டதற்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுகவை சேர்ந்த 192 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, மு.க. ஸ்டாலின், அரசியல் சட்டத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய ஆளுநர், ... Read More »

அரசுக்கு எதிராக பேசியதாக இயக்குநர் பாரதிராஜா, மீது வழக்குப் பதிவு!

Bharathiraja

வன்முறையை தூண்டும் விதமாகவும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேசியதாக இயக்குனர் பாரதிராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம், கவிஞர் வைரமுத்து பிரச்சனை, இயக்குநர் அமீர் பிரச்சனை போன்றவற்றில் இயக்குநர் பாரதி ராஜா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் நாராயணன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ... Read More »

8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு 15 பேர் தீக்குளிக்க முயற்சி!!-

fire

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது.தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் இந்த பணி நடைபெற்று வந்தது. வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 10-வது நாளாக, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, இருளப்பட்டி பகுதியில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்ய வந்தனர். அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் ... Read More »

நான்கு நாட்களாக நடைபெற்ற, லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

lorry strike

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை, கடந்த 18ஆம் தேதி தொடங்கினர். இதனால், தொலைதூரங்களுக்கு கொண்டு செல்லப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கின. இதனையடுத்து, மத்திய போக்குவரத்துறை அமைச்சக அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரோடு, டெல்லியில், பேச்சுவார்த்தை நடத்தினர். ... Read More »

8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு பொதுமக்கள் வாக்குவாதம்

8 way road

அரூர் பகுதியில் 8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம்-சென்னை இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் மலைப்பகுதிகள் வழியாக இந்த பசுமை சாலை அமைய உள்ளது. இந்த ... Read More »

குறைந்த செலவில் வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்!!

eps

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2007 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களில் மானியம் பெறுவதற்கு தகுதியான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி, டி.வி. மாசிலாமணி தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.இத்தேர்வுக் குழுவினர், 2007-ம் ஆண்டுக்கு 14 திரைப்படங்களுக்கும், 2008-ம் ஆண்டுக்கு 18 திரைப்படங்களுக்கும், 2009-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2010-ம் ஆண்டுக்கு 21 திரைப்படங்களுக்கும், 2011-ம் ஆண்டுக்கு 17 ... Read More »

வீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது!!

eb

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது.மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த ... Read More »

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி ஆவணங்களை ஆய்வு செய்ய, சிறப்பு மருத்துவர்கள் தேர்வு!!

jayalalitha

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடியா? ஆவணங்களை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய் உள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை, ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், அப்பல்லோ மருத்துவர்களின் சாட்சியங்களும் சரியாக உள்ளதா? என்பதை கண்டறிய ... Read More »

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு, தூத்துக்குடி மக்கள் அச்சம்!!

sterlite leaked

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலத்தை இட மாற்றம் செய்யும் பணிகள் தொடரும் நிலையில், அமிலக் கசிவு கடுமையாக இருந்ததாக வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. பராமரிப்பு பணிக்காக மின் இணைப்பு கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், அமிலக் கசிவு கடுமையாக இருந்ததாகவும், இதனால் தீவிர சுற்றுச் சூழல் பாதிப்புக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், இதுவரை சுமார் 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறினார். 24 மணிநேரமும் பணிகள் ... Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

chennai high court

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ந் தேதி நடந்தது. இதில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவரும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அதில், “டி.டி.வி.தினகரன் இடைத்தேர்தலில் முறைகேடுகள் செய்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பெறும் அளவில் பணம், பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com