Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 5
Thursday , 7 July 2022
Home » விளையாட்டு (page 5)

விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து-ரேசில், சுவிட்சர்லாந்து போட்டி டிரா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா, கோஸ்டா ரிகா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிகோ, ஜெர்மனி அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க ... Read More »

பெங்களூரு டெஸ்ட் – இந்திய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு ... Read More »

உலக கோப்பை கால்பந்து – ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷியா – சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின.முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி ... Read More »

இந்தியா- ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – மோடி வாழ்த்து

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.  இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More »

உலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்கும் பூனை

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் ... Read More »

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் !!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். நீண்ட நாட்களாக ஆடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் ... Read More »

நார்வே செஸ் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்-ன் 8வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் எட்டாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருவானாவை எதிர்கொண்டார். கடுமையான சவாலாக இருந்த இந்தப்போட்டியின் 50-வது நகர்த்துதலின் போது ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்திற்க்கு எந்த புள்ளியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இதுவரை 8 போட்டியில் ... Read More »

விராட்க்கு கோலி மெழுகு சிலை திறப்பு

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. லண்டனை அடிப்படையாகக் கொண்ட மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் ஒரு கிளை இந்தியத் தலைநகர் தில்லியிலும் செயல்பட்டு வருகிறது. மெழுகுச் சிலைகளுக்கு பெயர்பெற்ற இந்த அருங்காட்சியங்களில் உலக பிரபலங்கள் பலரின் தத்ரூப சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் லயோனல் மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் வரிசையில் விராட் கோலியின் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்த ... Read More »

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி தோல்வி

7-வது மகளிர் ஆகிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்தது. Read More »

கென்யா அணியுடனான கால்பந்து போட்டி இந்திய அணி அபார வெற்றி

கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – கென்யா அணிகள் மோதின. இது இந்திய அணியின் கேப்டன் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com