செவ்வாய்க்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியானது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அரை சதம் கடந்து ரன் சேர்க்க உதவினர். 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 310 ரன்களை இங்கிலாந்து குவித்திருந்தது. இலக்கை விரட்டிய நியூஸிலாந்து ... Read More »
விளையாட்டு
விராட் கோலி விருந்தில் மல்லையா ; லண்டனில் டான் டான் …
இங்கிலாந்தில் விராட் கோலியின் அறக்கட்டளை நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா பங்கேற்றது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கி களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா – ... Read More »
இந்தியா ஹெத்து …எதிர் டீமு டெத்து ; மண்ணை கவ்வியது பாகிஸ்தான் …
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஷிகர் தவான் 68 ரன்களிலும், ரோஹித் சர்மா 91 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி, யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ... Read More »
செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ….
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீடியோவில் ஜெயசூர்யாவுடன் இருப்பவர், மலீகா சிரிசேனா. இவர் இலங்கை நடிகை. ஜெயசூர்யாவின் முன்னாள் காதலி. ’இதைப் படம் எடுத்ததே ஜெயசூர்யாதான். அவர் திட்டமிட்டே இதை செய்திருக்கிறார்’ என்றும் இதை மலீகாதான் திட்டமிட்டு எடுத்துள்ளதாக ஜெயசூரியா தரப்பிலும் மாறி மாறிக் கூறுகின்றனர். இலங்கை கிரிக்கெட்டிலும் இந்த டேப் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ’இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஜெயசூர்யா உடனடியாகப் பதவி ... Read More »
சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலிதான் ; பயிற்சியாளர் பதவிக்கு பக்குவமானவரா ?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலிதான் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள். இந்தப் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், விண்ணப்பித்து இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் ... Read More »
சம்பியனை தேர்ந்தெடுக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டி ; கோலாகலமாக லண்டனில் இன்று தொடங்குகிறது
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில், ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். முதல் நாள் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய ... Read More »
‘டாப் 10 வீரர்கள்’ பட்டியலில் பின்தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ; வேதனையில் ஆழ்ந்துள்ள இரசிகர்கள்.
ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிக்கான முதல் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 852 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலியை தவிர்த்து மற்ற எந்த இந்திய வீரர்களும், முதல் 10 இடங்களுக்குள் இல்லை. ரோஹித் சர்மா 12-வது ... Read More »
ஸ்டெம்பிங்கின் கிங் தோனி ; கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஸ்டெம்பிட்
நியூசிலாந்து அணி வீரர் கிராந்தோமை, மகேந்திரசிங் தோனி ஸ்டம்ப் செய்து அவுட்டாக்கிய விதம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நேற்று எதிர்கொண்டது. இதில் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 116 ரன்கள் எடுத்திருந்த போது 23வது ஓவரை ஜடேஜா வீசினார். பேட் செய்த கிராந்தோம், பந்தை அடிப்பதற்காக கிரீசை விட்டு சற்று வெளியேறினார். அப்போது பந்து கையில் கிடைத்த மறுநொடியில் மிகவும் சாதாரணமாக விக்கெட் கீப்பர் தோனி ... Read More »
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடைபெறாது ; விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டம்
தீவிரவாதத்தைக் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுடன் 5 தொடர்களை நடத்துவதென, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், பி.சி.சி.ஐ.,க்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் எல்லையில் அத்துமீறல், தீவிரவாதிகள் ஊடுருவல் ஆகிய காரணங்களால் தொடரை நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுக்கவே, தற்போது இருநாட்டு வாரிய நிர்வாகிகளும் துபாயில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதை கண்டித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ... Read More »
நான் பேசநினைப்ப தெல்லாம் …தமிழ் வர்ணனையாளராக பரிணமிக்கும் பத்ரிநாத்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையாளராகப் பணியாற்ற இருக்கிறார் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடியவர் தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத். இப்போது அணியில் இடம்பெறாமல் இருக்கும் இவர், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை தமிழில் வர்ணனை செய்யப்போகிறார். இந்தப் போட்டி லண்டனில் வரும் 1-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தமிழிலும் போட்டியை வர்ணனை செய்ய இருக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ... Read More »