Friday , 20 April 2018
Home » இந்தியா

இந்தியா

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்

578702-delhi-commonwealth-games

காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் லேதர் ஸ்னேட்ச் பிரிவில் 136 கிலோ எடையையும். கிளியர் அண்ட் ஜெர்க் (clear and jerk) பிரிவில் 159 கிலோ எடையையும் தூக்கினார். இரண்டையும் சேர்த்து 295 கிலோ எடையை தூக்கிய தீபக் லேதர் 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் தொடரில் இதுவரை இந்தியா ... Read More »

2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு

2017_9$largeimg27_Wednesday_2017_185906874

தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்-க்கு 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது. தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 2017-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில், 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கான மாநில ஆலோசகர் வழங்கிய அந்த விருதை மிதாலியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். ... Read More »

10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…!

27826-ledndexuqh-1485919636

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித தேர்விற்கு மறு தேர்வு நடத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வின் போது, வினாத்தாள் வெளியான விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 12 -ம் வகுப்பு பொருளியல் தேர்வை வரும் 25-ம் தேதி மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல், 10 -ம் வகுப்பு கணித தேர்வை ஹரியானா மற்றும் டெல்லியில் மட்டும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதனை கண்டித்து 10 -ம் ... Read More »

“எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்

seeman4-24-1506253747

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உணர்வோடு தமிழக அரசு போராடுவதாக இருந்தால் மாணவர்களின் போராட்டத்தை ஏன் தடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லையென்றும், தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். Read More »

பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி

ms-dhoni1-13-1522686852-304566-khaskhabar

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அதில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ... Read More »

உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…

palace-1063473_1920

டேராடூனில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன், நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. மலைப்பிரதேசமான இங்கு, சமீப காலமாக குடியிருப்பு மற்றும் உணவகங்களின் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், மரங்களை அதிக அளவில் அழித்து கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால்,மண்சரிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். Read More »

டிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …

ramasami_1.png

முதலமைச்சர் பழனிச்சாமி  வருகைக்காக போக்குவரத்துக்கு இடையூறாக  அனுமதியின்றி பேனர்கள்  வைக்கப்பட்டதாக கூறி அவற்றை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மார்ச் 31-ந்தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக நகர் முழுவதும் அனுமதியின்றி பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வீட்டின் அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் இருப்பதை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அமைச்சர் வீட்டின் அருகேயுள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து பதாகைகளை எடுத்த ... Read More »

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மோடி ஆலோசனை …

modi

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த மத்திய அமைச்சர்களின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. தமிழகம் உட்பட 4 மாநிலங்களின் முக்கிய குடிநீர் ஆதார பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.அதன்படி, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீர் வழங்க உத்தவிட்டதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தையும் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. இந்தநிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பது ... Read More »

நீடிக்கிறது மக்களவை ஒத்திவைப்பு …

lok-sabha

எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மக்களவை வரும் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக எம்.பிக்கள் மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா எம்.பிக்களும் சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்று மக்களவை கூட்டம் தொடங்கியதில் இருந்து உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியபடி கடும் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை வரும் 2-ம் தேதி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதனிடையே அமளி தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ... Read More »

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்

tamil-farmer_810c263e-6c36-11e7-b16c-a4b2f1f7e553

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கி தீர்ப்பு அளித்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பலர் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மார்ச் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com