Monday , 25 October 2021
Home » தமிழ்நாடு (page 2)

தமிழ்நாடு

பிஎல்ஓஎஸ் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக சர்க்கரை சேர்த்து கொண்டால் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதிக சர்க்கரை சாப்பிட்டால் விந்தணுக்களின் தரம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. ஸ்வீடனில் உள்ள லிங்கோப்பிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் முன்னணி எழுத்தாளர் அனிதா ஓஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:- விந்தணுக்களில் இருக்கும் ஆர்.என்.ஏ கூறுகள் (RNA fragments) என்பது மரபணு தொடர்புடையது. இது அளவுக்கு அதிகமான சர்க்கரையை உட்கொண்டால் பாதிக்கப்படுகிறது இதற்காக 15 ஆண்கள் அதுவும் புகை பழக்கம் இல்லாத ஆண்களை தேர்வு செய்து ஆய்வுக்கு ... Read More »

உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி- டி.ராஜேந்தர்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் தேர்தலில் வெளியான முடிவு அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு என்றும் டி. ராஜேந்தர் கூறியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் சினிமா அழிவுக்கு தமிழ் ராக்கர்சை மட்டுமே குறை சொல்வது தவறு. தமிழ் ராக்கர்ஸ் அழித்துவிடுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் ... Read More »

ரூ.20,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட அரசு அலுவலர்கள்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே, பிறந்து சில நாட்களில், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை, அரசு அலுவலர்களால், ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை பெற்றெடுத்த தம்பதிக்கு ஏற்கனவே, இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. 4ஆவதாக, பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல், டேனிஷ்பேட்டையைச் சேர்ந்த 15 ஆண்டுகளாக குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர், அந்த தம்பதியை அழைத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை ... Read More »

மறைமுக தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி மனு

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்போது தான் இணக்கமான சூழல் ஏற்படும் என்றும், அதுவே கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் நபர்களுக்கும், மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ... Read More »

நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்

தமிழகத்திலுள்ள நாட்டின மாடுகளின் உற்பத்தியை பெருக்கி, அதன் மூலம் கிடைக்கும் தரமான பாலை பொதுமக்களுக்கு கொடுப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக கட்டிடத்தினை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாட்டின மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலே பர்கூர், புலிக்குளம், காங்கேயம் ... Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயம்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி மாதம் அறிவித்தார். இதற்கான அரசாணையை கடந்த 13-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயசந்திரனும் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய வட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் தொடக்கவிழா கள்ளக்குறிச்சி ... Read More »

வைகையாற்று நீரை சாத்தியார் அணைக்கு கொண்டுவர கோரிக்கை

மதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை பாலமேடு சாத்தியார் அணைக்கு குழாய் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாடிப்பட்டி – பாலமேடு சாலையில் அமைந்துள்ள சாத்தியார் அணைக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பொழியும் மழை நீர் மட்டுமே நீராதாரமாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த அணை கடந்த ஆண்டு கஜா புயலின் போது பெய்த மழையில் நிரம்பியதாகக் கூறப்படுகிறது. தற்போது குட்டை போல் காட்சியளித்து வரும் சாத்தியார் அணையை முறையாக தூர்வாரி, வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் ... Read More »

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்துள்ளது. கிண்டி, ராயப்பேட்டை, கோயம்பேடு, மடிப்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே, வெப்பச் சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. Read More »

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் இருக்கிறது என்றும் மின்வெட்டு என்ற பிரச்சனையே இருக்காது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். ஈரோடு மாவட்டம் பாசூர் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த ஆண்டு கோடையில் 16 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது என்றும் இந்த ஆண்டு அது 17 ஆயிரத்து 500 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். Read More »

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட, நூற்றிற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், கிருஷ்ணகிரி , நாகப்பட்டினம் , திருவள்ளூர் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com