Thursday , 25 May 2017
Home » தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வகையில் செயல்படுகிறது பாஜக ; கடிந்து கூறிய கனிமொழி

kanimozhi_20170203_350_630

தமிழர்களின் அடையாளங்களை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கனிமொழி, “தமிழர்களுக்கு என தனி அடையாளம் இருக்கிறது. பாஜக அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது. திமுக இந்தி திணிப்பை மட்டும் எதிர்க்கவில்லை. கலாச்சாரம், கல்வி, மொழி, மதம் என அனைத்து திணிப்புகளையும் எதிர்க்கிறது. தமிழர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்த மத்திய ... Read More »

ஜாமினில் வெளிவந்தார் வைகோ …

2803030096_7b1c2db1cd_b c2n

தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வைகோ ஜாமினில் வெளிவருகிறார். அரசுக்கு தேவையில்லாத செலவு ஆவதால் சொந்த ஜாமீனில் வைகோவை விடலாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், வைகோவுக்கு சொந்த ஜாமின் தர எழும்பூர் நீதிமன்றம் முன்வந்தது. ஆனால் வைகோ ஜாமினில் செல்ல ... Read More »

ஒண்டவந்த பிடாரிக்கு ஓடிப்போன பிடாரிஅழைப்பு விடுத்தது… சம்பத் செம ஹெத்

Nanjil Sampath

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனையின்றி அதிமுக அம்மா அணியுடன் இணைய வேண்டும் என நாஞ்சில் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். டிடிவி தினகரன் கைதைக் கண்டித்து, அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மதுரை மாவட்டம் திருநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் தலைமையின் கீழ் பன்னீர்செல்வம் அணியினர் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். அவர், வகுப்புவாத கட்சியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். Read More »

வெயிலின் தாக்கம் குறைகிறது மக்கள் மனது குளிர்கிறது…

sunlight

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வட தமிழகத்தின் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும்,சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.வட தமிழகத்தின் சில இடங்களில் அனல்காற்று படிப்படியாக குறையும் என வானிலை மையம் தெ‌ரிவித்திருக்கிறது. Read More »

நீதி கேட்கும் நீதிபதி…கர்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

judge_karnan__large c2n

ஆறு மாத தண்டனையை ரத்து செய்யக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. நீதிபதி கர்ணனை கைது ... Read More »

பாஜக பிரமுகரிடம் கைப்பற்றப்பட்டது கருப்பு பணம் 

demonetisation-demonetization-currency-rbi-rs-500-rs-1000-note-currency-pm-modi-arun-jaitley-trends c2n

சென்னை கோடம்பாக்கத்தில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கடை உரிமையாளரான பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பிரமுகர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெங்களூரில் பாம் நாகா என்ற ரவுடி வீட்டிலிருந்து பல கோடி மதிப்புள்ள, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Read More »

ரூ 8-கோடி மதிப்பீட்டில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான விடுதிகள் – முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

51595-ynzkfmqjpp-1487244685

ரூபாய் 8-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான விடுதிகள், 3-கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களையும் முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர்களுக்காக 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 972 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள 2 விடுதிக் கட்டடங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். ... Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை

vlcsnap-2017-05-17-17h12m39s187

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மாதம் ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கிய நகைகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவிற்கு சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் நடக்கும் வருமானவரி சோதனையால் அவருக்கு பெரும் நெருக்கடி ... Read More »

11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

C-oicAlVwAAJ0Gm

வரும் கல்விஆண்டான 2017-2018-ஆம் ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள சென்னை பாடநூல் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்விஆண்டான 2017-2018 முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என குறிப்பிட்டார். Read More »

கள்ளக்காதல் விவகாரம் ; கைது செய்யப்பட்ட பாபு போலீசில் வாக்குமூலம்

pudhucherry__large

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்க தொழிலதிபரைக் கொன்றது எப்படி என்று கைது செய்யப்பட்ட பாபு, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத் (40). இவர் தொழில் தொடங்க புதுச்சேரி வந்தார். ரெட்டியார்பாளையத்தில் மனைவி ஜெயந்தி (35) மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார். விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகளை செய்தார். இந்த வேலைகளை, புதுச்சேரியை சேர்ந்த பாபு என்ற ஷேக் முகமது (40) என்பவர் கவனித்து வந்தார். இவருக்கும் ஜெயந்திக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com