ஒருநாள் மற்றும் டி20 அணியின் அணித்தலைவர் பதவியில் இருந்து மகேந்திரசிங் டோனி விலகியுள்ளார். டோனியின் இந்த அதிரடி முடிவு உலக ரசிகர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரராக கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் டோனி தெரிவித்துள்ளார். அணித்தலைவராக இருந்து இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்றவர் டோனி என்றால் அதுமிகையல்ல. ஆட்ட நுணுக்கத்திலும், அணியை வழிநடத்துவதிலும் டோனிக்கு நிகர் டோனி மட்டுமே. இந்நிலையில் இவர் பதவி விலகியதை தொடர்ந்து சாக்ஷி டோனி டுவிட்டரி்ல், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் ... Read More »
விளையாட்டு
ஸ்மித்தின் சாதனை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்தின் சாதனை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது.அந்த அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இந்தப்போட்டியில் ஸ்மித் 14பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் ... Read More »
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுப்பதற்காக சச்சின் டெண்டுல்கரை அழைக்க வேண்டும் ;பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுப்பதற்காக சச்சின் டெண்டுல்கரை கடத்தப் போவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நடத்தும் மாநாட்டில் கலந்துகொண்ட டேவிட் கேம்ரூன், தான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இந்தியாவின் வளர்ச்சியையும், ஆற்றல் வளத்தையும் கண்டு அசந்து போவதாக குறிப்பிட்டார். கிரிக்கெட் மூலம் இந்தியாவும் இங்கிலாந்தும் அன்பை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் கேமரூன் கூறினார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் குறித்து பேசிய அவர், இங்கிலாந்து அணிக்கு ... Read More »
ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் – இந்தியா சாம்பியன்
6 நாடுகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றன. இதில் 6 லீக் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை ... Read More »
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ;பாகிஸ்தானுக்கு எதிரான 7-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 6 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ... Read More »
இந்திய கேப்டன் விராட் கோலி 3–வது பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இடத்தை பிடித்தார்.
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தொடர்ந்து முன்னேறி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது 3–வது இடத்தை பிடித்தார். மொகாலியில் நேற்று முன்தினம் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் ... Read More »
இனிதாய் நடந்தது யுவராஜ்சிங்–ஹாசல் கீச் திருமணம்
இந்திய கிரிக்கெட் வீரர் 34 வயதான யுவராஜ்சிங், மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை காதலித்து வந்தார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்தனர். யுவராஜ்சிங்–ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் சர்ஹிந்த்– சண்டிகார் ரோட்டில் உள்ள படேகர் சாஹிப்பில் உள்ள குருத்வாராவில், சீக்கிய மத சடங்குகளின்படி நேற்று நடந்தது. சீக்கிய மத தலைவர்களில் ஒருவரான பாபா ராம்சிங் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். இரு வீட்டாரின்உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் ... Read More »
ஓட்டலுக்கு பெண்களை அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்;கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
ஐ.பி.எல். பாணியில் வங்காளதேச பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வங்காளதேச முன்னணி வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் அல்–அமின் ஹூசைன், பேட்ஸ்மேன் சபிர் ரகுமான் ஆகியோர் ஒழுங்கீன நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருவரும் என்ன தவறு செய்தார்கள் என்பதை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ... Read More »
சென்னையில் நடக்கவிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 8.30 மணி அளவில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி தற்போது மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ... Read More »
இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது..
இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் 4–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 21–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கான கோலை அடித்தார். கடைசியாக ... Read More »