Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது – கனிமொழி எம்.பி. தாக்கு

தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு 41-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் பின்தங்கி 51-ஆவது இடத்தில் இருக்கிறது. குடிமக்கள் உரிமையில் ஏற்பட்ட சறுக்கலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ... Read More »

234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார். 234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் கமல்ஹாசன் சென்னை: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார். அடுத்த கட்டமாக 2021-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் ... Read More »

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து ஓ ராஜா மதுரை: தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆவின் விதிகளை மீறி ஓ.ராஜா ... Read More »

ராமநாதபுரம் அருகே நாசவேலையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது…

ராமநாதபுரத்தில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி, கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், புஹாரியா பள்ளி மைதானம் அருகே, சிலர் கூடி, நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம் 3 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் தப்பியோடிவிட்டார். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த புறாக்கனி என்கிற பிச்சைக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ... Read More »

SSI கொலை வழக்கு – கேரளா அழைத்துச் சென்று பயங்கரவாதிகளிடம் விசாரணை

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் இருவரையும் கேரளா அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், புதன்கிழமை நள்ளிரவு இருவரையும் கேரளா அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்ததாக சந்தேகப்படும் இடம், தவ்பீக்கின் உறவினர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகள் விற்பனை ... Read More »

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வெப்ப நிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக கூடும் என்றும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை நாளை அல்லது ஓரிரு ... Read More »

ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலையில் இன்று சறுக்கல் : சவரன் ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக உயர்த்தப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,288 உயர்ந்தது. அமெரிக்க, ஈரான் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தையிலும் ஆபரண தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண ... Read More »

எடப்பாடி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை… தமிழகத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு திட்டம்

சென்னை: தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. அதன்படி தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37ஆக உயர்த்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; ... Read More »

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2ம் நாளான இன்று 13 மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் படித்தார். அவர் படித்து முடித்ததும் 11.56 மணியளவில் அன்றைய கூட்டம் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை ... Read More »

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணி நிலவரம் வாக்கு எண்ணிக்கை சென்னை தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.கவும், தி.மு.க.வும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி வெளியான நிலவரம் வருமாறு: மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 240 இடங்களிலும், திமுக 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை இரு இடத்தில் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com