Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
விளையாட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 11
Tuesday , 16 August 2022
Home » விளையாட்டு (page 11)

விளையாட்டு

நீண்ட வருடத்திற்கு பிறகு கிரிக்கெட்டில் எழுந்த சர்ச்சை …

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச்பிக்ஸிங் செய்யப்பட்டதாக ரணதுங்கா கூறுவது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களான கவுதம் காம்பீர் மற்றும் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய காம்பீர், கிரிக்கெட் உலகின் முக்கியமான புள்ளியாகக் கருதப்படும் ரணதுங்கா இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல் எழுப்பக் கூடாது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் பொதுவெளியில் எடுத்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய ... Read More »

சோதனை தீரவில்லை…பயிற்சியாளர் யாருமில்லை ; பயிற்சியாளர்கள் தேர்வில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம் .

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து வெளியாகும் உண்மைக்கு மாறான தகவல்கள் தங்களை புண்படுத்தியிருப்பதாக சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது. தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வாரிய நிர்வாகி வினோத் ராய் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பந்துவீச்சு ஆலோசகராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களை வினோத் ராய்க்கு கடிதம் வாயிலாக அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள வினோத் ... Read More »

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராவாரா சேவாக் ?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி, அதிரடி வீரர் வீர்ந்திர ஷேவாக்குக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரைத் தேர்வு செய்து, சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, மும்பையில் நேற்று நேர்காணல் நடத்தியது. ரவிசாஸ்திரி, டாம் மூடி, லால்சந்த் ரஜ்புத், ரிச்சர்ட் ஆகியோர் ஸ்கைப் மூலம் நேர்காணலில் பங்கேற்றனர். லண்டனில் இருக்கும் சச்சினும் ஸ்கைப் மூலம் கலந்துகொண்டார். வீரேந்திர ஷேவாக் நேரடியாக நேர்காணலில் ... Read More »

தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள் …

ஒடிசாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கேரள வீரர் முகமது ... Read More »

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவு என்ன ?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய விவகாரத்துக்கு தீர்வு காணப்படாததால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்  புறக்கணிக்கப்பட்டுள்ளது . ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஊதியம் தொடர்பான வீரர்களின் கோரிக்கைகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாததால் புதிய ஒப்பந்தத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஊதியம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படும் வரை புதிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று வீரர்கள் அறிவித்துள்ளனர். இந்த அடிப்படையில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ... Read More »

சதத்துடன் வெற்றியை கொண்டாடும் கோஹ்லி ; வெற்றிக்கு இல்லை வேலி…

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் போட்டி, மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. நார்த் சவுண்டில் ((North Sound)) நடைபெற்ற 4ஆவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றிபெற்றதால், நேற்று தொடங்கிய 5ஆவது போட்டியில் இந்தியா வெற்றிபெற்று ... Read More »

மோதி விளையாடு …இந்திய அணி முந்தய ஆட்டங்களை விட சிறப்பாக விளையாடுமா ?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று மாலை நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பையை அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடாத ரஹானே, முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக், ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று ... Read More »

பாகிஸ்தான் வீரர் அசார் அலி இந்திய அணியின் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தது ஏன் ?

சமீபத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிபோட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலியின் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைஅசார் அலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த இந்த ஜாம்பவான்களுக்கு நன்றி என்றும், இதனால் தனது குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸின் மகனை ... Read More »

பாகிஸ்தானினை வீழ்த்த வங்கதேசத்துடனான ஆட்டம் ஒரு பயிற்சி …ரசிகர்கள் விமர்சனம் …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இன்று பிர்மிங்காம் நகரில் வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அண்டை நாடான வங்கதேசத்தை விட இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நிச்சயமில்லை. வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடுவது மெத்தனப் போக்காகவே இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பின்தங்கிய நிலையில் இருந்து வங்கதேச அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த ... Read More »

உடலால் காயம்பட்ட வாஹப் ரியாஸ் !! மனதாலும் காயப்பட்டார் …

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாஹாப் ரியாஸ், பிரபல வணிக இணையதளமான இ-பேயில் விற்பனைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், வஹாப் ரியாஸுக்கு விலையாக 610 ஆஸ்திரேலிய டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்பார்க்கப்படும் டெலிவரி டேட் என்ற இடத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 6 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு விளையாடிவரும் நிலையில், அந்நாட்டு ரசிகர்களிடையே இந்த விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com