Thursday , 19 September 2019
Home » விளையாட்டு

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.அணியின் எண்ணிக்கை 5 ஆக இருக்கும்போது பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடினார்.வார்னரும், பாண்டேவும் இணைந்து ... Read More »

டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தி£ 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா  104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.  இந்திய ... Read More »

மகளிர் டி20 உலக கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை  52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் 2 லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை வென்றது. கயானாவில் நேற்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர் கொண்டது. ... Read More »

நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ... Read More »

வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது தேவையற்றது

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையையும் கோலி (38 சதம்) தகர்த்து விடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இருவரது சாதனைகளையும் ஒப்பிட்டு நிறைய விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒரு வீரராக விராட் கோலியின் வளர்ச்சியை பார்த்தால், மிக பிரமாண்டமாக உள்ளது. அவரது ஆட்டத்தில் எப்போதுமே ... Read More »

ராஜ்கோட் டெஸ்ட் வலுவான நிலையில் இந்தியா

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய டெஸ்ட் அணியின் 293 வது வீரராக அறிமுகமாகியுள்ள பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் கப்ரியல் வீசிய ... Read More »

முதல் டெஸ்ட் – இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் பிருத்வி ஷா அறிமுகமாகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு கணுக்காலில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு ... Read More »

இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா!!

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ... Read More »

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ரபெல் நடால் சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 – 2 என எளிதில் கைப்பற்றினார்.இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் ... Read More »

டிஎன்பிஎல் 2018 – திண்டுக்கள் அணியை வீழ்த்தி மதுரை சாம்பியன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com