அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் நடால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் முதல் செட்டை 6க்கு 3 என நடால் எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களையும் நடால் 6க்கு 3, 6க்கு 4 என தனதாக்கினார். ... Read More »
விளையாட்டு
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜுனா விருது !!
விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு குடியரசுத் தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா, பாராலிம்பிக் வீரர் தேவேந்திரா ஜஜாரியா, ஹாக்கி வீரர் சர்தாரா சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீரர் ஆண்டனி அமல்ராஜ், தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் ... Read More »
மலிங்காவின் அறிவுரையால் ஆட்டத்தில் ஜொலித்த பும்ரா !!
இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி பும்ரா கூறும்போது, ’பந்துவீச்சாளர்கள் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் என் நோக்கம். இலங்கையில் இதற்கு முன் நான் விளையாடியதில்லை. இங்குள்ள சூழ்நிலை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் பந்து வீசினேன். இது தொடர்பாக சீனியர்களிடம் ஆலோசனை கேட்பேன். ... Read More »
அடிக்கடி வீரர்களை மாற்றுவதே தோல்விக்கு காரணம் ; இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ்…
வீரர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தால் போட்டியில் வெல்வது கடினம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி 8-வது இடத்தில் இருக்கிறது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 2 ஆட்டங்களில் ... Read More »
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் வாகனத்தை மறித்த இரசிகர்கள் ; சங்ககாரா நூதன அறிவுரை …
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, முதலாவது ஒரு நாள் போட்டியையும் வென்றது. போட்டிக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், அந்நாட்டு வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம்’ என்று கத்தினர். அவர்கள் சென்ற பேரூந்தை தடுக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா, ‘நாங்கள் வெற்றிபெற்றால் எங்களோடு சேர்ந்து கொண்டாடுகிறீர்கள். தோற்றால் எதிர்க்கிறீர்கள். உங்கள் ... Read More »
3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரர்…
உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகள போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரர் கணேசனுக்கு, அவரது கிராம மக்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். உயரம் குன்றியவர்களுக்கான 7-வது உலக தடகள போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரை கனடாவில் நடைபெற்றது. இதில் 62 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தடகளம், நீச்சல், கால்பந்து, ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில் 18 பேர் போட்டியில் கலந்து ... Read More »
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; இந்திய அணி அபார வெற்றி …
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புலாவில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இலங்கை அணியில் சமரா கபுகேதரா, திசரா பெரேரா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய ... Read More »
அதிரடி சரவெடி ; ஹர்திக் பாண்ட்யா அசத்தல் சதம் …
இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அதிரடி சதமடித்தார். இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்கள் 188 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 85 ரன்களிலும் தவான் 119 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பஜாரா 8 ரன்களிலும், ரஹானே 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி 42 ரன்களிலும், அஷ்வின் ... Read More »
பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் ; 17 பேர் உயிரிழப்பு 30 பேர் படுகாயம் …
பாகிஸ்தானின் குவெட்டாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். குவெட்டா நகரின் பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் குண்டு வெடித்ததாக பலூசிஸ்தான் மாகாண அமைச்சர் சர்பிராஸ் புக்தி தெரிவித்தார். இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் ராணுவ வாகனம்தான் குண்டு வைத்தவர்களின் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார். பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் அண்மைக்காலங்களாகவே பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. Read More »
நிறம் குறித்து கேலி செய்தவர்களுக்கு தமிழக வீரர் அபிநவ் முகுந்த் பதிலடி…
நிறம் குறித்த கேலி, கிண்டல் கருத்துகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரர் அபிநவ் முகுந்த், பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபினவ் முகுந்த், தமது தோலின் நிறம் குறித்த மக்களின் எண்ணம், தமக்கு புரியாத புதிராகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிறு வயது முதல் வெயிலில் பல மணிநேரம் பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ள அவர், தோல் நிறம் குறித்து மக்கள் மனநிலை மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பதிலடி கொடுப்பதற்கு தாம் மட்டுமே காரணமில்லை என்றும், தம்மைப் ... Read More »