இலங்கை சென்றுள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பற்றி பேசிய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘அதிரடியுடன் கூடிய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு, பீல்டிங்கில் இந்திய அணி வலுவாக இருக்கிறது. ஆனால் இலங்கை அணியில் கவலைக்குரிய அம்சங்கள் அதிகம் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விராத் கோலியின் கேப்டன்ஷிப்பை சோதித்து பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இன்னும் ... Read More »
விளையாட்டு
மித்தாலி ராஜுக்கு தெலங்கானா அரசு… வழங்கியது ஒரு கோடி பரிசு !!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக் கேப்டன் மிதாலி ராஜ்க்கு ஒரு கோடி ரூபாயும், வீட்டு மனையும் பரிசாக வழங்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேப்டன் மிதாலி ராஜை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இறுதிப்போட்டியில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய தெலுங்கானா முதல்வர், இந்திய அணிக் கேப்டன் மிதாலி ராஜ்க்கு ஒரு கோடி ரூபாயும், வீட்டு மனையும் ... Read More »
இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு…இனி கவலை எதற்கு ?
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இன்று சதமடித்தார். இது டெஸ்ட்டில் அவருக்கு 17-வது சதமாகும். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 600 ரன்களை குவித்தது. மூன்றாம் நாளான நேற்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல், இந்திய அணி ... Read More »
செஸ் விளையாட்டு சர்ச்சையில் கிக்கிக் கொண்ட கிரிக்கெட் பிரபலம் …
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப். இவர் சமூக வலைத்தளத்தில் தனது மகனுடன் செஸ் விளையாடுவது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் சிலர், செஸ் விளையாடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருந்தனர். செஸ், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் இந்த விளையாட்டு ஹராம் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து பலர் கைஃபுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரபரப்பானது. இதையடுத்து கடுப்பான முகமது கைஃப், ... Read More »
இந்தியாவின் கனவைத் தகர்த்த அன்யா ; ஆறு விக்கெட்டுகளை எடுத்து அசத்தல் …
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் அன்யா ஸ்ருப்சோல் 6 விக்கெட் எடுத்து இந்திய அணியின் கனவைத் தகர்த்தார். லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் என்ற நிலையில் வலுவாக இருந்த இந்திய அணி, கடைசி ... Read More »
6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை மிதாலி ; சாமுண்டீஸ்வர்நாத் பெருமிதம் …
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்-க்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசாக அளிக்க உள்ளதாக, ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் சாமுண்டீஸ்வர்நாத் தெரிவித்துள்ளார். இந்திய அணியில், கடந்த 17 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவரும் மிதாலியை கவுரவிக்கும் வகையில், காரை பரிசாக அளிப்பதாக அவர் கூறியுள்ளார். 34 வயதான மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.கடந்த 2007-ம் ... Read More »
ஹர்மன்பிரீத் கவுருக்கு டிஎஸ்பி பதவி வழங்க முடிவு …
இந்திய மகளி்ர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுருக்கு டிஎஸ்பி பணி வழங்கப்படுமென பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வீராங்கனைகள் கோப்பையை நழுவ விட்ட போதிலும் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்தப்போட்டிகளில் இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுரின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கூறும்போது, ’கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் காவல்துறையில் இணைய விரும்பினார் ஹர்மன்பிரீத் கவுர். விளையாட்டு வீரராக இருந்தும் ... Read More »
எனக்கு தெரிந்த உண்மை மிகவும் கசப்பானது ; வருத்தத்துடன் பத்ரிநாத் …
இந்திய கிரிக்கெட் அணியில் எனக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும் என்று தமிழக வீரர் பத்ரிநாத் கூறினார். தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளைஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் பத்ரிநாத். அவர் கூறும்போது, ‘வர இருக்கிற முதல் தர கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடவில்லை. அதற்காக ஓய்வுப் பெற போகிறேன் என்று அர்த்தமல்ல. எனக்கு வேறு சில வாய்ப்புகளும் வந்திருக்கிறது. ஆனால் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுகிறேன். மற்ற வாய்ப்புகள் குறித்து பிறகு முடிவு ... Read More »
பந்துவீச்சாளர்கள் புதிய வகையான யுக்திகளை கையாண்டு பந்துகளை மாற்றி வீச வேண்டும் ; க்ளென் மெக்ராத் அறிவுரை
இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளராக சாதித்துவிட்டால், உலகில் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் எம்.ஆர்.எப் பந்துவீச்சு பயிற்சி முகாம் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இடையே ஆன 25 ஆண்டு காலம் நிறைவு பெற்றதற்கான வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் கிளென் மெக்ராத், ரியான் ஹாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர், அவர்களது சேவையை பாராட்டி எம்.ஆர்.எப் சார்பாக பாராட்டு அளிக்கப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த க்ளென் மெக்ராத், கிரிக்கெட் ... Read More »
சாஸ்திரியின் சம்பள ஆதாயம் ; ரவிசாஸ்திரிக்கு 7 கோடியில் இருந்து ரூ.7.5 கோடியாக சம்பள உயர்வு …
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிசாஸ்திரிக்கு ரூ.7 கோடியில் இருந்து ரூ.7.5 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் ரவிசாஸ்திரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அணியின் உதவி பயிற்சியாளர்கள், ரவிசாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்து வருகிற 22-ம் தேதி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ரவிசாஸ்திரி மற்றும் அணியின் உதவி பயிற்சியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குவது என்பது குறித்து நிர்ணயிக்க, 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ... Read More »