Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 14
Saturday , 24 September 2022
Home » விளையாட்டு (page 14)

விளையாட்டு

ஐ.பி.எல் – மும்பையை வீழ்த்தி ஐதராபாத்வெற்றி

ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி ஐதராபாத் அணி பதிலடி கொடுத்தது.ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்னே எடுக்க முடிந்தது.கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 45 பந்தில் 67 ரன் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சித்தார்த் கவூல் 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், ரஷீத்கான், முகமது நபி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் விளையாடிய நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் அதிரடி ... Read More »

கொல்கத்தாவை வீழ்த்தியது புனே அணி ; தொடர்ந்து வெற்றிதான் இனி … அடித்து சொன்னார் ராகுல் திரிபாதி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே அணி ஏழாவது வெற்றியை ஈட்டியது. ராகுல் திரிபாதி 93 ரன்கள் எடுத்து அசத்தினர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்டீவன் சுமித், முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். தொடக்க வீரர் சுனில் நரேன் (0) பந்து வீசிய உனட்கட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன் (10 ரன்) சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய ... Read More »

இது போதும் டெல்லி வரைக்கும் பேசும் ; ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில், முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக, யுவராஜ் சிங் 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் வார்னர் 30 ரன்களை விளாசினார். 186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஆண்டர்சன் 41 ரன்களும், கருண் நாயர் 39 ரன்களும் எடுத்தனர். பின் வந்த கோரி ஆண்டர்சன், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ... Read More »

கடைசி நிமிடத்தில் பதிவான வெற்றி ; ஐபிஎல் நிலவரப்படி… 8 வெற்றி களுடன் மும்பை அணி முதலிடம்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மாலை நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்குக்கு பதிலாக கரண்ஷர்மா இடம் பிடித்தார். பெங்களூரு அணியில் சாமுவேல் பத்ரீ, சச்சின் பேபி, ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், மன்தீப்சிங், அனிகெட் சவுத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, மன்தீப்சிங் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் மெக்லெனஹான் ... Read More »

ஐபிஎல் எனக்கு கிடைத்த வரம் ; ஆப்கான் வீரர் ராஷித் பெருமிதம் …

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியில் ஆடி வருபவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான். 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ரஷித், தான் அதற்கு தகுதியானவன் என்பதை ஒவ்வொரு ஆட்டத்திலும் நிரூபித்து வருகிறார். ‘இந்த சின்ன வயசுல (ரஷித்தின் வயது 18) எனக்கு பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு ஐபிஎல். சீனியர் வீரர்களோட விளையாடியது நல்ல அனுபவம். எங்க டீமோட பவுலிங் கோச், முத்தையா முரளிதரன் எனக்கு நம்பிக்கையை விதைச்சுட்டே இருப்பார். அவரோட வார்த்தைகளால கடினமா பயிற்சியில ஈடுபட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைச்சது. ... Read More »

ஐ.பி.எல் – புனேவை வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ரன்களும் எடுத்தனர்.பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நரேன் 11 ... Read More »

ஐ.பி.எல்: ஐதராபாத் – பெங்களூர் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து

சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடக்க இருந்தது.பெங்களூரில் மழை பெய்து கொண்டிருந்ததால் முதலில் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத், டெல்லி அணிகளை வென்று இருந்தது. ஐதராபாத், புனே, மும்பை, பஞ்சாப், ... Read More »

ஐ.பி.எல். கிரிக்கெட்: சினம் கொண்ட புனேவிடம் தோற்றுப்போனது பெங்களூரு அணி …

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், புனே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17வது லீக் ஆட்டம் பெங்களூரில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் களம் இறங்கிய புனே அணி நிதானமான வேகத்தில் ரன்களைச் சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. திரிபாதி 31 ரன்களும், ரஹானே 30 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி, ... Read More »

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவரின் மகள் பெயர் இண்டியா !!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ். சிறுத்தையாக பாய்ந்து பீல்டிங் செய்வதில் வல்லவர். இதனால்தான் ஐபில்லில் மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மகள், இண்டியா. ரோட்ஸும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரேக் பாஸ்டின்போது சந்தித்தனர். அப்போது ஹர்பஜனின் குழந்தை ஹினயாவும் ரோட்ஸின் குழந்தை இண்டியாவும் சந்தித்துக்கொண்டனர். பிறகென்ன, அவர்கள் ஜாலியாக சிரிப்பால் பேசிக்கொண்டார்கள். இந்த க்யூட் குழந்தைகளை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் ஹர்பஜன். Read More »

ரஷித்தின் ரசிக்கும்படியான ஆட்டத்தால் …ஹைதராபாத் வெற்றி

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் வார்னர், ஐபிஎல்லில் அதிக அரைசதம் எடுத்து சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்தார். ஹைதராபாத் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்குமான கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்‌ எடுத்தது. அதிகபட்சமாக டிவைன் ஸ்மித் 37 ரன்களும், தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com