Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு (page 174)

தமிழ்நாடு

மேலும் ஐவரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி

vlcsnap-2015-04-15-10h29m59s108

ஆந்திராவில் கொல்லப்பட்ட மேலும் ஐவரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி ஆந்திர துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் ஐவரின் சடலங்களை மறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் செய்த மனுத்தாக்கல் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது  ஐவரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உயிரிழந்த சசிகுமாரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு உயர்நீதி மன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மறு ... Read More »

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

download (8)

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம், மே 12 வரையில் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு மீதான விசாரணையில் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி குமாரசாமிக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி எச்.எல் தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் நீதிபதி குமாரசாமி மே 12 இல் தனது தீர்ப்பை வழங்க முடியும் எனவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்கு முழுமையாக முடியும் வரையில் ஜாமீன் கேட்ட ஜெயலலிதாவின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தினால் நிராகலரிக்கப்பட்டள்ளது. தமிழக முன்னாள் ... Read More »

தமிழகத்தில் முழு மதுவிலக்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ்

PMK_RAMADOSS_2470e

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த 8 குழந்தைகள் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த எட்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது கடந்த 6 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும். கடந்த நவம்பர் மாதத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ... Read More »

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அதிமுக அரசு – காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

download (16)

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அதிமுக அரசை விட மக்கள் விரோத அரசு வேறு எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் வகையில் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25% இடங்களில் ஏழை எளிய மாணவர்களை ... Read More »

மனைவியை கொலை செய்த கூலிப்படையினரை கொலை செய்த தொழிலதிபர் கைது.

download (15)

மனைவியை கொலை செய்த கூலிப்படையினர் மற்றும் இதன் பின்னணியில் இருந்த தன் தம்பி உட்பட 4 பேரை தொழிலதிபர் கொலை செய்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்தது. இதையடுத்து, அவரும் அவரது பழைய நண்பரும் கைது செய்யப்பட்டனர். சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனது தந்தை ராமச்சந்திரன் (55) காணாமல் போய்விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்குமாறும் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி புகார் கொடுத்தார். 2 நாட்களுக்கு பிறகு, மீண்டும் காவல் நிலையம் சென்ற பிரகாஷ், ... Read More »

சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வருமா

Women carry metal pitchers filled with drinking water at Charnaka village

கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் சென்னையைச் சுற்றியுள்ள மற்ற ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது பூண்டி ஏரி கடந்த வாரம் கிட்டத்தட்ட வறண்ட நிலையில் இருந்தது. ஏரியில் 0.061 டி.எம்.சி நீர் மட்டுமே அதில் இருந்தது. தற்போது கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீரின் அளவு 0.146 டி.எம்.சியாக அதிகரித்துள் ளது. பூண்டி ஏரியிலிருந்து சென் னையின் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் நீரின் ... Read More »

வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு எதிரான மனு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு,

BhavaniSingh_1788597f

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்துக்கு எதிரான மனு வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பவானி சிங்கின் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து நேற்றுமுன்தினம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி மதன் பி.லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லாது’ என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியம‌னம் செல்லும்’ என்றும் தீர்ப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து ... Read More »

அரசு பேருந்து பயண சீட்டுக்களை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’

BUS

கோடை விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளுக்கு வரும் 22-ம் தேதியு டன் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும், சுற்றுலா இடங் களுக்கும் மக்கள் செல்வார்கள். குறிப்பாக கடற்கரை பகுதிகள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, ... Read More »

சென்னை எழும்பூருக்கு வரும் தென் மாவட்ட ரெயில்கள் தாமதமாக வரும்

images (8)

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சென்னை எழும்பூருக்கு வரும் தென் மாவட்ட ரெயில்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தென் மாவட்டங்களில் இருந்து இரவில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மறுநாள் அதிகாலையில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காலை 10 மணிக்குள் சென்னை எழும்பூர் வந்தடையும். இந்நிலையில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, முத்து நகர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. அதே போல் ... Read More »

ஆந்திரா துப்பாக்கி பிரயோகம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – தொல்.திருமாவளவன்

vlcsnap-2015-04-17-10h00m24s102

ஆந்திராவில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு காவல் துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். கடலூர் முதுநகர் மணிக்கூண்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஆந்திர சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தனது சார்பில் உச்ச ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com